பிறர் அறிவுரை
கேட்கிற பிராயங்களை
கடந்து வந்ததாக நினைத்தாலோ
இன்னும் ஏதேதோ அறிவுறுத்துகிற
நபர்களையே சந்திக்க வேண்டிய
விதிகள் குறித்து சற்று கோபம் எனக்கு...
அடங்கிப்போகிற விஷயங்கள்
எல்லாம் சலிப்புத்தருகிறது, ஆகவே
அடக்கி ஆனந்தம் காண நினைத்தாலோ
மனைவியும் பிள்ளையுமே
கட்டாயக்கட்டளைகள் விதிக்கிறார்கள்
எதற்கேனும்... அடி பணிவதே
சாலச்சிறந்தது என்று மனசு வேறு
மௌனமாய் நியாயம் சொல்கிறது...!!
இறுமாப்பில் மார் தட்டி என் வழி தனிவழி
என்று பீற்றிய வீறாப்பெல்லாம் நாறிப்போய்
அற்ப விஷயங்களுக்கெல்லாம் பீதியடைந்து
வாயடைத்துப்போய் கிடக்கிறது வாழ்க்கை இங்கே..
மறுபடி முதலிலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து
வாழ்கிற சந்தர்ப்பம் வாய்க்குமேயானாலுமே கூட
இதே தவறுகள் தான் தொடர்ந்து என்னை
அபகரித்துக்கொள்ளும் என்பது என் திடமான அனுமானம்...
நம்பிக்கைகளை வைத்துக்கொண்டே இந்த வாழ்க்கையை
வாழ்தல் எளிதல்ல என்பது நிதர்சனமாயிருக்க
இத்தனை அபத்தமான அவனம்பிக்கைகளோடு
எப்படி அன்றாடம் என்னால் வாழ சாத்யப்படுகிறது?
---எல்லாமே ஓர் அடர்ந்த அனுபவம் தான்...!!!!
sundaravadivelu
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
ஏற்கனவே சுந்தரவடிவேல் என்பவர் பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்..
ReplyDeleteஎனவே உங்களுக்கான தனித்தன்மைக்கு வேறு பெயர் வைத்துக் கொள்வது நலம்.
நன்றி.
Also remove words verification.
ReplyDeleteமறுபடி முதலிலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து
ReplyDeleteவாழ்கிற சந்தர்ப்பம் வாய்க்குமேயானாலுமே கூட
இதே தவறுகள் தான் தொடர்ந்து என்னை
அபகரித்துக்கொள்ளும் என்பது என் திடமான அனுமானம்...
நல்ல வரிகள்.