பெருவாரியான மனிதர்களுக்கு பிறர்க்கு உதவி புரிகிற போக்கே சற்றும் இல்லை என்பது மிகவும் வருத்தமும் கேவலமும் நிரம்பிய ஓர் தன்மை என்றே சொல்வேன்..
மிகவும் சுயநலமாய் இருப்பதை பெரிய லாபமாக கருதத்துவங்கி விட்டார்கள்... உதவுவதையே சங்கடமாயும் நஷ்டமாயும் உணர்கிறார்கள்... தனக்கு ஒரு பிரச்சினை வருகிற போது மாத்திரம் பிறரின் உதவிகளை எதிர்பார்க்கவும், கேட்டுப்பெறவும் துணிகிறார்களே தவிர, பிறரது பிரச்னைகளை தூசாக மதித்து மறைந்து விடுகிறார்கள்...
பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டவன் மேற்கொண்டு என்ன ஆவான் என்கிற கற்பனைகளுக்குகூட மனசில் இடம் கொடுக்காமல் அவர்களுடைய சந்தோஷங்களுக்கான பிரயத்தனங்களில் மூழ்கி விடுகிற கொடூர தன்மைகளுக்கு இலக்காகி விடுகிறார்கள் மனிதர்கள்....
சென்ற வாரம் ஒரு நாள் நான் கோத்தகிரி செல்ல நேர்ந்து திரும்ப நேர்கையில் நான் பயணித்து வந்த பேருந்து பின் சக்கரம் பஞ்சராகி நின்று போனது..சேட்டுப்பெட்டை என்ற இடத்தில்... கீழே விரைகிற எல்லா வாகனங்களும் தவித்து நிற்கிற எங்களைப்பார்த்து ஹோ ஹோ வென்று கத்திக்கதறி ஆர்ப்பரித்து கிண்டலடித்து விட்டுத்தான் செல்கிறார்களே தவிர கொஞ்சம் சில சில பேர்களாக ஏற்றி அடிவாரம் சேர்க்கலாம் என்கிற எண்ணம் எவர் வசமும் இல்லை...
மற்றொரு பஸ்ஸில் ஏற்றி விடலாம் என்கிற கண்டக்டரின் முயற்சிகள் கூட தோற்ற வண்ணம் தான் இருந்தன.. எல்லா பஸ்களும் நிரம்பி வழிந்தும் , டீலாவில் விழுந்து விடுவது போலவும் தான் வந்து கொண்டிருந்தன... அது போக உள்ளிருக்கிற பயணிகளும் நிற்காமல் போகச்சொல்கிறார்கள்...
கடைசியில் ஓர் ஜல்லி லாரி காலியாக வரவே, சிலர் லிப்ட் கேட்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.. இன்னும் சிலர் என்ன ஆனார்கள் எப்படி வந்து சேரப்போகிறார்கள் என்கிற கவலையோ பயமோ எங்களுக்குக்கூட இல்லை..
அப்போது தான் யோசித்தேன்... தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் எல்லா மனிதர்களுக்குள்ளும் அடியாழத்தில் சுயநலம் தான் ஆணிவேராக இருந்து எல்லாரையும் இயக்கி வருகிறதென்று..!!
இந்தத்தன்மையில் இருந்து விலகி சில ஞானிகளும் பெரிய உள்ளமும் கொண்ட மாமனிதர்களும் விரல் விட்டு எண்ணும் அளவு இருக்கலாம்... ஆனால் அநேகம் மனிதர்கள் மிகவும் கேவலமான மன அமைப்பில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை ..
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
சுய நலம் தேவை தான் ...
ReplyDeleteஎந்த எல்லை வரை என்பதிலிருக்கிறது அனைத்தும் ...
நல்ல இடுகை வேலு சார் ...
...............
உயிரோடு விளையாடும் dash களின் கல்லூரி...
http://neo-periyarist.blogspot.com/2010/05/dash.html