மெகா பிஸிக்கல் அனிமேஷன் என்று இந்தப் படத்தை சொல்லப் பொருந்துமா?
அருவியும் பாறைகளும் கதாநாயகன் பறப்பதும் .. என்று எல்லாமே அனிமேஷன் என்ற போதிலும், மரகதமணியின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் யாவற்றுக்கும் ஒருவித உயிரோட்டத்தை, ஒருவித நம்பகத் தன்மையை சமர்ப்பிக்கின்றன..
போர்க்காட்சிகள் மிகவும் சவுண்ட் பொல்யூஷன் ..
போருக்கான அந்த உத்திகளும் அதற்கான வரைபடங்களும் முன்னேற்பாடுகளும் பிரம்மாதம் பிரம்மாண்டம் என்றால், அவை நிகழ்கையில் நமக்குள் நிகழ்கிற உணர்வுகளும் அதை விட..
தத்ரூபம் படம் நெடுக தாண்டவம் ஆடுவது போன்றொரு மாயை.. ஆனால் உற்றுப் பார்த்தால் யாவும் அட்டையில் அலங்கரித்து ஒட்ட வைத்த ஒரு வித மறைமுக செயற்கை .. அந்தக் கொட்டுகிற அருவி உட்பட ..!
கார்ட்டூனில் குதூகலித்து லயிக்கிற மழலை உணர்வோடு பெரியவர்களும் அகமலர்ந்து கொஞ்ச நாழிகை அரங்கினுள் ரசிக்கலாமே அன்றி, யதார்த்தத்தின் விலை என்ன என்று கேட்கிற வகையில் நாயகன் நாயகி என்று எல்லாரும் பட்டாம்பூச்சியாகப் பறந்து பந்தாடுகிறார்கள்..
இவர்கள் செய்த செலவின் உதிரிகளைப் பொறுக்கினாலே கூட நூற்றுக் கணக்கான "காக்கா முட்டை" போன்ற யதார்த்த சினிமாக்களை சுலபத்தில் எடுத்து விடமுடியும்....
ஆனால் தொடர் யதார்த்தங்களும் கூட சுவை குன்றியும் சலிப்பு ஏற்படுத்தியும் யதார்த்த சினிமாவை அசுவாரஸ்யமான ஒரு தளத்தில் சென்று விட்டுவிடக் கூடும்.. அதனால் தான், இப்படியான பிரம்மாண்டமான ஒரு "க்ளவுட் பர்ஸ்ட்"ட்டில் சிக்கிச் சீரழிந்துவிட்டு..
மென்காற்றில் வந்தொரு அமைதிப் பூங்காவில் அமர்ந்து இளைப்பாறுகிற அனுபத்தைத் தருகிற இயல்பான சினிமாவினுள் இழைகிற சுவாரஸ்யம் அமையப் பெறும் ..

ஒருவிதத்தில் இதுவே சரி...!
ReplyDelete