Tuesday, October 13, 2009

பலம் பொருந்திய தோல்விகளும்.. அதன் ஞாபகங்களும்...

எனது காதல்
சற்று விநோதமானது...

-என் கன்னங்கள்
அவள் உதடுகளுக்கு
முத்தமிடும்..

-அவளது மடியில்
சாய்ந்த வண்ணமாகவே
அவளுக்காகக் காத்துக்
கிடப்பேன்...

-இந்நாட்களில்
அவளுடனாக
புணர்ச்சி கொள்ளும்
தருணங்களில் கூட,
... அன்று
காதலிக்க ஆரம்பித்த
நாட்களில் "எனக்குகிடைப்பாளா?"
என்கிற கேள்விக்குறிகளுடன்
ஏங்கிக்கொண்டிருந்த அந்த
ஞாபங்கங்கள் ...

-இன்றைக்கு
எனக்குக் கிடைத்து
விட்டாள்...
அவளைப் புணர்கிறேன்
என்கிற நிதர்சனங்களை
எல்லாம் தாண்டி..
--மறக்கவே
முடியாத அன்றைய
தேடல்களின் அவஸ்தைகள்
இன்னும் வேதனை
கலந்த சுவாரசியங்களை
பதிவாக்கிக்கொண்டிருக்கிற
ஞாபகச்சுழல்கள்...
--என்
தற்போதைய
ஆசுவாசத்தையே கூட
மூர்ச்சையாக்கி
உள்ளிழுத்துக்கொள்கிற
சாத்யக்கூறுகள்
கொண்டவை என்றே
அனுமானிக்கிறேன்...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

1 comment:

  1. வணக்கம் சுந்தரவடிவேலு

    நல்லா இருக்கு கவிதை
    எனினும் காதலிப்பது என்பது புணர்வதர்கான மனிதரை கொள்வது என்று தோன்றும்படி இருக்கின்றது கவிதை

    கொஞ்சம் யோசியுங்களேன்

    இராஜராஜன்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...