Thursday, March 31, 2016

ஒரு ஊர்ல..

தனாலோ அலகு 
உடைந்திருந்த காகம் 
ஒன்று.. பறக்கிற 
உத்தேசத்தைத் 
தள்ளிப் போட்டுவிட்டு 
வழிப் போக்கர்களின் 
உதவி நாடி நின்று 
கொண்டிருந்ததாக 
அதன் கேவல் உணர்த்திற்று.. 

மனித அரவம் கேட்டாலே 
சுளீரென்று பறந்து விடுகிற 
பறவை.. 
எவரேனும் புறங்கைகளால் 
கவ்வி.. அதன் 
மண்டை கழுத்துப் 
பிராந்தியங்களை 
வருடி விட்டால் தேவலாம் 
என்கிற பாவனையை 
எனது ஆறாம் அறிவு 
உணர்ந்தது.. 
Image result for crow catch
உணர்ந்ததை செய்கிற 
உன்னத ஆற்றல் 
அறவே அற்றவன் நான். 
ஆகவே அந்த 
அனுமானங்களினூடே 
கடக்கிறேன்.. 
திரும்பப் பார்க்கிறேன் மறுபடி.. 
'இத்தனை பாதாசாரிகளில் 
எமது நிலையை சரிவர 
உணர்ந்தவன் நீ ஒருவனே. 
நீயும் வெறுமனே 
வேடிக்கை பார்த்து விட்டு 
நகர்ந்தால் எப்படி?'
என்பதாகக் கரைந்தது 
அந்த பலவீனக் காகம். 

கோழி தூக்கவே 
முகம் சுழிக்கிற நான். 
திரும்ப சென்று அந்தக் 
காகம் தூக்கிக் கொண்டேன்.. 
மிருகவைத்தியரின் 
விலாசம் விசாரித்து 
அதன் அலகுக்கான 
மருத்துவத்தைத் துவக்கச் 
சொன்னேன்.. 

பாப்பாவுக்கு கிரைப் 
வாட்டர் வாங்க வைத்திருந்த 
காசை அதன் 
சிகிச்சைக்காக அளித்தேன்.. 

ஒரு நாயின் நன்றியுணர்வை 
முதன்முதலாக அந்த 
அலகிழந்து நிற்கிற 
காகத்தின் கண்களில் 
காணமுடிந்தது  
எமது ஆறாம் அறிவுக்கு.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...