
என்னை வழி மறிப்பது
பேயெனிலும் நிற்பவன்
நான்..
ஓர் அழகிய பெண்
மறித்தால் ?
எனது யமஹாவை
உடனே ஓரங்கட்டினேன்..
வரவேண்டிய பேருந்து
வரவில்லை என்றோ
அவள் வரும் முன்னரே
சென்று விட்டதாகவோ
அவள் சொன்ன எவையும்
எமது பிரக்ஞையில்
நுழையக் காணோம்..
பில்லியனில் உடனடியாக'
வந்தமர வேண்டுமென்பதே
எமது உடல் செல்களின்
துரிதமேயன்றி
மற்றவை யாவும்
அற்றவையே.. !!
குண்டுகுழிகளில்
ஸ்பீட் ப்ரேக்கர்களில்
நான் அப்ளை
செய்யவிருக்கும்
அந்தப் பொன்னான
பிரேக்கு-களுக்காக
நீ தயாராகி விட்டாய்
என்றுமது அருகாமை
அறிவித்துவிட்டது பெண்ணே..
மிக சொற்ப கிலோமீட்டர்களே
உமது இலக்கென்ற போதிலும்
அவைகளை அடர்த்தி
செய்வது என் மான்பன்றோ ?
உமது அவசரத்தை
எனது தாமதம் ..
மற்றும் எனது
தாமதத்தை உமது
அவசரம் ..
பரஸ்பரம் எதுவும்
செய்வதற்கில்லை
என்கிற போக்கில்
நிகழ்ந்தது பிரயாணம்..
மறுபடி நம்
தொடர்புக்கென
மொபைல் எண்கள்
பரிமாறப் பட்டாக வேண்டும்..
இரண்டாம் சந்திப்பை
காதல் தளத்திற்குக்
கொண்டு சேர்க்க வேண்டும்..
பிரதீப்பை பைக்
டாங்க்கின் மீதும்
உறங்குகிற
குட்டி லாவண்யாவை
உனது மடியில் வைத்தும்
பிடித்துக் கொள்ள வேண்டும்..
'நால்வர் செல்ல சிரமம் மாப்பிள்ளே..
மகிழுந்துக்கு மாறுங்கள்'
என்கிற உன் தந்தையின்
அன்பு வேண்டுகோள்..
"பஸ் மிஸ் ஆயிடித்து..
பைக்ல ஒரு பனாதி
டிராப் பண்றான்.. வேணும்னே
ஸ்லோவா ரைட் பண்றான்..
நான் எதுவும் சொல்றதுக்கு
இல்லே.. இன்னைக்குக்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க
ப்ளீஸ்.. "
என்கிற உமது கொஞ்சல்
நல்ல வேளையாக என்னுடைய
செவிப் புலன்களுக்கு
எட்டவில்லை..!
என்னுடைய ..
நம்முடைய எதிர்காலம்
குறித்த ஆழ்ந்த
சிந்தனைகளின் நிமித்தம்.. !!

No comments:
Post a Comment