நகைக்
கடையில்
ஒன்றரைப் பவுனை
ஒழுங்காகத்
திருடியவன்
--பெட்டிக்
கடையில்
எள்ளுருண்டை
திருடி
பிடிபட்டு
அடி வாங்கினான்...
இதற்கு முன்னர்
என்னென்ன
திருடி இருக்கிறாய்
என்கிற விசாரணைக்
கேள்வியில்...
நல்ல வேலையாக
"கடலை மிட்டாய்"
என்று மட்டும் சொல்லி
டபாய்த்து விட்டான்...
"ஓடிப் போடா
அற்பத்திருடா "
என்று விரட்டியடிக்கப்
பட்டான்...
அடுத்தநாள் மறுபடி
நகைக் கடையில்
தன் கைவரிசையைக்
காட்டினான்
நாலு சவரனில்
சங்கிலி திருடி...
இந்த முறை
எள்ளுருண்டைக்கு
ரெண்டு ரூபாய்
கொடுத்துச் சாப்பிட்டான்
அவன்..!!
thanks viji..
ReplyDeleteஆஹா.... நல்ல ட்விஸ்ட்.
ReplyDeleteரசித்-தேன்!