Friday, March 25, 2016

முடி.

சீவி சிங்காரிக்கத் தோதாக ஒரு பிராயத்தில்  அடர்ந்து படர்ந்திருந்த தலைமுடி மற்றொரு பிராயம் தரிக்கையில் உதிர்ந்து காணாமல் தலையை சொட்டையாக்கி .. நரைத்து .. என்கிற ரீதியில் ஒரு மனிதனை எவ்வளவு கேவலப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அடாத கேவலத்தை அவன் சாகும் வரைக்குமாக உடனிருந்து பொறுப்பாக செய்து முடிக்கிறது கேசம்.. 

நரை விலக கருஞ்சாயங்கள் .. சில தோல்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி சொறி சிரங்கு போன்ற ரணகளம் நிகழ்த்தி விடுகின்றன சில சாயங்கள்.. முடிபோச்சே என்கிற கவலை விலகி.. மூஞ்சியே போச்சே என்கிற பெருங்கவலை தொற்றி .. நடைபிணமாக நேர்கிறது சிலருக்கு.. 

சாயம் பொருந்திப் போகிற சில நரைமுடியாளர்களுக்கு சற்றே பந்தா காலங்களை புதுப்பித்துக்  கொள்ள முடிகிறது.. 
இன்னும் சிலரோ சாயத்தையே சவுரி போன்று கருதி தவிர்த்து அந்த சுண்ணாம்புத் தலையோடே சுழன்று வரத் துணிகின்றனர்.. 

தொடு உணர்வற்ற நமது அவயவத்தின் முடிகளும் நகங்களும்  நம்முடைய அலங்காரப் பிரக்ஞையின் நெருங்கிய வஸ்துக்களாக படைக்கப் பெற்றிருப்பது  ஒரு விபரீத ஆச்சர்யத்தை உணரத் தான் முடிகிறது சற்றே யோசிக்கையில்..!!


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...