Tuesday, December 31, 2013

புத்தாண்டுகள்.

ழுவுகிற
ஒவ்வொரு
வருடமும்
தூண்டிலில் சிக்காத
மீன் போல..
அல்லது சிக்கி
பிற்பாடு
நழுவுவது போல..

1999 நழுவி
2000 வந்த போது
என்னவோ
அதீதமாகப் பட்டது..
அந்த வருடம்
பிரத்யேகமாக
எல்லாராலும்
வரவேற்ற சூழல்
இன்னும் ஞாபகத்தில்.. !!




காலங்கள் நெடுகிலும்
பிரவகிக்கிற  மாயைகள்..
டிசம்பர் 31 இரவின்
அந்தப் பிரத்யேக
உணர்வுகள் ...

என்றோ ஓர் பிராயத்தில்
பிரம்மாதப் பட்ட அந்த
லயம் இன்னும்
மனவெளியில்...

அன்றைய நமது லயத்தில்
இன்றும் உணர்ந்து
குதூகலிக்கிற
பதின் வயதினர்
சுவாரஸ்யங்களை
அடையாளம் காணாமலில்லை ..!

நம் போலவே
அவர்களும் எதுவுமற்ற
ஓர் வெறுமை ஜனவரி 1-ஐ
சந்திக்கிற தருணத்தை
தரிசிக்கிற காலம்
நமக்கு வரலாம்..

.அவர்கள் நடுவயதிலும்
நாம் மூப்பிலும்
தொங்கிக் கொண்டிருக்கிற
ஷணம் அது..!!

Tuesday, December 17, 2013

ஆண்மை .............[2 பக்கக் கதை ]

அந்த வீட்டின் முன் திருவிழா கும்பல் சூழ்ந்திருந்தது..
கத்துவதும் கதறுவதுமாக அல்லோல கல்லோலமாய் இருந்தது..
எனக்கும் இன்று சற்று ஓய்வு என்பதால் அந்தக் குழாமில் இணைந்து பட்டும் படாமலும் குசலம் விசாரிக்க ஓர் சபலம் குடையத் துவங்கிற்று..
அடுத்த ஷணம், அதனை செவ்வனே நிறைவேற்றி அந்த நாராசாரத்தினுள் நானிருந்தேன்..

"பிரச்னை என்ன?" என்று நான் தொடுத்த அறிவுப் பூர்வமான கேள்விக் கணைக்கு எந்தப் பண்ணாடைக்கும்  ஓர் தெளிந்த பதிலை சொல்கிற ஆற்றல் இல்லாதது கண்டு நான் கடுப்பானேன்..

"என்னமோ நைனா... கும்பலா கீதுன்னு நானும் வந்து இருபது நிமிஷத்துக்கு மேல ஆகுது.. பிரச்னை இன்னான்னு புடிபடவே இல்ல... "
இந்த பதில் கூட சற்று நேர்த்தியாகப் பட்டது..
புதிதாக நுழைந்தவர்கள் என்னிடம் "என்னா ஸார் ?" என்று வினவத் துவங்கிய போது தான் அந்தக் கேள்வியின் எரிச்சல் எனக்குப் புரிபட்டது..

சில நாறப் பயல்களின் வியர்வை நாற்றங்களும், பல்துலக்காத வாய் நாற்றங்களும் அந்தப் பிராந்தியத்தினின்று கழன்று வெளி வருவது தான் சாலச் சிறந்தது  என்கிற மகோன்னத சிந்தனை துளிர்த்த மாத்திரத்தில் தெறித்துப் போய்  விழுந்தேன் வெளியே..

இன்று ஓய்வு என்கிற சாவகாசத்தோடு சற்று முன்னர் தான் அற்புதமான ஓர் ஷாம்பூ  குளியல் எடுத்திருந்தேன்... இனி மறுபடி குளிக்க வேண்டும் போலுள்ளது..

அந்த சாயங்காலமே அந்த கும்பலின் பிரச்னைகளும் காரணங்களும் எனக்கு வந்தன.. அதாகப் பட்டது..
--தேசிங்கு ராஜன் மனைவி சிந்தாமணியை எவனோ அவளது நம்பரைத் தெரிந்து செல்போனில் கசுமாலமாகப் பேசி இருக்கிறான்.. இந்தப் பத்தினியோ, அதனை அவளது  வீர புருஷனிடம் பறைசாற்ற, அந்த புஜம் திரண்ட காளை ஒரு செமத்தியான ஐடியா கொடுத்திருக்கிறான்..
"அப்டியே ஜொள்ளு விடுற மாதிரி பேசி, நம்ம ஏரியாவுக்கு பயலை வர வச்சுடு.. அப்புறம் வந்ததும் டவுசரை கழட்டிடுவோம் .. இன்னான்ற ?" என்றதும் அவளும் ஆமோதித்து  பயலை வரவைத்து போட்டு பொரட்டி எடுத்திருக்கிறார்கள்..

பாவம் அவன் கெட்ட நேரம் .. இதென்னவோ ஊர்ல ஒலகத்துல நடக்காத சமாசாரம் மாதிரி போட்டு அந்த வாங்கு வாங்கிட்டாங்க.. அவனை அடிச்ச பசங்க அதுக்கு மேல  தப்பு தண்டா பண்றவங்க தான்னாலும் , என்னவோ ரொம்ப யோகியணுக  போல அந்த அப்ராணிய கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு, 108 ஐ வர வச்சு கொண்டு போற அளவுக்கு தாட்டிப் புட்டாக தாட்டி..

"நம்ம சிந்தாமணி கிட்ட எவனாச்சும் இனி வச்சுக்கிட்டேகன்னா பிச்சுப் போடுவான் இந்த தேசிங்கு.. ஆமா ன்னு மீசையை நெரவிக்கிட்டே  அவன் பேசுனதப் பார்த்தா  சும்மா ராஜ்கிரண் கணக்கா இருந்துச்சு "ன்னு சொன்னான் என்னோட எதிர் வீட்டு கணபதிசுப்பிரமணியம்..

'அடங்கொய்யாலே.. சான்சு கெடச்சா சிந்தாமணிய நானே கூட ஒரு கூட்டமில்லாத டுபாக்கூரு படத்துக்குகூட்டிட்டுப் போலாம்னு பிளான் போட்டிருந்தனே!' எனது  ஆண்மை அங்கலாய்த்தது...

                                                               [2]

அந்த சம்பவம் நடந்து முடிந்து ரெண்டல்லது மூன்று மாதங்கள் இருக்குமோ?..
அவ்வப்போது சிந்தாமணி கண்களால் என்னை வெட்டுகிறாள் என்றாலும், அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு பிற்பாடு, முன்னர் போல ஓர் நமட்டுச் சிரிப்பை நான் இப்போதெல்லாம் உதிர்ப்பதில்லை... 'எங்காவது நம்மையும் சிக்க விட்டு சிதிலப் படுத்திவிட்டால்?' என்கிற ஓர் அச்சுறுத்தல் மனதின் ஆழத்தில் வேரூன்றி விட்டது.. ஆகவே, எனது அற்ப சபலத்தை அவளிடம் விநியோகிக்கிற உத்தேசத்தை உதறித் தள்ளிவிட்டேன்..

இவ்ளோ பெரிய உலகத்தில் சிந்தாமணியை விட்டால் எத்தனை மணிகள் ஆட்டிக் கொண்டு கிடக்கிறதுகள் ??.. அதை டிங் டாங் என்று அடித்துவிட்டுப் போக வேண்டியது தானே..
நான் உதிர்க்காத சிரிப்பை அவள் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்ததாக எனக்கோர் அனுமானம், அவளது முகம் கண்டு.. ஆனால், நிச்சயம் ரகசியமாக எனது அந்த சிரிப்பை அவள் விரும்புகிறாள் என்பது ஊர்ஜிதமானால் சத்தியமாக சிரித்து வைத்து விட எனக்கொன்றும்  பிரச்னை இல்லை.. ஆனால் அதனை எப்படி ஊர்ஜிதப் படுத்துவது?..

டியூஷன் எடுக்கிற எனது மனைவியிடம் அவளது பையனோ பெண்ணோ படிக்க வருகிற சாக்கிலாவது எதையாவது அவளிடம் பேசிப் பார்க்கலாம். அதற்கும் வகையில்லாமல் அவளது குழந்தைகள் அவளது தாயினிடத்தில் வளர்வதாக தகவல்..
இதென்ன முறை என்று புரியவில்லை.. தான் பெற்ற குழந்தைகளோடு ஆனந்தமாக அளவாவிக்  கொண்டு இருக்காமல், எங்கேயோ எவரோ மேற்பார்வையில் வளர விட்டு, .... இப்படியும் சிலர் எதற்கோ இருக்கத்தான் செய்கிறார்கள்..

