Monday, May 21, 2012

இம்சையும் அவஸ்தையும் ...


பிளாகில் இப்போது வேறு மாதிரியாக ஒரு சாப்ட்வேர் உபயோகிக்கிறார்கள்.., தமிழில் டைப் செய்யவே மிகவும் டென்ஷனாக உள்ளது... நாம் டைப் செய்கிற வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் அச்சாகிறது... ஒரு வார்த்தை நிறைவு பெற்ற பிறகே இங்கே வந்து சேர்கிறது... சலிப்பாகவும் எரிச்சலாகவும் உள்ளது.. முந்தைய சுலபத்தோடு ஒப்பிடுகையில் இது பேராவஸ்தையாக உள்ளது..
எதற்கு இப்படி எல்லாம் மென்பொருள் கண்டுபிடித்து நம்மைக் கடுப்பு ஏற்றுகிறார்களோ புரியவில்லை..


முந்தைய ஆப்ஷன் இப்பவும் உள்ளதா என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்... என்னால் அதனை கண்டு பிடிக்க முடியவில்லை... நான் ஜிமெயில் கம்போசிங் போய் இப்போது எழுத வேண்டியுள்ளது...


ஓர் புதிய உத்தி என்பது உபயோகிக்க சுலபமானதாகவும் முந்தயதைக் காட்டிலும் பாராட்டத் தக்கதாகவும் இருக்க வேண்டும்.. அதுவல்லாமல் இப்போதைய தன்மை இம்சை தருவதாக இருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது... இந்தத் தகவல் எவர் காதுகளுக்குப் போகுமோ... மறுபடி எவர் இதனை பழையபடிக்கு மாற்றி அமைப்பரோ அறியேன்... அப்படி பழையபடிக்கு மாற்றுவது சாத்யமா என்பதும் புரியவில்லை..

1 comment:

  1. google tamil input method என்று ஒன்று இருக்கிறது. அதை தரவிறக்கி உபயோகப்படுத்துங்கள். நன்றாக இருக்கிறது. தரவிறக்க கீழுள்ள நிரலியை சுட்டுங்கள்.
    http://www.google.com/ime/transliteration/

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...