Wednesday, November 20, 2013

கடி

பொழுது சாய்கையில் 
திரள்கிற கொசுக்களுக்கு 
அளவேது??
அதுவும் அந்தப் 
பூங்கா பச்சைக்கு 
பிரத்யேகமாக 
இம்சிக்கத் துவங்கும்.. 

தனியாக 
அமர்ந்திருப்பவர்களை 
நெளிய வைத்து 
நெளிய வைத்துக் 
கடித்தன.. 

தம்பதி சகிதமாக 
அமர்ந்திருந்தவர்களை 
ஓரளவு துன்புறுத்தின..            

காதலிகளுக்குக் 
காத்திருந்த ஆண்களையும் 
காதலர்களுக்குக் 
காத்திருந்த பெண்களையும் 
கடிக்காமல் கடித்தன.. 

காதல் ஜோடிகளை
சுத்தமாகக் கடிக்கவே
இல்லை கொசுக்கள்...

[பாரபட்சம் பாராது எல்லாரையும் ஒரே மாதிரி கடித்துத் தான் ரத்தம் உறிஞ்சின கொசுக்கள்... ஆனால், அந்தந்த சூழலில் அவர்கள் உணர்ந்த விதங்களைத் தான்  கவிதைப் படுத்த முனைந்துள்ளேன்.. ]

1 comment:

  1. காதல் ஜோடிகளாக எப்போதும் இருக்க வேண்டும்...?

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...