அற்புதமான சிறுகதை
[1]
இந்தக் கருவை நான் பலவாறாக யோசித்து, சிறுகதையாக, குறுநாவலாக, நெடுந்தொடராக.. பற்பல வடிவங்கள் சேர்க்க அவா கொண்டு எதுவும் எனது திறனுக்குப் பிடிபடுகிற லாவகத்தில் இல்லை என்பதைக் கண்டறிய நிறைய நாட்கள் செலவிட நேர்ந்து.. இப்போது, சிற்சில பத்திகளில் மட்டுமே அதனை எழுதி விடுகிற முடிவுக்கு வந்து விட்டேன்..
ராஜேஷுக்கு 'பணத்தேவை' இன்றைய நாட்களில் தீவிரமடைந்து கிடக்கிறது.. அது எல்லாருக்கும் எப்போதும் குறைந்த பாடில்லை, மற்றும் அதிகம் இருந்தாலும் இன்னும் இன்னும் தேவை என்கிற மனோபாவத்தில் சிக்குண்டு கிடக்கிறோம்..
இந்த சர்ப்ளஸ் போறும் .. இனி மேற்கொண்டு இல்லாதவாளுக்கு கொடுத்திடலாம் " என்கிற பாங்கு, என்கிற போக்கு இன்னும் புழக்கத்தில் வராமல் புழுக்கத்திலேயே இருக்கிற துரதிர்ஷ்டங்கள் மனிதத்துக்கு நேர்ந்த பெரிய சாபக் கேடு என்றே அனுமானிக்க முடிகிறது..
ஆனால் ராஜேஷ் மாதிரி நெஜமாலுமே பற்றாக்குறையோடு இந்தக் காலத்தை அனுசரிப்பது என்பது அதைவிடப் பெரிய 'கர்ஸ்' என்றே சொல்லணும்..
எல்லாரையும் குத்தம் சொல்றதா கோவிச்சுக்காதீங்கோ.. கொஞ்சம் பேரு, மனசாறக் கொடுக்கத்தான் கொடுக்கறா.. ஆனா, அந்த மாதிரி நடமாடுகிற கலியுக தெய்வங்கள் ரொம்ப சொற்பப் பேருன்னு சொல்றேன்..
மெஜாரிட்டி- செல்ஃபிஷா, பத்தாக்குறையா, தட்டிப் புடுங்கறவாளா தான் இருக்காங்கோ.. மைனாரிட்டி தான் தன்னுடைய தேவை மீறி கொஞ்சம் இருந்தாலும் விநியோகம் செஞ்சுடறா .. இன்னும் செல பேரு, தனக்குத் தேவை இருந்தாக்கூட இல்லாத மத்தவாளுக்கு டிஸ்ட்ரிபியூட் செய்யற தன்மையோட இருக்கா.. அவாதான் சத்தியமா ISI , ISO 9001, அக்மார்க், அசல் நெய்ங்கற மாதிரி, அசல் மனுஷா.. இல்லைல்ல ... அசல் காட் ..
இப்பக் கூடப் பாருங்க.. ஒருபக்கக் கதையா இதை முடிச்சிடலாம்னு பார்த்தா காவியமா நீளப் பார்க்குது..
ராஜேஷ் தனக்கொரு குறைந்த விலை பைக் வாங்குவதை 'கனவாக' விதைத்து வருடங்கள் தாண்டிக் கூட இன்னும் முளை விடாது முடங்கி மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்க் கிடந்தது அவனது கனவு..
இவை போக மனைவி குழந்தைகள் தேவைகள் .. எப்போது எங்காவது குடும்பமாக வெளியே செல்ல நேர்கையிலும், அண்டை வீட்டாரிடம் மொபெட்டை கடன் வாங்கி பெட்ரோல் நிரப்பிப் போய் வரவேண்டியதாகவே உள்ளது..
கோவில், ஹாஸ்பிடல், சினிமா, பார்க் என்று எதையாவது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கொட்டிக் கொண்டே கிடக்கிற மூர்ச்சை அவனை இந்தக் காலகட்டம் "பைக்" என்கிற ஒன்றை மறுபடி வீரிய விதையாக மனதுள் மாற்றி விதைத்து , இந்த முறை முளைத்தே தீருவது என்கிற தீர்மானத்தோடு பயணிக்க வைத்திற்று..