இப்படி சிந்தாமணி புராணம் பாடுகிற அளவு அவள் அப்டி ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால், அந்த சரும மடிப்புகளும் நெளிவு சுளிவுகளும் ஓர் இனம்புரியா வகையறா ரசாயனத்தை ராமனிலும் கூட பாய்ச்சக் கூடுமென்றே கூடுமானவரைக்கும் சொல்லிவிட முடியும்..

பிறகு...
அந்த முதல் பத்தியின் துவக்க சம்பவம் நடைபெற்று இன்று ஆறேழு மாதங்கள் ஆகி இருக்குமோ?.. இருக்கலாம்..

மறுபடி ஒரு சனிக்கிழமையின்  காலை பத்துமணி வாக்கில் அதே விதமான திருவிழா கூட்டத்தை அங்கே கண்டு அதிர்ந்தேன்..
'இப்ப எந்த மடையன்டா மாட்டினான்?' என்று குடைய ஆரம்பித்தது மண்டை..
'இவுளுக்கும் புருஷனுக்கும் வேற பொழப்பே இல்லையா?.. பாவம், அப்பாவிங்களைப் போட்டு இந்தத் தெராட்டு வாங்கறாங்களே?.. என்று என்னையும் அறியாமல் எனது உதடுகள் பிதற்றத் துவங்கிவிட்டன..

'இந்த விஷயத்தை இப்படி தூண்டில் போட்டு போட்டு ஒவ்வொரு மனுஷனையும் தர்மடி கொடுக்கறதுக்குப் பதிலா, ஒரு ஓரமா சைடு லாக் பண்ணாத மொபெட்டை நிறுத்தி  மறஞ்சிருந்து கவனிச்சு .. அதை திருட வர்றவனை லபக்குன்னு புடிச்சு ஒரு பொது மாத்து போட்டு சாவகாசமா  போலீஸ் கைல ஒப்படச்சா கூட அதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா, எல்லாருக்கும் இயல்பான இந்த விஷயத்தை மையமா வச்சு அவனுக மானம் மரியாதையை வாங்கறது  இல்லாம கை கால் ஒடஞ்சு போற மாதிரி அடிக்கறதுங்கறது.., வன்மையாகக் கண்டிக்க வேண்டிய தந்திரம்..  !

சரி, இதையும் தான் பக்கம் போயி பார்த்துட்டு வருவோம்னு போனாக்கா..

அடங்கொய்யாலே.. விஷயமே வேற..
மூக்கச் சிந்திப் போட்டுட்டு அண்டர்வேரு தெரியற மாதிரி லுங்கிய ஒரு டப்பா கட்டு கட்டிக்கிட்டு மூலையில ஒக்காந்து பொட்டச்சி மாதிரி ஒப்பாரி வச்சுட்டு இருந்தான் தேசிங்கு..
"நா என்னடி கொற வச்சேன் சிந்தா.. இப்டி தனியா மச்சான  தவிக்க வுட்டுட்டு போயிட்டியே!"
ஒப்பாரியப் பார்த்தா என்னவோ பொண்டாட்டி செத்து நடு வீட்ல படுக்க வச்சிருக்கற மாதிரி தெரிஞ்சிது..

அப்பால தான் விஷயம் புரிஞ்சுது, நம்ம கோதண்டராமனோட பையன் லட்சுமிகாந்தன் சொல்லி..
"போன வாரம் எதுக்கால ஒருத்தன் பாச்சலர்னு சொல்லி குடி வந்திருக்கான். பயல் ஏதோ தனியார் வங்கியில அக்கவுண்டண்டு ன்னு புருடா விட்டுருக்கான்.. நம்ம தேசிங்கும் வெள்ளந்தியா பொண்டாட்டிய வுட்டே சோறு பரிமாறச் சொல்லி அனுப்பி இருக்காரு.. ஒரே வாரத்துல அவன் என்ன மருந்து  வச்சானோ, லபக்குன்னு அள்ளிக்கினு எங்க போனாங்கன்னே தெரியலை.. ''

என்னுடைய ஆண்மை மீது எனக்கு ஓர் கேவலமான பார்வை விழத் துவங்கிற்று ஏனோ உடனடியாக.. !!


                                                                 

Saturday, December 7, 2013

காமம்... செக்ஸ் .. புணர்ச்சி..

காமம் குறித்தான விஷயங்களை அலசி ஏதேனும் எழுதுகையில், அதற்கான தலைப்பை சற்றே கவர்ச்சியாக வைக்கையில் உடனே அது எல்லாரையும் கவரும் விதமாக அமைந்து "படித்தவர்கள்" பட்டியல் மிக நீண்டு விடுகின்றன..
ஆனால் சத்தான சாரமான விஷயமாக இருப்பினும் அதனை உருப்படியான தலைப்பற்று வெறுமே ஓர் மனதில் ஒட்டாத தலைப்பாக கொடுக்கிற பட்சத்தில், சீந்த ஆளில்லாமல் போகிறது ..

நான் இந்த பிளாக் எழுதுகிற ஓர் விஷயத்தை மட்டும் மையமாக வைத்து இந்தக் கருத்தை சொல்லவில்லை.. எல்லா ஊடகங்களிலும் இதே கதி தான் நேர்கிறது..

பிரபல இந்தியா டுடே கூட இதைத்தான் அவ்வப்போது செவ்வனே செய்துகொண்டு வருகிறது.. செக்ஸ் சர்வே என்கிற ஓர் பிரம்மாத தலைப்போடு வெளிவருகிறது.. அதற்கான விளம்பரங்கள் பல மாதங்கள் முன்னரே பிரபலமாகி விடுகிறது.. சொல்லப் போனால், அந்த இஷ்யூவை கடைகளில் காசு கொடுத்து மாத்திரமே வாங்கமுடியும்.. வழக்கமாக ரெஜிஸ்டர் போஸ்டில் வருகிற இதழ் நிச்சயம் மிஸ் ஆகிவிடும்.. போஸ்ட் மேனைக்  கேட்டால் ஏதேனும் ஜவாப் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்..

இப்படியாக, அந்த மனிதப் புணர்தல் ஓர் பிரத்யேக முக்கியத்துவம் பெறுவது இன்று நேற்றல்ல.., தொன்று தொட்டு நிகழும் ஓர் ஜொள் பிரளயம்.. 

காமம் ஓர் அலுக்காத கவிதை போல  மனிதனின் நிறைவுக் காலம் வரைக்கும் அவனைப் பற்றிக் கொண்டும், படர்ந்து கொண்டும் ஊடுருவி வழி நடத்துகிறதெனில் அது மிகையன்று..

காமம் மலரினும் மெல்லிய விஷயம் தான்.. ஆனால், அது இந்த சமூகத்தில்  பரவிக் கிடக்கிற விதம்  தான் அபத்தமானது.. கட்டிய மனைவியோடு பத்து செகண்ட் பேசவே சலிப்பைக் காண்பிக்கிற புருஷர்களும், கணவர்களிடம் தக்காளி தேங்காய்  மட்டுமே வாங்க சொல்லி விட்டு மேற்கொண்டு பேசுகிற
யோக்யதையே இல்லை என்பது போல உடனே துண்டித்து விடுகிற பத்தினிகளும்... கள்ளப் புருஷர்களோடும் கள்ளக் காதலிகளோடும் மாத்திரம் மணிக் கணக்கானது  நொடிகளாக நழுவுவது போன்ற லாவகத்தோடு பேசித் தீர்ப்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை..

உலகின் எல்லாப் பிராந்தியங்களிலும் இதே கள்ளக் கதைகள் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை... அரற்றித் தான் என்ன பயன்?

இதனிடையே ராமர்களும் சீதைகளும் இல்லாமல் இல்லை.. ஆனால், ராவணர்கள் பெருவாரியாக விரவிக் கிடக்கிற இந்த சாக்கடையில் --அவர்கள் அடையாளப் படாமல் இருக்கிறார்கள்.. அல்லது தாமரை என, தாமரை இலை என ஜொலித்துக் .கொண்டிருக்கிறார்கள்.

ஓர் தேர்ந்த சினிமா விமரிசனம் போல, இந்தக் காமம் குறித்து தர்க்க ரீதியான  விமரிசனங்கள் மிகவும் அவசியம்.. சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற விதமாக இந்த ஒழுங்கீனத்தை நாம் பதிவிறக்கம் செய்வது அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.. நான் ஓர் சிறிய வட்டத்துக்ககுள்ளாக இருந்து கொண்டு இத்தப்  பெரிய விஷயத்தை வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக முன்வைப்பது  எனது அவசரமும் அதிகப் பிரசங்கமும்  ஆகக் கூடும்.. 

