நம் வீட்டுக் குழந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை brilliant box ஆக அறிமுகப் படுத்துங்கள்...
நம்முடைய தப்பித்துக் கொள்கிற தந்திரங்களுக்காக எந்நேரமும் குழந்தைகளுக்கு கார்ட்டூன் நெட் வொர்கயும் போகோ வையும் திணித்துக் கொண்டிருக்காதீர்கள்... டிஸ்கவரியை, அனிமல் பிலாநெட்டை, செய்தி சானல்களை பழக்கப் படுத்துங்கள்..
அப்போது தான் அவசரத்துக்கு நாம் ஏதாவது செய்தி கவனிக்க வேண்டுமானால், தப்பிக்க முடியும்... அவர்கள் போக்கிலேயே அவர்களின் ரசனைக்கு மட்டும் விருந்து படைத்துக் கொண்டிருந்தோமேயானால், நம்மை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் குழந்தைகள்...
குழந்தைகளுக்கு டெலிவிஷனை வேடிக்கை பார்க்கிற ஜன்னலாகப் பயன்படுத்தப் பழக்காதீர்கள்.., மாறாக, அதனை ஒரு emergency exit ஆக உபயோகித்துப் பழக்குங்கள்...
கண்கள், மனது, கல்வி, விளையாட்டு, இவை அனைத்தையும் பாழ் செய்கிறது டிவி..
நாமும் மடத்தனமாக அந்தக் குப்பை நாடகங்களில் ஒன்றுவோமேயானால் , அது குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும்... நாம் அந்த நாடக நேரங்களை மறந்தாலும் கூட அதுகள் அலாரமடிக்கத் துவங்கிவிடும் அந்த நேரம் வருகையில்...
ஆகவே பெரிசுகளும் கொஞ்சம் சிறுசுகளை மனசில் வைத்து செயல்படுவது சாலச் சிறந்தது...
நம் காலத்தில், அதாவது நாம் படிக்கிற காலத்தில், கரகரப்பான வானொலி அலைவரிசைகள் தவிர வேறு நாதியில்லை... அந்த அரைமணிநேர பாடல்களுக்காக விவசாய நிகழ்ச்சிகளை சகித்துக் கொண்டிருப்போம்... இன்னபிற அனத்தல்களைக் கூட அலட்சியம் செய்யாமல் கவனித்துக் கிடப்போம்.. விட்டால் அந்த அரைமணிநேர சினிமா பாடல்கள் பறிபோய்விடுமே..!..
ஆனால் இன்றோ... எம் பி த்ரீ என்ன, ப்ளூ டூத் என்ன, ... இன்னும் இத்யாதி என்னக்கள்..
வெள்ளிக்கிழமை ஏழரை டூ எட்டு ஒரு நான்கைந்து பாடல்கள் ஒளியும் ஒலியுமில் வைப்பார்கள்... அது சில சமயங்களில், அதரப் பழசாக வந்து மண்டை காய்ச்சும்...மற்றொரு வெள்ளியில் சற்றும் எதிர்பாராமல் புத்தம் புதுசாக அன்று ரிலீஸ் ஆன படப் பாடல்கள்... பாடல்களுக்கு முன்னர் அந்தப் படத்தின் ஸ்டில் நம் டிவி திரையில் விழுவதே பெருமையாக இருக்கும்...
இப்படி எல்லாம் ஓர் கட்டுப்பாடோடு நாம் வாழ்ந்து வளர்ந்து வந்தோம் என்று சொல்வது தவறு... டெக்னாலஜி அந்த அளவு மட்டுமே வளர்ந்திருந்தது.... அன்றைக்கும் இன்று மாதிரியே எல்லாம் பிரம்மாண்டமாக இருந்திருந்தால் வேண்டாம் போ என்றா சொல்லி இருப்போம்?...
நாற்பது தாண்டியும் மூக்குக் கண்ணாடியின் தேவை நம் அநேகம் பேர்களுக்கு இல்லை.. ஆனால் இன்றைய வாண்டுகள் முக்கால் வாசிக்கு கிழங்கள் போல சோடாப்புட்டி அவசியமாகி விடுவது வேதனையாகவும் விபரீதமாகவும் இருக்கிறது...
..
நாம தான் கஷ்டப் பட்டுட்டோம்..நம்ம குழந்தைகளாவது ஜாலியாக வளரட்டும் என்கிற போக்கு, நம்மில் பலருக்கு ஓர் நேரத்தில் முளைத்து விடுகிறது...
இருக்கட்டும்.., அதில் தவறில்லை..
ஆனால் அந்த சுதந்திரத்தில் - சில நாசுக்கான கட்டுப் பாடுகளைத் திணிப்பதும் மிக அவசியம்...
நன்றி..
சுந்தரவடிவேலு..

குழந்தைகள் தினத்திற்கான சிறந்த பதிவு...நானும் எழுத இருக்கிறேன் வாசித்து சொல்லுங்கள் சகோதரரே
ReplyDeletethanks shylu..sure, i too will read yours..
ReplyDelete