Saturday, April 24, 2010

மெளனமாக புறக்கனிக்கப்படுகிறேன்?

என் திறன்களுக்கான
தளங்கள் யாவும்
தகர்த்தெறியப்பட்டு விட்டதாக
அனுமானிக்கிறேன்..!


மறுபடி
புணரமைப்பதற்கான
சாஸ்வதங்கள் அறவே இல்லை
என்பதாக என்
அவநம்பிக்கைகள்
பிதற்றுகின்றன..!!


இந்த விளைவுகள் யாவும்
காலம் நிகழ்த்தியதாக
என் சோம்பேறி மனது
தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது..

திறன்கள் சோபையுறும்
என்று நம்பிய காலங்களில்
அதற்கான தளங்களை
அமைக்கிற
பொறுமையும் திறமையும்
அற்றிருந்தேன்..

--இன்று மெனக்கெட்டு
தளங்களை அமைத்து
என் திறன்களை அரங்கேற்றப்
பார்க்கையில் ....
-என் திறன்களும்
தளங்களும்
நவீன காலத்தின்
கேலி சித்திரங்களாக
இருப்பதாய் உணர்கிறேன்..!!

இன்றைய நவீனங்களுடன்
கை கோர்க்கிற திராணி
இழந்து கிடக்கிறது என் தன்மை..,
--இதனோடு தான்
பயணித்தாக வேண்டுமென்கிற
கட்டாயத்தை செருகி விட்டது
காலம்..!

-என் ஊனத்திற்கு
ஒரு மரத்திலான தடியே
போதுமானதாயிருக்கையில்
கால்களுக்கு சக்கரம் மாட்டி
உருள சொல்கிறது

காலம், சமூகம் எல்லாம்...



விந்தி விந்தியாவது
வாழ்ந்து விடப்பார்க்கிற என்னை
விரைந்தோடி மறைந்து விடு
என்கிறது நவீனம்...!!
                                                                ..
                                         
சுந்தரவடிவேலு...

4 comments:

  1. //
    -என் திறன்களும்
    தளங்களும்
    நவீன காலத்தின்
    கேலி சித்திரங்களாக
    இருப்பதாய் உணர்கிறேன்..!!
    //

    நல்ல திரனுடன் எழுதிய அருமையான கவிதை

    ReplyDelete
  2. //விந்தி விந்தியாவது
    வாழ்ந்து விடப்பார்க்கிற என்னை
    விரைந்தோடி மறைந்து விடு
    என்கிறது நவீனம்...!!//

    அழகான ஆழமான கவிதை....

    ReplyDelete
  3. thanks for your kind comments, mr.velu and mr.sangakavi..

    ReplyDelete
  4. விந்தி விந்தியாவது
    வாழ்ந்து விடப்பார்க்கிற என்னை
    விரைந்தோடி மறைந்து விடு
    என்கிறது நவீனம்...!!//

    நவீனத்துடன் போராடும்போது நாம் நவீனமாக்கப்படுகிறோம் நம்மையறியாமல் .

    சுந்தர வடிவேலு மிக அழகாக வார்த்தைகளை கோர்த்திருக்கீங்க..அருமை..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...