ஆனால் எங்கனம் என்கிற கேள்வி தான் பெரிய ஆதங்கமாக அவனில் இடம் பிடித்திருந்தது..
வெறும் கையை நக்கிக் கொண்டிருந்தவனுக்கு கொம்புத் தேன் உள்ளங்கையில் வார்க்கப் பட்டால்?
மரணவிலாஸில் மைதாப்
பரோட்டாவை மாங்கு மாங்கென்று பிய்த்து குருமாவைக் குழைந்தடித்துப் பசியாற்றிக் கொண்டிருந்தவனுக்கு லீ-மெரிடியனில் தினசரி விருந்தென்றால்?
அப்படியாயிற்று ராஜேஷுக்கு நேற்று இரவு.. யெஸ் .. வேலையிலிருந்து இரவு நடந்தவாறு வீடு திரும்பிக் கொண்டிருந்தவனுக்குக் கீழே ஒரு தங்கப் புதையல் கிடைத்தது..
1 லட்சம் ரூபா ரொக்கம்.. மற்றும் ஆறேழு சவரனில் அட்டிகை என்று அந்த மஞ்சள் பை அவனது கஷ்ட காலத்திற்கு என்றே சிருஷ்டிக்கப் பெற்றிருந்தது..
[2]
இடைவேளை முடிந்த பிறகாவது ராஜேஷ் பைக்கில் பறப்பானா மாட்டானா என்று எனது ரசிகர்ப் பட்டாளம் ஏங்கிக் கிடப்பதை என்னால் சுலபத்தில் அனுமானிக்க முடிகிறது..
ஆனால் ரசிகர்களே, அப்படி இல்லை என்கிற வருத்த செய்தியை உங்கள் முன்னிலையில் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்..
பிரபல எழுத்தாளரான நான் சிருஷ்டிக்கிற இந்தக் கதையில் வருகிற நாயகன் அப்படி ஈவிரக்கமற்றவனா என்ன?
இப்பவும் அவன் அதே பைக்" கனவில் தான் உலா வந்து கொண்டிருக்கிறான். அன்று இரவு முழுதும் மனைவியிடம் குழந்தைகளிடம் பற்பல திட்டங்களை இனி சுலபத்தில் நிவர்த்தி செய்து கஷ்டங்களில் இருந்து ரிலீஸ் ஆகப் போவதாக பிதற்றித் தீர்த்தான்..
ஆனால், அந்த மஞ்சள் பையை இழந்தவர்களின் அழுகையும் கேவலும் அடுத்த நாள் செய்தியாக எல்லா ஊடகங்களிலும் வியாபிக்கத் துவங்கி.. நம்ம ஹீரோ ராஜேஷ், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் சென்று அதனை ஒப்படைத்து "நேர்மையின் மாவீரன்" என்கிற மெடலைப் பெற்று திரும்பி வந்தான்..
அந்தப் பணத்தைத் தொலைச்ச பேமானி, ஒரு டென் பெர்செண்டேஜ் போட்டு ஒரு பத்தாயிரம் ரூபா அன்பளிப்பா கொடுத்திருந்தா கூட ஏதோ பைக் வாங்க முன்பணமா கட்டி 'ஈ.எம். ஐ - ல ஒரு 24 மாசமோ 36 மாசமோ போட்டு எடுத்திருக்கலாம்..
"ஒங்க நேர்மை தான் ஸார் இந்த இந்தியாவுக்கு நிறையத் தேவை" என்று பிரம்மாதமாகப் பாராட்டி ரூ.500 ஐ சட்டைப் பாக்கெட்டில் அவன் 'வேண்டாம் சார்' என்று சொல்ல சொல்லத் திணித்து அனுப்பினார் அந்த சிமெண்ட் ஃபேக்டரி ஓனர் ...

நேர்மை... அருமை...
ReplyDeleteஆச்சர்யம் ..... இன்னும் நாட்டில் இப்படியும் இருக்கிறார்கள்.....
ReplyDeleteNice!
ReplyDeletethanks vijay..
Delete