Saturday, August 8, 2009

மலரும் ஞாபகங்கள்...

அன்புள்ள யாவருக்கும்..

இளம் பிராய ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சுவாரஸ்யம் நிரம்பியவை...

சனிக்கிழமை சாயங்காலமே அடுத்த நாளுக்கான பட்டியல்களை மனசு போட்டிருக்கும். பட்டியலில் காட்டாயம் கிரிக்கெட் இருக்கும். புதிய ரிலீஸ் படங்கள் இருக்கும். அதிலும் கமல் ரஜினி படங்கள் அதீத போதை கொடுப்பவை. சினிமா இடைவேளைகளில் சில தியேட்டர்களின் போண்டா பஜ்ஜிகள் அந்த இள நாக்குகளுக்கு பேரின்பமளிப்பவை....

அது போக எங்கேனும் பக்கம்பாட்டில் மினி பிக்னிக் சென்று வருவதும் உண்டு சைக்கிள்களில்..ஞாயிறு சாயங்காலம் மனசுக்கு வேதனை அளிக்கத் துவங்கும்..திங்கட்கிழமை பள்ளிக்கூடம் என்பதே தாங்க முடியாத சோகத்தை மனசுக்குக் கொண்டு வந்து விடும்.

மறுபடி வியாழன் வெள்ளி நெருங்குகையில் , சனி ஞாயிறு குறித்த அற்புதங்களும் அதற்கான பட்டியல்களும் தயாராகத்துவங்கும்..

அவைகள் எல்லாம் விடுபட்ட இழைகள் அடையாளமற்று போய்விட்டன. இன்றைய வாழ்வியல் பிரச்சினைகள் கிழமைகள் குறித்த அனைத்த பிரக்ஞை களையும் இழக்கச்செய்து விட்டன என்றே அனுமானிக்கிறேன்.

2 comments:

  1. நல்ல எழுத்துக்கள்... ஒரு ப்ளாக் போதுமே?

    ReplyDelete
  2. "அவ" வீடு இருக்கிற தெருவுக்குப் போய் சைக்கிளில் மேலும் கீழும் உலாத்துகிற பிளான் ஞாயிற்றுக் கிழமைகளில் கிடையாதா?

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...