Tuesday, December 3, 2013

பேஸ் புக்கில் ஒருவர்.....


பேஸ் புக்கில் ஒருவர் பதிவிறக்கம் செய்திருந்த பழமொழி.. இந்த ஓர் கருத்தினை எவர் தெரிவித்திருந்தாலும் அதற்காக நாம் நன்றி நவில்வோம்.. வாழ்க்கை நெடுக அச்சுறுத்தல்களும் தர்மசங்கடங்களும் வியாபித்துள்ள இந்தக் கால கட்டத்திலே, மனசை சற்றே லேசாக்குவது போன்ற பொன்மொழிகள் மனிதனுக்கு மிகப் பெரிய டானிக்.. 

பீதிகளும் வேதனைகளும் சதா ஈக்கள் போல நம் மனதை மொய்த்த வண்ணமே உள்ளதாயினும், அவைகளினின்று கழன்று ஓர் புத்துலகம் தரிசிக்க முயல்வது நமது அனைவரின் தலையாய கடமையாகும்.. !!

எல்லா சலுகைகளையும் எல்லா வசதி வாய்ப்புகளையும் சிலருக்கு ஆண்டவன் சுலபமாக நியமித்துவிடுகிறான்.. அல்லது அவைகளை நியமித்தது ஆண்டவன் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.. அல்லல்கள் அனுபவிக்கிற சிலருக்கும் அதனை நியமித்தது கடவுள் என்றே கூண்டில் நிறுத்த முயல்கிறோம்..!

இப்படி நமது அற்ப பிரச்னைகளுக்கெல்லாம் காரணகர்த்தா ஆண்டவனே என்று தீர்மானமாக சொல்வது ஆன்மீகப் பண்பாகுமா?.. ஆத்திகவாதியின் தர்மமாகுமா?.. இவர்களோடு ஒப்பிடுகையில் கடவுளை நம்பாத நாத்திகவாதி உயர்வானவனாகப் புரிகிறான் ..

Monday, December 2, 2013

காதலை..!!

எனது கனவுகளை
சூறையாடி விட்டாய்.. 
எனது கவிதைகளைக் 
கசக்கி எறிந்து விட்டாய்.. 

எனது ரசனைகளைக் 
காயப் படுத்திவிட்டாய்.. 
எனது நம்பிக்கைகளை 
நாசமாக்கி விட்டாய்.. 

என்னையும் எனது 
மன உணர்வுகளையும் 
துவம்சம் செய்வதில் 
அப்படி என்ன சுவாரஸ்யம் 
உமக்குப் பெண்ணே?

இத்தனை செய்து விட்ட 
உன்னால் ஒன்றை மாத்திரம் 
ஒன்றுமே செய்ய முடியவில்லை.. 
உன் மீதான எனது காதலை..!!

Saturday, November 30, 2013

.எங்கிருந்தோ சுட்டது.. ஹிஹி ஜோக்... .

தமிழில் எப்படி சிலவற்றை நாசுக்காக சொல்லி ஹாஸ்யம் ஏற்படுத்த முடியுமோ அதே நய்யாண்டித் தனத்தை ஆங்கிலத்திலும் சொல்லி அசத்த முடியும் என்பதற்கு உதாரணம் பின்வருகிற ஓர் ஜோக் ...


Six Golden Rules


Six Golden Rules For F***ing

1. F***ing once a week is good for your health but harmful if done every day.

2. F***ing gives proper relaxation for your mind and body.

3. F***ing refreshes you.

4. After f***ing don't eat too much; go for more liquids.

5. When f***ing try to stay in bed because it can save you valuable energy.

6. F***ing can even reduce your cholesterol level..................

.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
SO REMEMBER - *FASTING* is good for your health - may The Almighty cleanse your Dirty Mind!
இது எப்டி இருக்கு??.. 

Wednesday, November 27, 2013

என்னாங்கறீங்க??

முன்னரெல்லாம் அடிக்கடி கண்களில் தென்படுகிற நபர், சமீப காலமாக முகாந்திரமே அற்றுப் போய் விடுகையில், சர்வ சாதாரணமாக எல்லாருக்கும் தோன்றுகிற விஷயம் "அன்னார் மறைந்து விட்டார் போலும்!"..

சில வாரங்கள் கழித்தோ அல்லது மாதங்கள் வருடங்கள் கழித்தோ கூட அதே நபர் மறுபடி கண்களில் பட நேர்கையில் .. "அடடே. நமது அனுமானம் தவறு" என்று புரிய வரும்.. அப்படி மறுபடி அவரை பார்க்க நேர்கையில் என்னவோ அந்த நபர் மறுபிறவி எடுத்து வந்தது போல நமக்குத் தோன்றும்.. [?].. 

இவ்வித நிகழ்வுகள் அநேகமாக எல்லாருக்குமே நேர்ந்த ஒன்றாக இருக்கலாம். 

ஆனால் இன்னும் சிலரையோ அன்றாடம் பார்க்க நேரும்... அவரைப் பார்த்து விஷ் பண்ணுவோம்.. அவரும் பதில் விஷ் செய்வார்.. அப்புறம் அடுத்த நாளே, அவருக்குக் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கும்.. 

அது மனசுக்கு ஓர் தாங்கொணா சங்கடத்தை அளிக்கும்.. 

--இந்தப் பிரபஞ்ச ஆயுளின் ஓர் புலப்படாத தூசி தான் நமது ஆயுள்.. என்ற போதிலும், வாழ்கிற கிஞ்சிற்று நாட்களிலேயே இந்தப் பிரபஞ்சம் அழியப் போகிறது  என்று புருடா விடத் துணிகிறோம்.. 

அப்புறம் அந்த வதந்தியை பிரபஞ்சம் உண்மையாக்கி விடுகிறது. அதைப் பார்க்க நாமில்லாமல் மறைந்து விடுகிறோம்.. 

Wednesday, November 20, 2013

கடி

பொழுது சாய்கையில் 
திரள்கிற கொசுக்களுக்கு 
அளவேது??
அதுவும் அந்தப் 
பூங்கா பச்சைக்கு 
பிரத்யேகமாக 
இம்சிக்கத் துவங்கும்.. 

தனியாக 
அமர்ந்திருப்பவர்களை 
நெளிய வைத்து 
நெளிய வைத்துக் 
கடித்தன.. 

தம்பதி சகிதமாக 
அமர்ந்திருந்தவர்களை 
ஓரளவு துன்புறுத்தின..            

காதலிகளுக்குக் 
காத்திருந்த ஆண்களையும் 
காதலர்களுக்குக் 
காத்திருந்த பெண்களையும் 
கடிக்காமல் கடித்தன.. 

காதல் ஜோடிகளை
சுத்தமாகக் கடிக்கவே
இல்லை கொசுக்கள்...

[பாரபட்சம் பாராது எல்லாரையும் ஒரே மாதிரி கடித்துத் தான் ரத்தம் உறிஞ்சின கொசுக்கள்... ஆனால், அந்தந்த சூழலில் அவர்கள் உணர்ந்த விதங்களைத் தான்  கவிதைப் படுத்த முனைந்துள்ளேன்.. ]

Tuesday, November 19, 2013

என்னாங்கறீங்க??

இந்த சச்சின், ar.ரஹ்மான் விஸ்வநாதன் ஆனந்த், இவிகளை எல்லாம் பாக்கறபோது, நாமெல்லாம் என்னடா பொறப்புன்னு ஒரு வெறுப்பு சும்மா குபீர்னு பீர் மாதிரி பொங்குது..
பிரம்மன் செஞ்ச மெகா நயவஞ்சகம் போல மனசுக்குத் தோன்றது சரியா தப்பா?
மனுஷனுக்கு மனுஷன் தான் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கறதா கேள்விப் பட்டிருக்கேன்.. ஆனா, இந்தப் பொறப்பு சமாச்சாரத்தை யோசிக்கிறப்ப சாமியே அந்தத் தப்பை செஞ்சிட்டுதோன்னு ஒரு உத்தரவாதமில்லாத சந்தேகம் எட்டி எட்டி ஒதைக்குது..

சரி உடுங்கோ.. நாமுளும் கழுதை அதே மாதிரி முயற்சி செஞ்சா சாதிக்கவா முடியாது., அவுங்கள மாதிரியே தானே ரெண்டு கண்ணு காலு கையோட பொறந்திருக்கோம்.. ன்னு எதையாவது கிறுக்குப் பயபுள்ள இருக்கற கொஞ்ச மானமும் காத்துல போற மாதிரி செஞ்சு நாசமாப் போறதுக்கு, நமக்கு வர்ற நாலு விஷயத்தை செஞ்சு காயற வயத்துக்குக் கஞ்சி  ஊத்திக்கிறது உத்தமமடா ராசா..   என்னாங்கறீங்க??

