குக்கூ பார்த்தேன்..
இப்படம் குறித்து பல வகையறா விமரிசனங்களை முன்னரே கேட்கவில்லை.. நல்ல வேளையாக இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த பிற்பாடு தான் யூ டியூபில் பிரஷாந்தின், பாஸ்கியின் ரிவியூஸை கவனித்தேன்.. ஆளாளுக்கு கன்னாபின்னாவென்று அரற்றி இருக்கிறார்கள்..
குற்றமென இவர்கள் சுட்டிக் காண்பித்த எத்தனையோ விஷயங்களை நான் மிகவும் ரசித்தேன்..
சுற்றுப் புற சூழலின், திரை அரங்கு சூழலின் நிமித்தம் ஒரு ரசனை மிகு மனிதனின் ரசனை பிசகுகிற வாய்ப்பு எங்கெங்கிலும் உள்ளது ஆதலால், ஓர் மவுன தருவாய் ஒன்றில் இப்படத்தினை பொறுமையாக கவனிப்பது சாலச் சிறந்தது..
நேற்று எங்கள் ஊர் திரையரங்கில் இப்படம் கடைசி ... கூட்டம் அறவே இல்லை.. ஆகவே ஆர்ப்பாட்டங்களும் வெட்டிக் கூச்சல்களும் இல்லை என்பதாலோ என்னவோ அங்குலம் அங்குலமாகக் கண்டு வியந்தேன் இப்படத்தினை..
முதற்கண் ஒன்றினை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்..
நிச்சயம் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.. எல்லாருமே இப்படத்தினை கண்டு களிக்க வழிவகை செய்ய வேண்டும்..
மாற்றுத் திறனாளிகளின் அன்றாட யதார்த்த சூழல்களை, இவ்வளவு நேர்த்தியாக முந்தைய வேறெந்தப் படங்களும் சொன்னதில்லை என்பது எமது தாழ்மையான கருத்து..
போட்டி இல்லாமலே தேர்வு செய்கிற தகுதியோடு எவ்வளவோ விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு.. அப்படி எனில், இப்படம் வேறெந்தப் படங்களோடும் போட்டி எதுவும் போடாமலேயே போட்டிக்குத் தேர்ந்தெடுக்கிற முழுத் தகுதிகள் உண்டு என்பது அடியேனின் அபிப்ராயம்..
பிரத்யேகமாக இப்படத்தின் அறிமுக நாயகி மாளவிகா.. அடேங்கப்பா.. என்ன ஒரு தத்ரூபம்.. அசத்தி விட்டார்..
இசை ஓர் புதுப் பரிணாமத்தில் பிரயாணிக்கிறது.. இளையராஜா போல மனசில் பிரம்மாதமாக மனனமாகவில்லை எனிலும், இந்த இசை ஓர் தனி ரகம் தான்..
ரெண்டொரு பாடல் கூட மனசை வருடி சென்றன..
அலட்டல்கள் இல்லாத ஒளிப்பதிவு..
நாயகனும் யதார்த்தத்தில் சோடை போகவில்லை.. மேடைக் கச்சேரிகளில் இளையராஜா வாய்ஸ் கொண்டு பாட வேண்டிய காரெக்டர்.. கச்சிதமாக செய்திருக்கிறார் அந்த அட்டகத்தியில் குத்திக் கிழித்தவர்..
தயவு செய்து dvd hd பிரிண்ட் டில் கிடைக்கிற பட்சத்தில் கூடஅதனைத் தவிர்த்து திரை அரங்கு சென்று கவனிப்பீராக....
தமிழ் படங்களுக்கு இப்படம் ஓர் மைல்கல் என்பதில் எந்த ஆட்சேபத்துக்கும் இடமில்லை.. ..

No comments:
Post a Comment