சாத்தியமுள்ள
விளிம்புகளில் கூட
மிக சாதுர்யமாக
உன்னுடன்
நடந்து விட முடிகிற
என்னால் --
தெளிவான
தேசிய நெடுஞ்சாலையில்
தடுமாற நேர்கிறது
நீ என்னைப்
புறக்கணிக்கையில்...!
தங்கத்திரவமாக
ஊற்றெடுக்கிற
காதல் ரசாயனம்
உடலின் மற்ற
நோய்க்கிருமிகள்
அனைத்தையும்
அழிக்கிற வல்லன்மை
கொண்டுள்ளது...
--ஆனால்
காதல் என்கிற
நோய்க்கிருமி
நம்மைத்
தின்று தீர்ப்பதை
நம்மாலேயே
உணர முடிவதில்லை
என்பதை விட
உணரவே பிடிப்பதில்லை...??
சுந்தரவடிவேலு
//காதல் என்கிற
ReplyDeleteநோய்க்கிருமி
நம்மைத்
தின்று தீர்ப்பதை
நம்மாலேயே
உணர முடிவதில்லை//
classic...keep it up.
word verification - ஐ தூக்கி விடவும், தொந்தரவாக இருக்கிறது.
thanks aruna sir, for your comment. and as you told, someone too requested me this same thing previously.. but sure, i don,t know about that word verification.. please explain me, what is that? i am somewhat poor in these kind of technical terms.. sorry ..
ReplyDeleteoh .. as u all asked, i had removed that WORD VERIFICATION column.. really sorry.. thanks
ReplyDelete