கன்சல்டிங்குக் காக ஆசுபத்திரி போயிருந்தேன் ... அதாவது எனது இதயம் சார்ந்த பிரச்சினை குறித்து... E C G ECHO TMT BLOOD GLUCOSE என்று எல்லா டெஸ்ட்களையும் எடுத்து ஓர் ஐந்தாயிரத்தை பழுக்க வைத்து விட்டார்கள்..
கையில் ஐநூறு ரூபாய் இருந்தால் கூட பைக்குக்கு நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுவதற்கு அங்கலாயக்கிற நம்மால் டாக்டரிடம் மட்டும் பேரம் எதுவும் பேச முடியாமல் கேட்டதை அவிழ்க்க வேண்டிய சூழ்நிலையை யோசிக்கையில் ஏனோ பைக்கின் மீது ஓர் பாசமும் கவலையும் கலந்த ஓர் உணர்வு ...
ரஜினி படத்துக்கு கூட முதல் ரெண்டு வாரமோ நாலு வாரமோ தான் கூட்டம் இருக்கும்... இந்த ஆசுபத்திரியிலோ ஒவ்வொரு நாளும் முதல் நாள் ரிலீஸ் ஆன ரஜினி படம் போல தான் பரபரப்பு...
ரஜினி படத்துக்கு கூட பிளாக்கில் டிக்கட் கிடைத்து விடும்.. இங்கே கொஞ்சம் தாமதம் ஆனாலோ அடுத்த வாரம் வரச்சொல்லி அனுப்பி விடுவார்கள்..
திருப்பதி போலவே எப்போதும் நிரம்பி வழிகிறது ஆஸ்பத்திரி...
கையைத் திருகாமலேயே நோயாளிகளிடம் காசைப் பிடுங்குகிறார்கள் என்பது ஓர் நியாயமான குற்றச்சாட்டு தான் என்ற போதிலும், மனிதர்களுக்குப் பிரச்னை என்று நேர்கையில் வேறு எங்கு தான் தீர்வு கிடைக்கப் போகிறது, இந்த ஆசுபத்திரிகளைத் தவிர??
ஆம்புலன்சு டிரைவர் ,
"எவனாச்சும் அடிபட்டுக்
கெடக்க மாட்டானா ?"
என்று தனது
பிசினசை பிக்கப்
செய்யப் பார்க்க....
செத்துருவான்னு
தெரிஞ்சாலும்
பொழைக்க வைக்கப்
போராடுகிற நடிப்பில்
சிவாஜிகணேசன்
தோற்கவேண்டும்
டாக்டர்களிடம்..
பொழச்சிருவான்னு
தெரிஞ்சாலோ
வீ ட்ரை அவர் பெஸ்ட்
என்று சொல்லி
தெய்வமாகி விடுவர்
அதே டாக்டர்கள்..
நீ நகைய அடகு
வச்சா என்ன
கொள்ளை அடிச்சா
என்ன..
பில்லுக்கு பணத்தைக்
கட்டினா தான்
அவுரு போராடி
தோத்துப்போன
டெட்பாடி நம்ம
கைக்குக் கெடைக்கும்..
பெஸ்டா அவுரு
ட்ரை பண்ணி
பொழச்ச பேஷன்ட்
திரும்ப வீடு வருவாரு..
இது உன்னோட
மறு பெறப்புடா ராசா ன்னு
அழுது வரவேற்கிற
வெள்ளந்தித்
தாயைப் பார்த்தால்
கூட எந்தக்
குற்ற உணர்வுகளும்
எந்த டாக்டர்களுக்கும்
வரவே வராதென்பது
பயித்திய காரனுக்குக் கூட
புரிந்த யதார்த்தம்...!!
No comments:
Post a Comment