  

Tuesday, November 5, 2013

புருஷன் பொண்டாட்டி ஜோக்... எங்கிருந்தோ சுட்டது..

Wife and Husband Joke
Husband: Can I hug you?

wife: No!

Husband: I will buy you jewelry! ...

wife: No!

Husband: I will buy you a car!

Wife: Still NO.

Husband: I will take you to world trip.

wife: Still NO.

After listening all this, their kid woke up and said, "Daddy! u can kiss me, but just buy me a bicycle please"



After A Fight...



Wife to Husband: I was Mad, Fool and Rubbish that I married you



Husband Said: Yes dear but I was in love, I didn't notice

உயிர் பெறும் மழைத்துளிகள்.....

உன்னைக் காதலிக்க முயன்ற ஓர் மழை நாளில்...

உன்னை நனைக்கிற
மழையின் புன்னகையும்
என்னை நனைக்கிற
மழையின் அழுகையும்
-பரஸ்பரம்
ஆனந்தங்களையும்
ஆதங்கங்களையும்
மௌனமாகப் பரிமாறிக்
கொள்வதை...
எனது இதயம்
மாத்திரமே உணரக் கூடும்?..!

சபிக்கப் பட்ட துளிகளாக
என் மீது விழுந்து
தெறிக்கிறது மழை..

உன் மீதான துளிகளோ
தெறித்து விடப் பிடிக்காமல்
உன்னில் ஊடுருவப்
பிரயத்தனிக்கிறது ....!!

சாக்கடையில் விழுந்திருந்தால்
கூட அப்படி முகம் சுளித்திருக்குமோ
தெரியாது....
என்னை நனைத்து
கடுந்துயர் கண்டது மழை...

உனது அருகாமையில்
விழுந்து உன்னை
ஸ்பரிசிப்பதைத் தவற விட்ட
ஏமாற்றத்தோடு
சாலையில் தவழ்கிற துளிகள்..

உன் தலையில் விழுந்து
கர்வப் பட்ட இறுமாப்புத் துளிகள்..

உன் கழுத்தில் விழுந்து
மார்பினுள் புகுந்து கொண்ட
இங்கிதமற்ற துளிகள்....!!

-மற்றுமொரு மழை நாளில்..

நானும் நீயும்
ஒரே குடைக்குள்ளிருந்தோம் ...!

துளிகள்
நம் கால்களைப் பற்றிக்
கொண்டு கதறின...!!
.Square Abstract Couple With Umbrella Oil Paint Effect canvas wall printed on to a canvas which would be a great edition to any home.    Size : (W30cm X H30cm) X 1

Thursday, October 24, 2013

தேங்கா பால் ..

சட்னிக்கு
உடைக்கப் பட்ட
தேங்காய்
இள நீர்ப்
பதத்தில்
பருப்பு இளைத்துக்
காணப்பட்டது..

தெருப் பிள்ளையார்க்குப்
போட்ட ஈடு காய்
பருத்த பருப்போடு
இனித்த சுவையில்
மண்ணில் சிதறி
உருண்டோடிற்று...

கடந்து செல்கிற
வாகனங்களால்
கசங்கி நசுங்கி
மண்ணோடு மண்ணாயிற்று.. !

சற்று முன்னர்
கறக்கப் பட்ட
மாட்டின் பால்
பாலபிஷேகமாக
கற்சிலை மீது
குடம் குடமாக ...

பசிக்கு வீறிடுகிற
குழந்தைக்கான பால்
பாக்கெட்டில் அடைந்து
கிடக்கிறது..
அதுவும் மாடு கறந்ததா
பவுடரில் பிறந்ததா??


Tuesday, October 15, 2013

ஓர் சிறு அபிப்ராயம்...

உயர்ந்த ஓர் தன்மையை சக மனிதர்களிடத்து பிரகடனப் படுத்திய வண்ணமே இருத்தல் மனசுக்கும் உடலுக்கும் மிக ஆரோக்யமான விஷயங்களாகப் புரிபடுகிறது.. 
எல்லாரும் நம்மையும் நமது நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கிற விதத்தில் நம்முடைய பழக்கங்கள் மிகவும் உன்னதமான ஓர் செறிவை கொண்டிருக்க வேண்டுமாக கண்களுக்குப் புலனாகாத ஓர் அசரீரியிடம் மன்றாடுகிறது அன்றாடம் மெளனமாக நம் மனது.. !!

நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலன்களைத் தாண்டி பிறவற்றைக் குறித்த பிற மனிதர்களைக் குறித்த பிரக்ஞைகள் நிரம்பி வழிதல் - நம்மை ஓர் மகத்தான பிறப்பாக இந்த சமூகம் அடையாளம் கொள்வதற்கான வழி...
நாம் பிரம்மாதமாக எல்லாருக்கும் புரிபட வேண்டுமென்கிற எவ்வித கொள்கைகளோ லட்சியங்களோ அற்று யதார்த்தமாகவே மென்மையான தன்மைகளோடு விளங்க வேண்டும்.. 

இவ்விதமாகவெல்லாம் வார்த்தைகள் கோர்த்து வெளிப் படுத்தத் தெரியாமல், செயல்ரீதியாகவே மேற்சொன்ன தன்மைகளோடு இயல்பாக இருக்கிற நபர்களை நான் அடையாளம் கண்டு வியந்திருக்கிறேன்.. 
நானெல்லாம் கூட, இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்கிற அவாவில் மாத்திரமே உள்ளேனே தவிர, நடைமுறையில் பல குளறுபடிகளோடும் அனாவசிய சூட்சுமங்களோடும் என் காலம் பயணித்த வண்ணம் உள்ளதே அன்றி, மேற்சொன்ன எந்த மெல்லிய தன்மைகளிலும் எனது நடவடிக்கைகள் இல்லை, அல்லது சொன்னவைகளில் சொற்ப சதவிகிதமே நான் அவ்விதம் என்பதை உத்திரவாதமாக என்னால் சொல்லமுடியும்.. 

இறுமாப்புகளும் அகந்தைகளும் இதயத்தை சீரழிப்பதாக அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு அறிவுறித்தினாலும் நாம் அநேகம் பேர்கள் அவைகளினின்று கழன்று ஓர் சாத்வீக வாழ்வினை அனுசரிக்கிறோமா என்பது "மெகா சைஸ் " கேள்வி தான்.. 


குறைந்த பட்சம் மேம்பாடு அடைகிற நோக்கிலேனும் இவ்வாழ்வினை செலுத்துகிற பிரயத்தனம் நம்வசம் வேண்டுமேயன்றி ... உயர்ந்த விஷயங்களில் கொஞ்சமும் லயிப்பற்று சோபையற்று இருப்பது அற்பத்தனமல்லவா??

Friday, October 11, 2013

காலச்சிதறல்கள்..


மழைக்காலம் 
தவறிய மழை.. 
ஆனால் அன்றாடம் 
அதற்கான அறிவிப்பை 
தூரத்து இடி முழக்கமாக 
பிதற்றி 
எல்லாரையும் ஓர் 
குழப்ப அனுமானத்தில் 
தவிக்க விட்டு 
நகர்ந்து விடுகின்றன 
மழைக்கான மேகங்கள்.. 
இங்கே தான் 
பொழியப் போவது போல 
பாவனை காட்டிவிட்டு 
எங்கோ போய் 
கொட்டி விடுகிறது.. 

நெற்றியில் 
கைகளை வெட்டி 
புருவந்தூக்கி 
வானத்தை அலசுகிற 
பெரிசுகள் 
'மழை உறுதி'
என்று தீர்க்கதரிசனமாகப் 
பேசுவது 
நக்கலாகி விடுகிறது 
பேரன் பேத்திகளிடம்.. 

ஆகவே இனி 
சொட்டச்சொட்ட 
நனைந்தாலும் 
மழை வந்து விட்டதாகக் 
கூட சொல்கிற 
உத்தேசமில்லை அவர்களுக்கு..!

சித்திரையில் 
பனிப் பொழிவையும் 
ஆடியில் அடைமழையையும் 
ஐப்பசியில் கடும் வெயிலையும் 
இப்போதெல்லாம் 
எவரும் ஆச்சர்யமாகப் 
பேசுவதில்லை.. !!

Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. cinema review

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்தேன்.. விகடனில் 51 மார்க் கொடுத்ததைப் பார்த்து.. 
விகடன் ஐம்பது மார்க் கொடுத்து கமெர்ஷியலாகவும் ஹிட் ஆனவை பாலச்சந்தர் படங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.. 
இப்போது ஐம்பது மதிப்பெண்கள் பெறுகிற அனேக படங்கள் விமரிசனம் விகடனில் வெளி வருவதற்கு முன்னரே அரங்கை காலி செய்து விடுகின்றன... 
ஓநாயும் கிட்டத் தட்ட அதே நிலைமையில் இருப்பது போல தான் பட்டது.. தியேட்டர் மொத்தமும் முப்பது பேர்கள் இருந்தால் அதிகம்.. 
Onayum Aatukuttiyum Movie Photos - Image 35 of 35
நிஜமாகவே படம் அந்த மதிப்பெண் பெறுகிற தகுதியில் தான் உள்ளது.. 
மிஷ்கினின் இந்த அபாரத் துணிச்சல் போற்றத் தக்கதே.. சொந்தக் கதையோ, பிற மொழித் தழுவலோ எதுவாயினும் தமிழுக்கு இவ்வித insertion தேவை என்றே தோன்றுகிறது.. 

குத்துப் பாடல்களும் அறிவு கெட்ட கானா பாடல்களும் வார்த்தைகள் புரிபடாத கதறல் பாடல்களுமே கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்திலே எவ்வித அதிர்வேட்டுப் பாடல்களோ ஆடம்பர நளின நடனங்களோ இல்லாதது இதமாக இருந்தது.. 

படம் நெடுக ஓடுவதும் துரத்துவதும் துரத்தப் படுவதுமாகவே நீள்கிறது.. அதனூடே நிகழ்கிற சம்பவங்களும் சங்கடங்களும் இருக்கையின் நுனிக்கே நம் குண்டிகளைக் கொணர்ந்து விடுகின்றன.. 

இசைஞானியின் அந்த மேற்கத்திய பாணி மெல்லிசை மனதைப் பிசைவதும், கண்களில் கசிவதும் .. வார்த்தைகளுக்குப் பிடிபடா உணர்வுகள் அவை.. 

அந்த இருட்டும் வீதி விளக்கு வெளிச்சங்களும் மிஷ்கினின் நேசத்துக்குரிய காட்சி அமைப்புகளோ..? உலகத்தில் சூரியன் மற்றும் பகல் என்று எதுவுமே இல்லை என்கிற விதமாக ஓர் குளிர்ந்த சீதோஷ்ணத்தை மையப் படுத்தி நம்மையெல்லாம் குளிர்வித்துத் திணறடிக்கிறார்.. 

இன்னும் எவ்வளவோ சொல்லியாக வேண்டும் இந்தப் படம் குறித்து.. ஆனால் விமரிசிப்பில் கைதேர்ந்தவர்கள் எழுதிய பல விமரிசனங்களை இந்தப் படம் குறித்து எல்லோரும் படிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.. 

என்னுடைய கத்துக் குட்டி விமரிசனம் எவரையும் நிச்சயம் நிறைவடைய செய்யாது என்பதை நான் நன்கறிவேன்.. ஏனெனில், ஆழ்ந்த பல விஷயங்களை என் அவசர மனம் register  செய்யத் தவறி இருக்கக் கூடும்.. நீங்களும் அவ்விதமே இல்லாமல் சற்று சுலபத்தில் உள்வாங்குகிற திராணியோடு இருக்கக் கூடும்.. தயை செய்து திரை அரங்கு சென்று பாருங்கள்.. என்ன நல்ல ப்ரிண்ட் ஆனாலும் dvd யில் பார்ப்பதைத் தவிர்ப்பது -அதுவும் குறிப்பாக இந்த மாதிரிப் படங்களையாவது-- நமது மனித நாகரீகத்தை நிச்சயம் மேலும் மேம்படுத்தும்.. நன்றி..

Wednesday, October 2, 2013

ராஜா ராணி --- சினிமா விமரிசனம்..

ராஜா ராணி .. பார்த்தேன்!
மவுன ராகத்தை இன்னும் கொஞ்சம் ஜிலேபி பவுடர் கேசரி பவுடர் எல்லாம் கலந்து அரைத்திருப்பது டவுசர் பையனுக்கும் புரியும்.. 

இந்தக் கரண்ட் ட்ரெண்டுக்கான எல்லா உல்டா லக்கிடி வேலைகளையும் சளைக்காமல் செவ்வனே செய்திருப்பது பாராட்ட உகந்த செயலா, கண்டனத்திற்கு உட்பட்ட செயலா என்பது குழப்பமெனிலும்--நமக்கென்ன பாஸ்.. டைம் நல்லா பாஸ் ஆச்சு.. அதானே முக்கியம்?.. 
கண்டனம் தெரிவிப்பது, நஷ்ட ஈடு கேட்பது இதெல்லாம் நம்ம மணிரத்னத்தோட பிசினஸ்.. 

இப்பத்தான் சமீபத்துல கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு நம்ம பாகியராஜ் படா பேஜாராகி அழாத கொறையா சிரிச்சுட்டே பேட்டி எல்லாம் கொடுத்திட்டு இருந்தாரு.. அவுருக்கும் பாவம் இப்ப டைம் பாஸ் ஆறதுக்கு இது கொஞ்சம் சூடா இருந்திச்சு.. 

மணியும் இப்ப அதே மாதிரி பிரீயா தான் இருப்பாருன்னு நினைக்கிறேன்.... அட்லி.. கொஞ்சம் அலேர்டா இருந்துக்கறது உசிதம்.. 
படம் சும்மா ஹாஸ்ய ரசம் போட்டு வழிந்த வண்ணமே இருப்பது ஓர் தனி மெருகு என்றால்.. நயன்தாராவின் நடிப்பும் அந்த இரண்டாம் நாயகி நஸ்ருவோ நஸ்ரியாவோ .. செம தூள்.. இந்தக் கரண்ட் டைம் யூத் பாய்ஸ் ரொம்பவே சரண்டர் ஆகி .. குவார்டர்லி லீவ் முடிஞ்சு ஸ்கூல் ரி-ஓபன் ஆனதுக்கப்புறமும் ஆப்சன்ட் ஆகறதுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம்..!!

ஜெய் அந்தக் கீச்சு வாய்சை வைத்துக் கொண்டு அடிக்கிற லூட்டி ரொம்பவே யதார்த்தம்.. ஆ ஊ ன்னா கண்ணுல தண்ணி பீச்ச அழறதும், யாராச்சும் கேட்டா கண்ணுல வேர்த்திருக்குன்னு சொல்றதும் .. ஸோ கியூட்..

ஆர்யாவின் எக்ஸ்ப்ரஷன் மாறாத முந்தைய படங்களின் அதே பாவனை நடிப்பு.. கொஞ்சம் மாத்தி  யோசிங்க ஆர்யா... நல்லா லட்டு லட்டா சிட்டுக ஜோடியா கெடச்சா மட்டும் போதாது.. ஸ்டைலை மாத்தலைனா .. அப்புறம் ரசிகர்கள் மாத்திடுவாங்க.. ஹீரோவை.. !

எடிட்டிங் போடோக்ராபி எல்லாமே ரொம்ப மெச்சூர்.. 
ஜி.வி.பிரகாஷோட இசை கூட மெச்சூர் தான்.. ஆனா பாட்டு தான் மோஸ்ட்லி எல்லாமே அமெச்சூர்.. ப்ளீஸ் பிரகாஷ்.. முந்தைய சென்னப்பட்டிணம் பாடல்கள் மாதிரி ஏன் தெளிவா இல்லை? அந்த அளவு ஏன் ஷைனிங் இல்லை?.. 

சத்யராஜ் மறுபடி ஒரு ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாரு போல.. இவ்ளோ பெரிய காரெக்டரை சும்மா அல்வா சாப்பிடறது போல.. அலேக்கா விழுங்கறாரு.. வைஸ் வெர்சா .. சந்தானமும் அதே..!

நல்ல பாமலி என்ட்டர்டைனர் .. வெளியலையே நேந்திரம் சிப்ஸ், பொட்டடோ சிப்ஸ், பிஸ்கட் எல்லாம் பாக் பண்ணிட்டு குடும்ப சகிதமா போனா ரெண்டரை மணி நேரம் சும்மா கும்முன்னு கழியும்.. இன்டர்வல்ல தியேட்டர் ஸ்டால்-ல எதனாச்சும் வாங்கித் தின்னோம்னா .. அப்புறம் மேற்கொண்டு படம் பார்க்கற மூடே அப்செட் ஆகிடும்.. 

Sunday, September 22, 2013

சத்தியம் என்கிற மாயை..

அவ்வப்போதைய
கிஞ்சிற்றுத் தருணங்கள்
இந்த "வாழ்வின் சாஸ்வதமின்மை"யை
சிற்சில சம்பவங்கள்
உணர்த்த நேர்ந்தாலும்...
-பெரும்பாலான
தருணங்கள்
"மாயைகள் குறித்த"
எவ்வித பிரக்ஞைகளுமே
எவர்க்கும் எழுவது
போன்ற சுவடுகளே
தென்படவில்லை..!!

