காதல் என்கிற
புனிதம் துவங்கும்
பொழுதே
காமத்துக்கான
அடிக்கல்லும் சேர்ந்தே
நாட்டப்படுகிறது....
புணர்தல்
நிகழ்கிற தருணம்
வரைக்கும்
காதல் - தன்
புனிதத்துவத்தை
இழக்காமலே தான்
இருக்கிறது...
காமமும்
புனிதம் என்றும்
அது மலரினும் மெல்லியது
என்றும் உணரப்படுவதற்கு
அபரிமித ரசனை தேவைப்படுகிறது...
ரசனையற்ற புணர்தல்கள்
சலிப்பை ஏற்படுத்தும்
நாளடைவில்...!
பிறகு...
காணாமல் போயிருக்கும்
காதலும் காமமும்...!!
சுந்தரவடிவேலு
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Sunday, October 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
இ ந் தி யாவில் மற்ற மாநிலங்களில் இளைஞர்கள் எவ்விதமோ யாமறியேன்.. நம்முடைய தமிழகத்தில் "இவ்விதம்" என்கிற கண்க்ளூஷனுக்கு என்னால் வர ...
No comments:
Post a Comment