Sunday, February 15, 2015

அனேகன்

அனேகன் .. பார்த்தேன்.
இதுவரைக்கும் வழக்கிலே கேள்விப் படாத வார்த்தை.. அகராதியில் பிடித்திருப்பார்கள் போல.. நான், அநேகமாக எதற்காகவும் அகராதியைப் புரட்டுவதில்லை.. , அதுவும் குறிப்பாக தமிழகராதி எனக்கு மிக அந்நியம் .. !!
Image result for BURMA DHANUSH ANEGAN
இந்தப் படத்தை விமரிசிக்க ஒரு பிரத்யேகத் திறமை தேவைப் படுகிறது என்பது என் வாதம்.. நானெல்லாம் கத்துக்குட்டி ஆகவே, எமது விமரிசனத்தில் ஒரு மெச்சூரிட்டி இருக்குமா என்பது எனக்கே சந்தேகம் தான்.. 

3 பிறவிக் கதை.. அங்கங்கே அதற்கான தளங்கள் பிளவு பெறுவதும் சம்பவங்கள் கோர்க்கப் படுவதும் மஹா ஜிம்மிக்ஸ்.. 
தனுஷின் பர்மா கெட்-அப் .., அப்புறம் பலே பாண்டியா கெட் அப் , அண்ட் தென் , ப்ரெசென்ட் , ஐ மீன், நிகழ்கால ஐ.டி ஃபீல்ட் ஆஃபீஸ் கோயர் .. 

அனைத்துப் பிறப்புகளிலும் காதலியும் [ஏழேழு பிறவியிலும் ஒனக்கு நான், எனக்கு நீ தான் புள்ளே என்பது போல] நண்பனும் இன்ன பிறரும் ஒரே.. 

 அந்தந்தக் கால கட்டத்துக்கு ஏற்றார் போன்று வலம் வருகின்றனர்.. 

இந்தக் கூத்தெல்லாம் இதுவரைக்கும் தமிழ் சினிமா சந்தித்திராத  டிப்பிக்கல் சமாச்சாரங்கள்.. ஆகவே சுலபத்தில் வாய்க்குள் ஈ புகுவது கூட புலனாகாத வகையிலே  அலங்கமலங்க அண்ணாந்து பார்க்கிறோம்.. 

டப்பாங்கூத்து, மெலடி என்று பாடல்கள் வகையறா வகுத்துள்ளன.. 
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னிப் பெடலெடுக்கிற பீ.ஜி எம் .. [என்ன தான் பண்ணாலும் நம்ம ராஜா bgm மாதிரி எதுவும் மனசுல நிக்கறது இல்லேங்கறது இன்றைய பொதுவான யதார்த்தம்] 
இன்றைய நவீனத்துவ டெக்னிக்கோடு ஜொலிக்கிற ஒளிப்பதிவு.. நேர்த்தியான எடிட்டிங்.. என்று அனைத்து விஷயங்களுமே லக்ஸூரி பொதிந்துள்ளதை மறுப்பதற்கில்லை.. 

அப்புறம் தனுஷின் அனாயாச  நடிப்பு.. அந்தந்த காரக்டாராகவே மிக இயல்பாக மாறி  விட்டிருப்பது ரசிகர்களுக்குக் குதூகலம்.. நாயகியும் எல்லா பிறவி தனுஷுக்கும் ஏற்றார் போன்று வருவது இன்னொரு ஆச்சர்யம்.. 

இப்படி இல்லாத நடக்காத நடக்க முடியாத  சம்பவங்களைப்  புனைந்து விருந்து படைத்துள்ள k v .ஆனந்துக்கு அப்ளாஸ்.. 
இப்படி எல்லாம் நடந்தா எப்டி ஜாலியா இருக்கும்? ஒருக்கால் இப்படி எல்லாம் தான் நடக்குமோ? என்கிற ஆசைகளும் அனுமானங்களும் நமக்குள் ஒரு புது டெம்போவை  ஏற்றுகிறது என்றால் அது மிகையன்று.. 

லாங் இண்டர்வல் விட்டு கார்த்திக் வந்து கொஞ்சம் ஜாலி செய்கிறார்.. அவரது நடவடிக்கைகள் படத்தின் சென்ஸிடிவ் சஸ்பென்ஸ்.. அதை இங்கே உடைத்து உங்களது வாச்சிங் மூடை அப்செட் செய்ய வேண்டாமே.. 

அரதப் பழைய அரைத்த மாவுகளை  அரைத்து நம்மையும் போட்டு அரைத்தெடுக்கிற  எவ்வளவோ  அரைவேக்காட்டுப் படங்களுக்கு மத்தியில் இப்படியான  மைண்ட் புலோயிங் இமேஜிநேஷனும் தேவை தான்.. ஜாலி லாகிங்..  என்ஜாய் டியூட்ஸ்.. யா.. லேடீஸ்க்கும் பிடிக்கும்.. ஏன்னா, என்கூட என் மனைவியும் வந்திருந்தாள் .. ரசித்ததாக சொன்னாள் .. 

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...