சிறைப்பட்ட தன்மை அனுபவத்திற்கு வருகையில தான் சுதந்திரத்தின் வசீகரம் எவ்வளவு பெரியதென்பது புரியக் கூடும்..
ஆனால் நாமெல்லாம் போராட்டங்களின் சுவடுகளே புரியாமல் போராடியவர்கள் பெற்றுத் தந்த அந்த மகத்தான சுதந்திரத்தைக் கொண்டாடி வருகிறோம்...
சுதந்திரம் என்கிற ஓர் பிரம்மாண்ட விஷயத்தை எவ்விதப் பிரயத் தனங்களும் அற்று நமது அனுபவத்தில் கொண்டுள்ளோம்... மிகப் பெரிய துயர்களை அனுபவித்து அதனின்று விடுதலை பெறவேண்டும் என்கிற போராட்டக் களங்களில் அன்று நாமில்லை...
காந்தியும் இன்னபிற மாபெரும் தலைவர்களும் ஒருங்கிழைந்து.. கிடைத்தற்கரிய அந்த எட்டாக்கணியை இந்த தேசத்து மக்களுக்காகப் பறித்துண்ணக் கொடுத்தமையால் இன்று நாம் அதனை சுகமாக சுவைத்துக் குதூகலிக்கிறோம்.. அந்த சுதந்திரம் பிறந்த நாள் வருகையில் கும்மாளமிடுகிறோம் ..
சுதந்திரம் என்பது எப்போதுமே பிறந்த நாளாகவே கொண்டாடப் படவேண்டும் என்பது நமது அவா...
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் பல பிராந்தியங்களில் சுதந்திர தினமென்பது நினைவு நாளாகக் கொண்டாடப் படுவதாகவே தோன்றுகிறது... அன்று ஆங்கிலேயர்கள் அரங்கேற்றிய அதே கொடுங்கோலாட்சியை, அதனைக் காட்டிலும் அபரிமித அதிகாரங்களோடு, பற்பல சிறார்களும் ஏழை எளிய மக்களும் பல இந்திய கிராமங்களில் நடத்தப் படுகின்றனர்..
அன்று காந்தி போராடிப் பெற ஒரு சுதந்திரம் என்கிற விஷயம் பிரதானமாக அமைந்திருந்தது.. ஆனால் இந்த சுதந்திர இந்தியாவில் இன்று பற்பலரும் போராடுகிற திராணி கூட அற்று வாய்மூடி மௌனிகளாக வலிகளோடு உழைத்து வாழ்ந்து வருகின்றனர்... இவர்கள் போராடினால் கிடைக்கப் போவது சுதந்திரம் அல்ல.., வயிற்றுப் பட்டினி மட்டுமே...!!

No comments:
Post a Comment