Tuesday, November 22, 2011

அனுமானம்..



என் அலுவலகப்
பணியாளனிடம்
பவ்யமாக வாலாட்டி
அவன் வருடுவதற்காகத்
தலையைத் தலையைக்
கொண்டுபோகிறது                
அவன் வீட்டு நாய்...

கடந்த இரண்டு நாட்களாக
அலுவலுக்கு ஏன்
வரவில்லை என்று
சற்றுக் கடுப்பாகிக்
கேட்ட என்னைப்
பார்த்து---குரைக்கிறது
அவனுடைய நாய்..

பழி வாங்க நினைத்தானோ
என்னவோ .. குரைக்கிற
நாயை வேண்டாமென்று
கூட அடக்கவில்லை...
மாறாக...மௌனமானதோர்
ரகசியப் புன்னகையை
என்னால் அடையாளம்
காணமுடிந்தது
அவன் முகத்தில்...!!

மறுநாள்
அலுவல் வந்தவனிடம்
என் தேக்கமாகியிருந்த
காட்டம் அனைத்தையும்
காண்பிக்க நேர்ந்தது...

மாலை திரும்ப
வீடு வந்தபோதும்
வழக்கமான என் கடுப்பில்
உறைந்து காணப்
படுவர் மனைவியும்
குழந்தைகளும்...

நாய் ஒன்று மட்டுமே
எதிர்க்கத் துணிந்திருக்கிறது
என்னை...
அலுவலிலும் சரி
வீட்டிலும் சரி,
எல்லாருமே மிரண்டுதான்
காணப் படுகிறார்கள்
என்னைக் கண்டு...எப்போதும்..!!


அந்த நாய்
என்னைக் குரைத்ததைப்
பார்த்திருந்தால்
என் மனைவி குழந்தைகள்
முகங்களிலும்
என் பணியாளின் அதே
ரகசியப் புன்னகை
தவழ்ந்திருக்கக் கூடும்
என்று எனக்கேனோ 
தோன்றிக் கொண்டே 
இருக்கிறது...!!!


2 comments:

  1. வேசி வீட்டு
    பூஜையறையில்
    பிரசன்னமான பக்தி--
    கோவிலில்
    அவளை தரிசித்த
    போது காணாமற்
    போயிருந்தது.//

    இந்த வரிகளினுள் பல அர்த்தங்கள் இருப்பது போல உணருகிறேன். அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. thanks for ur comment mr.visaran..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...