Monday, August 31, 2009

ஓர் விளம்பரம் குறித்து...

விளம்பரம் குறித்து எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் மிக நீண்டதொரு கட்டுரை எழுதியதை படித்தேன். சுவாரசியமான அவரது நய்யாண்டித்தனம் ரசிக்கும் படியாகயிருந்தது..
அதனைப் படித்த பிறகு, எனக்கு ஓர் விளம்பரத்தைக் குறித்த கருத்தை வெளிச்சொல்ல முனைகிறேன்....
கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் விளம்பரத்தை ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் பார்க்கிற பொழுதும் , ஓர் விவஸ்தை கெட்ட தனம் விளம்பரம் முழுக்க இருப்பதை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள் என்று அபிப்ராயிக்கிறேன்....
ஓடி ஆடி விளையாடுகிற குழந்தைகள் , தங்கள் உணவு முறைகளில் கோல்டு வின்னர் சேர்ந்து இருப்பதற்காக அப்படி ஆனந்தமாக குதூகலிப்பது அபத்தமாக இருக்கும்..
அதற்கு பதிலாக ரெண்டு நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள், எண்ணையின் அருமையை பகிர்ந்து கொண்டால் கூட ஓர் அர்த்தமிருக்கும்..
ஒருக்கால் அந்த விளம்பர உத்தி அவர்களது வியாபாரத்தை வேண்டுமானால் உயர்த்தியிருக்கலாம்..ஆனால் விவஸ்தை அடிப்படையில் ரொம்ப அநியாயம்...இல்லையா?

6 comments:

  1. கரெக்ட்தான் சுந்தர்ஜி!

    ஆனா குழந்தைகளை ஒருவிஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்ல வைச்சிட்டா, அது அதிகமான பேரைப் போய்ச் சேரும்கற கான்செப்ட்லதான் அப்படிப் பண்ணிருக்காங்க. ஜி ஃபார் ஹெச் என்று அந்த விளம்பரம் முடிந்தபிறகும் முணுமுணுக்கும் குழந்தைகளைப் பார்க்கிறோமே நாம்!

    ReplyDelete
  2. அண்ணே..

    செட்டிங்க்ஸ்>கமெண்ட்ஸ்> போய் Word Verification ஐ எடுத்துவிடுங்கண்ணே.. கமெண்ட் போட கஷ்டமா இருக்கும்..

    ReplyDelete
  3. ஆமா.. மேல SUNDARAVADIVELU,S BLOG ன்னு இருக்கே, கமா வருமா, ‘ வருமா? (sundaravadivelu's blog)

    ReplyDelete
  4. thanks, mr.parisalkaaran..
    ini naan endha suzhalil maattikkondaalum udhavikku ungalit thaan kooppidappogiren...

    ReplyDelete
  5. திருப்பூர் கோஸ்டி ஒன்னு உருவாகுது!

    ReplyDelete
  6. இரண்டரை மணிநேர திரைப்படங்களில்கூட லாஜிக் பார்க்கக்கூடாது என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள் 10 செகண்ட் விளம்பரத்திற்கு கவலைப்படுகிறீர்கள் :)
    ஆரோக்கிய சீர்கேட்டிற்கும்(இதய கோளாறுகள்), சாப்பாட்டு எண்ணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது என் புரிதல். எண்ணை அதிகமானால், சாப்பாட்டில் உப்பும் நிறைய சேர்க்க வேண்டும்.. உப்பினால்தான் வருகிறது பிரச்சினை.
    மற்றபடி, அழுகை தொடர்கள், ரியாலிட்டி ஷோ என்ற கூத்துக்களுக்கிடையே நம்மை மீட்பது, விளம்பரங்களே.. (குறிப்பு: எண்ணை விளம்பரங்களையெல்லாம் பார்த்தீர்களா.. காட்சியமைப்புகள், பாடல்கள் மிக நன்றாகயிருக்கிறது...உ.ம்: ரூபினி சமையல் எண்ணை(சிநேகா), கிங் நல்லெண்ணை,சக்தி சன்பிளவர் ஆயில், அப்புறம் நீங்கள் சொன்ன G4H :))

    நன்றி..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...