Wednesday, March 16, 2016

இனி வரும் நாட்களில் ??

என்னைக் 
கண்டு
குதூகலமாகப்
புன்னகைக்கிற
உன்னுடைய
குழந்தையை நீ
ஏன் மிரட்டலாகப்
பார்த்துக் கண்டிக்கிறாய்?

ஓடோடி வந்து
உன்னிடம் வாங்கி
அதனைக் கொஞ்சத்
துடிக்கும் எனது
ஆசையை நான்
துவம்சம் செய்ய
வேண்டியுள்ளது..

உன்னையும் குழந்தையையும்
மவுனமாகக் கடந்து
நடையிடுகிறேன்..
அதன் புன்னகை
என்னைத் திரும்பிப்
பார்க்கத் தூண்டுகிறது..
ஆனால் நீ
உன்னைப் பார்க்கத்
திரும்புவதாக
தப்பர்த்தம் கொள்வாய்..

அடுத்த நாள்..
அழும் உன் குழந்தைக்கு
உணவு புகட்டிக்
கொண்டிருந்தாய்..
கடக்கிற என்னை
"அங்கிள் பாரு"
என்று விரல் நீட்டி
உணவைத் திணிக்கிறாய்..
அதுவும் அழுகை
மறந்து என்னைப்
பார்த்து உணவைப் 
பெற்றுக் கொள்கிறது.. 

மறுபடி நான்
நகர்ந்து விடும் பட்சத்தில்
அடுத்த வாய் உணவை
மறுதலித்து விடுமோ
என்று பயந்து
அங்கேயே சற்று
நின்று விடுகிறேன்..

மறுநாள்..
இன்னும் குழந்தை
தூங்கி எழவில்லை
போலும்..
நீ மட்டுமே
நின்றவண்ணம்
இருக்கிறாய்....

உன் குழந்தையின்
அந்த முதல் நாள்
புன்னகையை
உன்னிடமும் கண்டு
பதிலுக்கு நானும்
புன்னகைத்து
சிலிர்த்துக் கடக்க
நேர்கிறது..

மேற்கொண்டு
நடப்பது பிடிபடாமல்
அப்படியே மண்ணில்
புதையுண்டு போக
அல்லது காற்றில்
கரைந்து போக
ஏங்கியது மனது..

குழந்தையுள்ள
உனக்குக் கணவனும்
இருப்பான் என்கிற
அறிவு .. கள்ளக்
காதல் செய்யத் துணிகிற
களவாணிகளுக்கு
அறவே அற்றுப்
போய் விடும் போலும்.. !!

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...