ஆயுட்காலத்தை
புதுப்பித்துக் கொள்வதற்கான
புதிய முறை 
அறிமுகமாகி விட்டது
போல...
இந்த வாழ்வு குறித்து 
அதீத நம்பிக்கைகளையும் 
தீர்மானங்களையும் 
சேகரிக்கத் துணிகிறார்கள்..!

இத்தனை ஆழங்களை 
சுலபமாக சிந்திக்கிற 
ஆற்றல் உள்ளவர்களே கூட.. 
பின்னாடி வந்தவன் 
தனது பைக்கை 
சன்னமாக இடித்து 
விட நேர்கையில் 
பின்பக்கம் முகத்தைத் 
திருப்பி ஓர் 
ரௌத்திரத்தை 
பதிவிறக்கம் செய்து 
வண்டியை ஓரங்கட்டி 
சற்றே விழுந்த 
கீச்சலுக்கு ஆகிற 
செலவுக் காசை 
வசூலிக்கிற புத்தி...
அருவருக்கிற விதமாகப் 
புரிபடுகிறது ஏனோ..!!

Saturday, September 21, 2013

நம் எல்லாருடைய அனுபவங்கள்..

நம்முடைய நெடுநாளைய இலட்சியங்கள் என்ற பட்டியலோடு பிறந்த காலம் தொட்டு, நமக்கு அறிவென்ற ஒன்று பிறந்த நாள் தொட்டு நம்மோடு ஊடாடிக் கொண்டிருக்கிற பல இலட்சியங்கள்.. ரெண்டொன்று நிறைவேறியும், சிலவற்றை என்ன திணறியும் சாத்யப் படாத வகையிலும் .. சரி நம்ம தலைல இவ்வளவு தான் எழுதி இருக்கு என்கிற ஓர் சமாதானத்தோடு பலரும் தங்களின் அன்றாட வாழ்வினை அனுசரிக்கையில்...

என்றோ நம்முடன் பழகிய நண்பன் திடீரென்று நம் இல்லம் தேடி வந்து தனது புதிதாகக் கட்டிய வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு அழைக்கிறான்.. தனது திருமணத்துக்கு அழைப்பு விடுக்கிறான்..
நம்மோடு நட்புப் பாராட்டிய காலங்களில் அவன் மிகவும் சராசரியாக அல்லது நம்மை விட மக்காக இருந்திருப்பான்.. இவன் என்னத்தை கல்யாணம் பிரம்மாதமாக நடத்தப் போகிறான்.. இவன் என்ன வீடு கட்டிக் கிழித்திருக்கப் போகிறான் .. என்று நமது மனது எகத்தாளமாக ஓர் அவசர அனுமானத்தை மெளனமாக முன்வைக்கும்..

ஆனால் அவனது அழைப்பினை மதித்து அவனது விஷேசங்களுக்கு செல்ல நேர்ந்தாலோ... அடக் கடவுளே.. நாம் நமது  இன்னும் நிறைவேறாத பட்டியலில் இடம் பெற்றிருக்கிற மகா பிரம்மாண்ட விஷயங்களை அந்தப் பனாதி நண்பன் அனாயாசமாக சாதித்திருப்பான்.. !

'எப்டி ராசா இம்புட்டு முன்னேறினே?'.. 'அப்பெல்லாம் அடிபட்ட தெருநாய் மாதிரி கெடப்பியே! '.. 'நெசம்மாலுமே இதெல்லாம் நீதானாடா ராசா?" என்றெல்லாம் பலவாறாக மனசுள் குவெஸ்ட்டீன்ஸ் பின்னிப் பெடலெடுக்கும் .. ஆனாப் பாருங்க.., ஒன்னும் கேட்க முடியாது.. கம்னு வந்தமா பார்த்தமா வயித்துக்கு வக்கனையா ரெண்டைக் கொட்னமா.. ன்னு நழுவிடறது தான் உத்தமம்..

வீட்டாண்ட வந்ததும் பல கேள்விகள் மனசுக்குள்ள ஓடும்.. " இவன் தான் ஒழச்சு சம்பாதிசிருப்பானா.. அல்லது இவனோட அப்பன் பாட்டன் வச்சிருந்த சொத்துப் பத்தா இருக்குமோ.. ??

எவனோ எக்கேடு கெட்டா என்ன.. ஒழச்சா என்ன.., தின்னுட்டுத் தூங்குனா என்ன.. அப்பன் சொத்தை அனுபவிச்சா என்ன.. அவனே கஷ்டப்பட்டு சம்பாதிச்சா தான் என்ன..

நம்ம பொழப்பு இங்க நாறுது .. இத எதனாச்சும் தெளிவா கழுவி சாய்க்க முடியுமான்னு பார்க்கணுமே ஒழிய  மத்தவுக மவுசப் பார்த்து பொச்சரிப்பா பேசறது நாதாரிக வேல.. !!

Sunday, September 1, 2013

கா கா கா....

சற்று முன்னரோ
நெடிய நேரம் ஆயிற்றோ
தெரியவில்லை..
செத்துக் கிடந்தது
காகமொன்று..

சற்று முன்னரெனில்
குழாமாக சூழ்ந்து
இந்நேரம் அந்த
சூழலையே களேபரப்
படுத்துகிற விதமாகக்
கரைந்திருக்கும்..

நெடிய நேரமாயிற்று
போலும்..
கரிக்கட்டையாக
கேட்பாரற்றுப் பொசுங்கிக்
கிடந்தது காகம்.. காக உடல்..!

நேற்றைக்கின்னேரம்
அந்தக் காகம்
சுள்ளி பொறுக்கிக்
கூடுகட்டுகிற முஸ்த்தீபில்
அலைந்திருக்கும்..
குஞ்சுகளுக்கான
பசியைத் தீர்க்கிற அவகாசத்தில்
புழுப் பூச்சியையோ
திதிக்கு எவரேனும் படைத்த
படையலில் வடையையோ
கவ்விக்கொண்டு பறந்திருக்கும்..

அபரிமிதப் பசியில்
அலகுகளைத் திறந்த வண்ணம்
கூட்டில் குவிந்திருக்கிற
அனைத்து  குஞ்சுகளுக்கும்
சரிசம விநியோகம் நடந்திருக்கும்..

இன்றைக்கும் 
வாய்களைத் திறந்த 
வண்ணமாகவே அலறக் கூடும் 
அந்தப் பொன்குஞ்சுகள்.. 

ஆனால் நிச்சயம் 
எவையும் மரித்துப் 
போவதாக எந்த 
ஆய்வறிக்கைகைகளும் 
இதுவரைக்கும் இல்லை.. 

அல்லது 
பறவை கவனிப்பாளர்கள் 
இதனை இன்னும் 
கவனிக்கவே இல்லையோ??

Saturday, August 17, 2013

தலை [வலி] வா...!!

துப்பாக்கி இப்டிதான் பிரச்னை ஆகி அப்புறம் ரிலீஸ் ஆகி .. ஹிட் ஆச்சுங்கறதால .. இப்ப விஜய் அண்ணே தலைவாவையும் அதே விதமா செண்டிமெண்ட் பண்ணி விடப் போறாரோன்னு ஒரு கெஸ்ஸிங் ... இல்ல நைனா அது தப்பு.. ரெண்டு விஜய் பசங்களும் பாடா படறாங்கன்னு பீல்டுல எல்லாருமா ஒப்பாரி வக்கிறாங்க..

தியேட்டர் காரங்களும் ரசிகப் பசங்களும் அத்தப் பெரிய பாணர்களை ஏத்தி எறக்கி வச்சே ஒரு வழி ஆயிட்டாங்கோன்னு மும்பைல அமித்தாபச்சன் கூட ரொம்ப பீல் பண்ணி டுவிட்டர்ல ட்வீட் பண்ணி இருந்தாருன்னு சொன்னா... அது பொய்யி நைனா.. !

இப்ப இன்னா மெயின் பிரச்னைன்னா .., சும்மா இவுக பாட்டுக்கு தமிழ்நாட்டுல மாத்திரம் பான் பண்ணிட்டு மத்த ஸ்டேட்கள் -ல மத்த கண்ட்ரீஸ் -ல  எல்லாம் வெளியாண்ட வுட்டுட்டாங்க.. இப்ப சர்வ சாதாரணமா சூப்பர் சூப்பர் பிரிண்ட்ல dvd உள்ளாற பூந்துடும்.. ரசிகர்களுக்கே பொறுக்காம சும்மா பாரு பாருன்னு பார்த்துத் தள்ளிடுவாங்க.. அப்றம் தியேட்டர்க்கு ஒரு பார்மல் விசிட் அடிப்பாங்கன்னு வையுங்க.. ஆனா, மத்த பசங்க.. 'இந்தக் காவியத்த dvd ல ஒருவாட்டி பார்த்தா போதாதா ?.. ன்னு முடிவு பண்ணி வைப்பாங்க ஒரு அதிர்வேட்டு..

