..
எதற்கேனும்
அலட்டிக் கொள்கிற
ஆனந்தம்
அலாதியானது..
பார்ப்பவர்க்கு
நம் அலட்டல்
புரிபடாததாக
இருத்தல் நலம்...!
இயல்பாகவே
அலட்டும் குணமற்றவர்கள்
தெய்வத்திற்கொப்பாவர்...
இயல்பாகவே அலட்டுபவர்கள்
இம்சையாகப் புரிபடுவர்..!
நாசுக்காய்
அலட்டத் தெரியாதவர்கள்
நாசமாய்ப் போவர்..!!
அலட்டலை
ரகஸ்யமாக்கி ..
புறமிருப்பவர்களுக்கு
யதார்த்தமாகப்
புரிபடுகையில்----
நிச்சயம்
எதற்கேனும்
அலட்டிக் கொள்கிற
ஆனந்தம் மிகமிக
அலாதியானது..!!
அலட்டிக் கொள்ளாமல் அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeletethk u d.bal sir..
ReplyDeleteஅலட்டல் இல்லாமல் இருந்தது கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்..
ReplyDelete