நோய் குறித்து
விசாரிப்பவர்கள்
அதற்கான செலவுகளையும்
விசாரிக்கிறார்கள்...
எனக்குத் தெரியும்..
நோய்கள் குறித்தும்
அவர்களுக்கு அக்கறையில்லை..
அதற்கான செலவுகள் குறித்தும்..!!
செலவு இத்தனை லட்சம்
என்கிற போதான
அவர்களது ரகசிய மலர்ச்சி
எத்தனை நோயாளிகளுக்குப்
புரிபடுமோ தெரியவில்லை..
"--பிரச்சினையில்லை..
செலவுக்கான காப்பீட்டுத்
தொகை வந்துவிடும்"
என்கையில் ..
நோயாளியின் வியாக்யானம்
குறித்து ஓர் ஆற்றாமையை
பார்க்கலாம் அவர்கள் முகங்களில்...
" "நோய்வாய்ப் படவேண்டும்..
செலவாகவேண்டும்..
அதற்கென பிரத்யேகமாக
கடன்பட வேண்டும்...
முக்கியமாக
இன்சூரன்ஸ் பாலிசி
எதுவும் எடுக்காமலிருக்கவேண்டும்.." "
--அநேகமாக
இப்படி யோசிப்பவர்கள்
எல்லாம்
முன்னர் இவனிடம்
கடன் கேட்டுப்
பெறமுடியாதவர்களாகவே
இருக்கக் கூடும்...!!
சுந்தரவடிவேலு....
No comments:
Post a Comment