ஆகமொத்தத்துல தலைவா படத்தை தயாரிச்ச ப்ரொடியூசர் ஒரு வழி ஆயிடுவாரோ?.. அல்லது இந்த லாஸ் எல்லாம் பாக்கெட் மணி மாதிரியோ... எது எப்டியோ அதிமுக ஜெயிக்க ஒரு அணில் மாதிரி இருந்து செயல்பட்ட இளைய தளபதிக்கு  ஜெ . கிட்ட இருந்து இம்மா சைஸ் ரெஸ்பான்ஸ் கூடாதுப்பா.. Vijay 1

Thursday, August 15, 2013

சுதந்திர இந்தியாவில்...

சிறைப்பட்ட தன்மை அனுபவத்திற்கு வருகையில தான் சுதந்திரத்தின் வசீகரம் எவ்வளவு பெரியதென்பது புரியக் கூடும்.. 

ஆனால் நாமெல்லாம் போராட்டங்களின் சுவடுகளே புரியாமல் போராடியவர்கள் பெற்றுத் தந்த அந்த மகத்தான சுதந்திரத்தைக் கொண்டாடி வருகிறோம்... 

சுதந்திரம் என்கிற ஓர் பிரம்மாண்ட விஷயத்தை எவ்விதப் பிரயத் தனங்களும் அற்று நமது அனுபவத்தில் கொண்டுள்ளோம்... மிகப் பெரிய துயர்களை அனுபவித்து அதனின்று விடுதலை பெறவேண்டும் என்கிற போராட்டக் களங்களில் அன்று நாமில்லை... 

காந்தியும் இன்னபிற மாபெரும் தலைவர்களும் ஒருங்கிழைந்து.. கிடைத்தற்கரிய அந்த எட்டாக்கணியை இந்த தேசத்து மக்களுக்காகப் பறித்துண்ணக் கொடுத்தமையால் இன்று நாம் அதனை சுகமாக சுவைத்துக் குதூகலிக்கிறோம்.. அந்த சுதந்திரம் பிறந்த நாள் வருகையில் கும்மாளமிடுகிறோம் .. 

சுதந்திரம் என்பது எப்போதுமே பிறந்த நாளாகவே கொண்டாடப் படவேண்டும் என்பது நமது அவா... 


ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் பல பிராந்தியங்களில் சுதந்திர தினமென்பது நினைவு நாளாகக் கொண்டாடப் படுவதாகவே தோன்றுகிறது... அன்று ஆங்கிலேயர்கள் அரங்கேற்றிய அதே கொடுங்கோலாட்சியை, அதனைக் காட்டிலும் அபரிமித அதிகாரங்களோடு, பற்பல சிறார்களும் ஏழை எளிய மக்களும் பல இந்திய கிராமங்களில் நடத்தப் படுகின்றனர்.. 

அன்று காந்தி போராடிப் பெற ஒரு சுதந்திரம் என்கிற விஷயம் பிரதானமாக அமைந்திருந்தது.. ஆனால் இந்த சுதந்திர இந்தியாவில் இன்று பற்பலரும் போராடுகிற திராணி கூட அற்று வாய்மூடி மௌனிகளாக வலிகளோடு உழைத்து வாழ்ந்து வருகின்றனர்... இவர்கள் போராடினால் கிடைக்கப் போவது  சுதந்திரம்  அல்ல.., வயிற்றுப் பட்டினி மட்டுமே...!!



Monday, August 12, 2013

பச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....

ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..:

"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி இன்னும் சற்று நேரத்தில் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் செல்லவிருக்கிறாள்... அவளை ஆடை மாற்றச் சொல்லி ஓர் ஆண் செவிலியர் வந்து சொல்கிறார்.. அதன் நிமித்தம், அவள் பாத்ரூம் சென்று ஆடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்க்கிறார்.. மறுபடி படுக்கச் சென்ற அந்த நோயாளிப் பெண்ணை, சிறிது நேரம் கழித்து மறுபடி வேறு ஆடை மாற்ற வேண்டுமென்று சொல்ல, அந்தப் பெண் அவ்விதமே செய்ய பாத்ரூம் செல்ல, பின்னிருந்து வந்த அந்த ஆண் நர்ஸ் அந்த நோய்வாய்ப் பட்ட பெண்ணை கட்டி அணைக்க முயல, அவள் கதறி கூக்குரலிட்டு எல்லாரையும் வரவைத்து அந்தப் பனாதிப் பயலின் மானத்தை வாங்கி, கடைசியில் கைது செய்து வேனில் ஏற்றினார்களாம்".. 

அதற்கு அவளது  கணவன் சொன்னான்:

"நல்ல வேலை.. அந்த இடத்தில் நீ இருந்திருந்தால் கதறியும் இருக்கமாட்டாய்.., அவன் அரெஸ்ட்டும் ஆகி இருக்கமாட்டான்.. "

Saturday, August 10, 2013

உலகமகா அற்பவிஷயங்கள்..

ஜினி கமல் தக்காளி வெங்காயம் எல்லாமே .ஏற்ற இறக்கங்கள் கண்டு..
ரஜினியும் கமலும் ஒரு நாள் காணாமலே போக ...  தக்காளியும் வெங்காயமும்  மக்களை இதே திணறடிப்பில் மூழ்கச் செய்யும்..!

பழனி முருகனும் திருப்பதி வேங்கடாசலபதியும் அவர்களின் பஞ்சாமிருத  லட்டுகளும் என்றென்றும் மக்கள் மனங்களில்.. .நாவுகளில்.!!

 என்றென்றைக்கும் சாஸ்வதமான சில  விஷயங்கள் ...
 தற்காலத்தில் பிரபலமாயும் செல்வாக்காயும் வாழ்கிற சிலரோடும்  சில அற்ப விஷயங்களோடும்  ஒப்பீடு செய்யப் பட்டு..
--- அவ்வித சாஸ்வத தன்மைகளோடு விளங்கி வருபவைகளே கூட இரண்டாம் பட்சமாகி விடுகிற விபரீதங்களும், ஹாஸியங்களும் எல்லா காலகட்டங்களிலும் சுலபத்தில் சாத்யமாகி விடுவது  .....  அந்த தன்மை ஓர் வார்த்தைக்கு அப்பாற்பட்டதென்றே சொல்வேன்..!!

ஆனால் மற்றொன்றையும்  இங்கே சொல்லியாக வேண்டும்..
பழநியானாலும் திருப்பதியானாலும் ஓர் அற்ப காலம் வாழ்கிற மனிதன் பார்த்து நிர்ணயித்த ஸ்தலங்கள் தாமே?.. வழிவழியாக அங்கே அலைமோதுகிற கூட்டங்கள் பிரதானமாகி அந்த ஓர் தன்மையினை  நிர்மாணித்த ஓர் மனிதன் மறுக்கவும் மறக்கவும் .படுகிறான்..

ஆக, ஓர் மனிதனைக் காட்டிலும் அவன் நிர்மாணித்த விஷயங்களே  அழியா புகழோடு  எல்லா காலங்களிலும் ஊடாடிக் கொண்டுள்ளதெனில் அது .மிகையாகா..!

அவனது சாதனைகள் வரலாறுகளில் பட்டியலிடப் படுகின்றன..
அவனது  பிறந்த மற்றும் மறைந்த நாட்கள் அடையாளப் படுத்தப் படுகின்றன.. நினைவுகூரப் படுகின்றன... கொண்டாடப் படுகின்றன..


இதொன்றும் பெரியதொரு கண்டுபிடிப்பன்று.. ஆயினும் இந்த மூலாதாரம் அனைவராலும்  சுலபமாக  மறக்கப் பெற்ற விஷயங்களே..!! இதே விதி தான் ஷாஜகான் நிர்மாணித்த தாஜ்மகாலுக்கும் பொருந்தும்... மற்றவற்றுக்கும் வைஸ் வெர்ஸா .... !

ஏதேனும் அறிவுப் பூர்வமாக சொல்லிப் பார்க்கிற முஸ்தீபில் ஏதோ கிறுக்கியதாக  உளறியதாக மனசுக்குத் தோன்றுகிறதெனிலும்.. இனி எழுதியதை எதற்காக எரேஸ் செய்யவேண்டும் என்று படுகிறது.. ஆகவே, போட்டுத்தாக்கு என்கிற ரேஞ்சில் இடுகையை இட்டாயிற்று.. இருந்து விட்டுப்  போகட்டுமே..இப்படியும் ஒரு ஸ்கிரிப்லிங்.. ஹிஹி.. 




