Monday, April 7, 2014

ஆன்மீக அலசல்..

மனிதர்களை சுவாமிகள் படைத்தனர் என்பதற்கு எந்த சாட்சிகளும் அறவே இல்லை.. ஆனால் அனைத்து சுவாமிகளும் மனிதர்களால் மாத்திரமே படைக்கப் பெற்றன என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்க வாய்ப்பில்லை.. 

அவனே கற்களைத் தேர்ந்தெடுத்து.. உருவத்தை செதுக்குகிற லாவகம் உள்ள கற்களை தனியே பிரித்தெடுத்து .. அந்தக் கல்லில் அவன் கொணர்கிற நேர்த்தி மிகு புன்னகைகளும், ரவுத்திரங்களும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.. கற்களில் எல்லா உணர்வுகளையும்  பிரதிபலிக்கச் செய்கிற சிற்பியினுடைய கைவண்ணங்கள் .. வாவ் என்று வியக்கச் செய்கின்றன.. அப்படி வியக்காத சில கல்மனம் படைத்த ரசனை அற்ற ஜடங்களும் படர்ந்து பரவித் தான் கிடக்கின்றனர் எங்கெங்கிலும்..

வானத்தைக் கூட அற்பமாக அண்ணாந்து பார்க்கிற அகம்பாவ மனிதர்கள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கென்ன?..
காலில் மிதிபடுகிற மண்ணெடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கிற அபிமானம் கொண்டு இப்புவியில் நாம் வாழப் பழகுவோமே..!!

இயற்கையின் பால் லயித்து இதயம் நெகிழ்கையில் ஏற்படுகிற உணர்வுக் கிளர்வுக்கு ஈடு வேறென்ன இருக்க முடியும்?..
எவ்வளவோ மனிதர்கள் ரசிக்க உகந்தவர்களாக, மதிக்க உகந்தவர்களாக.. இருக்கத்தான் செய்கிறார்கள்.. பார்த்தாலே கண்ணீர் மல்க வைக்கிற ஞானிகளும்.. அவர்களிடம் அடைக்கலம் ஆகி விடலாம் என்கிற அபரிமித ஆர்வம் பெருக்கெடுக்கவும் தான் செய்கின்றன..

உடனே அப்படி எல்லாம் எவரும் அடைக்கலம் ஆகிவிடுவதாக இல்லை.. பலருக்கும் அவ்வித கற்பனைகள் மேலோங்கி மனதினை ஆட்டுவிப்பதே சாதனை போன்ற  இறுமாப்புகள் நெஞ்சுக் கூட்டில்..

அதையும் தாண்டித்  தான் சிலர் தன்னையே அர்ப்பணிக்கிற நிகழ்வுகள் எல்லாம் நேர்கின்றன.. அந்த சிலரின் மனசுகளும் அவர்களது முடிவுகளும் பிரம்மிக்கச் செய்கின்றன..

தொடர்பற்றோ தொடர்புடனோ எனக்குத் தோன்றிய விஷயங்களை தோன்றிய மாத்திரத்தில்  கொட்டித் தீர்த்துவிட்டேன்..
இப்படி ஆன்மீக சம்பந்தப்பட்ட அபிப்ராயங்களை அவ்வப்போது எழுதுகையில் ஓர் இனம்புரியாத  உணர்வு பிரவகிக்கிறது மனசுள்.. இதற்காகவே இப்படி எதையேனும்  மாதம் ஒருமுறையாவது எழுதலாம் என்கிற உத்தேசம்..

பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன..

4 comments:

  1. சிலவற்றில் நினைத்து லயிக்கையில் ஆழ்ந்து ரசிப்பதும் இனிமை... அதை பகிர்ந்து கொள்வது அதை விட ரசனை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. wow.. really thank you mr.danpal sir..

    ReplyDelete
  3. சிற்பி படைக்கும் எல்லா சிற்பங்களும் கடவுளாவதில்லை அல்லவா? சிலவற்றில் உயிர் இருக்கும்! சிலவற்றில் வெறும் கல்தான் இருக்கும்! சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
  4. thanks for yr kind comment mr.thalir suresh.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...