Wednesday, July 31, 2013

இயக்குனர் மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்தினம் குறித்து எனக்குப் புரிந்த தெரிந்த சில விஷயங்களைப் பரிமாற விரும்புகிறேன்..

சினிமா என்கிற ஓர் தன்மையை ஓர் மெருகூட்டலாக, ரசனைப் பிரவாகமாகத் துவக்கி வைத்த பெருமை ம.ரத்னத்தை நிச்சயம் சாரும்... ஒரே இளையராஜாவைப் பார்த்து பல இசைக் கலைஞர்கள் இன்று வளர்ந்து நிற்பது போல, அந்த வளர்ச்சியில் இ.ராஜாவே சற்று ஓரங்கட்டப் பட்டுவிட்டதாக உணரத் தோன்றுகிற விதமாக காலமும் மனிதர்களும் அவரைப் புறந்தள்ளிய ஓர் தன்மையை .. நிச்சயம் இசையை சினிமாவில் பிரத்யேகமாக ரசிக்கிற எவருமே அடையாளம் கண்டுணர சாத்தியப் படுமென்று அனுமானிக்கிறேன்..

அந்த ராஜாவைப் புறந்தள்ளியவர்கள் பட்டியலில் நிச்சயம் ம.ரத்னமும் அடக்கம்.. அவருடைய காட்சி அமைப்புகளுக்காவது a r  ரஹ்மானின் இசை சற்று பொருந்திப் போயிற்று.. ஆனால், பாரதிராஜாவின் செல்லுலாய்டு, ராஜா இசையை இழந்த நாள் தொட்டு எவ்வித உன்னத தன்மைகளையும் பிரதிபலிக்கவில்லை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை..!

மெல்லிய கதை அமைப்புகளிநூடே ரத்தக் களரி நிரம்பிய வன்முறைகளை சுலபமாக தனது திரைக் கதைகளில் திணிப்பதில் வல்லவர் ம.ரத்னம்.. முள் பலாவை துளைத்தால் தான் சுவை நிரம்பிய சுளைகள் தென்படும் என்பது போன்ற ஜிம்மிக்ஸ் வேலைகளை செவ்வனே அரங்கேற்றுகிற சாதுர்யம் ரத்னத்தின் முத்திரை..

என்றோ புனையப் பெற்ற ராமாயணம் --மேற்கொண்டும் திரிக்கப் பட்டு ராவணன்...
தமிழகத்தை ஆள்கிற அரசியல்வாதிகளை மேற்கோள் காண்பித்து இருவர்..

இதையெல்லாம் தமிழக மக்கள் வாயைத் திறந்து கொண்டு ரசிப்பார்கள் என்று நம்பி ஏமாந்த மணி, உப்புசப்பில்லாத கடல் படத்தை எடுத்ததும்,

இந்தத் தோல்விகளை சரிக்கட்டும் விதமாக இனி இன்னொரு படத்தை எடுத்து தமிழக  ரசிகர்களை குளிர்விக்கப் போவதாகவும் சில சினிக் கிசுகிசுக்கள்..

ஓர் தெளிவான கலைஞன், குறிப்பிட்ட காலத்தில் தனது சிருஷ்டிகளை இயல்பாகவே நிறுத்திக்  கொள்வது ஓர் பெரிய அறிவு சார்ந்த விஷயம்.. உடலில் மனதில்  தெம்பிருந்த காலத்தில் ஆட்டம் போட்டதை மனதில் வைத்துக் கொண்டே முதிர்ந்த இந்தக் கால கட்டத்தையும் தனது ஆளுமையில் கோலோச்ச வேண்டுமென்கிற ஆசை, அது பேராசை.. அப்ப , பெருநஷ்டம் அந்தப் பழமொழிக்கொப்பவே  வந்துவிடும்..

பாலசந்தருக்கும் பாகியராஜுக்கும் என்ன படமா எடுக்கத் தெரியாது?.. ஜெயகாந்தனுக்கும்  இன்னபிற அன்றைய பிரபல எழுத்தாளர்களுக்கும் இன்றைக்கென்ன  எழுதவா வராது?.. ஆனால் ஏன் எல்லாரும் அமைதி காக்கிறார்கள்? .. எதையேனும் செய்யபோய், சம்பாதித்து வைத்துள்ள அந்தப் பழைய வீரிய இமேஜும் இசிபட்டுப் போகும் என்கிற ஓர் தீர்க்க தரிசனத்தோடு தான் அவர்கள் அவ்விதம் இருக்கிறார்கள்..

மணிரத்தினம் போல சிலர் ஆட முற்பட்டு, சில துரதிர்ஷ்ட தயாரிப்பாளர்கள் இத்தனை காலம் சேர்த்துவைத்த காசுகளை விரயம் செய்ய வேண்டுமென்கிற விதி.. அதை மாற்ற எவரால் முடியும்?

Friday, July 26, 2013

அலட்டல் ...


.. 

எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் 
அலாதியானது.. 

பார்ப்பவர்க்கு 
நம் அலட்டல் 
புரிபடாததாக 
இருத்தல் நலம்...!

இயல்பாகவே 
அலட்டும் குணமற்றவர்கள்
தெய்வத்திற்கொப்பாவர்... 
இயல்பாகவே  அலட்டுபவர்கள் 
இம்சையாகப் புரிபடுவர்..!

நாசுக்காய் 
அலட்டத் தெரியாதவர்கள் 
நாசமாய்ப் போவர்..!!

அலட்டலை 
ரகஸ்யமாக்கி ..
புறமிருப்பவர்களுக்கு 
யதார்த்தமாகப் 
புரிபடுகையில்----

நிச்சயம் 
எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் மிகமிக 
அலாதியானது..!!

Saturday, July 20, 2013

கவிஞர் வாலி..

ம்ஜியார் சம்பந்தப்பட்ட பிரபல கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல இதே வருடம் மறைவது ஒருவகையான டச்சிங்காக உள்ளது..
சில மாதங்கள்  முன்னர் தான் டி எம் எஸ் மறைந்தார்... இப்போது கவிஞர் வாலி..

சினிமா பாடல்களை சற்றே புரிகிற விதமாக எழுதிவந்தார்.. எளிமையும் இளமையும் ஒருங்கே இணைந்த அவரது பாடல்கள் பல, பற்பலராலும் மிகவும் ரசிக்கப் பெற்று வந்தன எனில் அது மிகையன்று...!!

தரை மேல் பிறக்கவைத்தான் என்று படகோட்டியில் பாடிய டி எம் எஸ் .. அதை எழுதிய வாலி.. அதற்கு வாயசைத்து நடித்த எம்ஜியார்.. மூவரும் இந்த ஷணத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை என்கிற கற்பனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்ற போதிலும் ..யோசித்துப் பார்க்கையில் சற்றே ஓர் இனம்புரியா கவலை மனசைக் கவ்வுவதை உணரத்தானே முடிகிறது??

உதாரணமாக சொல்லப் பட்ட அந்த மூவருமே காலத்தால் அழிக்கமுடியாத சாதனைகளை செய்துவிட்டுத் தான் மறைந்துள்ளனர்....! இப்படி நாமதேயங்களை பலமாக இந்த பூமியிலே பதித்துவிட்டு மறைந்தவர்கள் என்றென்றும் மக்களால் நினைக்கப் படுவர், அவரது படைப்புகள் ரசிக்கப்பெறும்...

ஆனால் எல்லாருக்குமா மரணம் இந்தப் பரிசுகளை வைத்துவிட்டுப் போகிறது?.. ஏதோ சிற்சிலர் மாத்திரமே இவ்வித நிழல் அடையாளங்களாகவாவது  இந்த உலகில் உலவுகிற பாக்கியம் பெறுகின்றனர்.. பற்பலரும், வெறுமனே இருக்கிற வரைக்கும் நினைக்கப் படுபவர்களாகவும் , சென்ற பிறகு அவரது குடும்பம் சார்ந்த உறுப்பினர்களே சில நாட்களில் மறந்து விடுகிற வகையிலும் வாழ்ந்து மறைகின்றனர்..

தோன்றின் புகழொடு  தோன்றுக  அதர்வைஸ் பொறக்காம இருக்கறதே பெட்டர் ன்னு  நம்ம ஆஸ்தான வள்ளுவன் ரெண்டே வரியில சுலபமா போட்டெ றிஞ்சுட்டுப்  போயிட்டாரு.. இங்க அவனவன் பொண்டாட்டிகிட்ட ஜெயிக்கிறதையே பெரிய  போராட்டமா வச்சிருக்கான்.. ஹிஹி.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...