Saturday, February 23, 2013

பொய்மைகளின் அணிவரிசை...

ல்லை இல்லாதது
போன்ற பாவனைகளுடனே
எல்லாமும்
பயணிக்கின்றன...

நாளைக்குச்
சாவது தெரியாமல்
நானூறு
கணக்கு வழக்குகள்
மனசுக்குள்...

இன்றைக்கே
செத்துவிடுவோமென்று
இருக்கிற யாவற்றையும்
ஒப்படைத்தாலோ,
-அப்படி நடந்து
வருடம் ரெண்டாகியும்
சாவதாகக் காணோம்..
ஆகவே கொடுத்ததை
வாபஸ் கேட்பதாக
ஓர் தர்மசங்கடமான
உத்தேசம்...

இரும்பென
இறுகிக் கிடந்த காதல்
கடலுப்புக் காற்றில்
துருப் பிடித்து
உதிர்ந்து விடுவதும்...

வேண்டா வெறுப்பாக
செய்து கொண்ட கல்யாணம்
பிள்ளை ரெண்டு
பெற்றும்
சுவாரசியம் துவண்டு
விடாத அதிசயமும்...

இவ்வளவு
முரண்களோடு
நிரம்பி வழிகிறது
இந்தப் பிரபஞ்சம்..

உயரம் சென்று
இந்த மனித இயக்கங்களை
கவனிக்கையில்
பொத்தாம் பொதுவாக
எல்லாமே சுபிக்ஷம்
என்கிற விதமாக
ஓர் மாயை ஊடாடுவதை
தரிசிக்க முடிகிறது.

பூமிக்கு வந்து
ஓர் ஆடவனை
விசாரிக்கையில் ...
வாழ்க்கை அவனுக்குப்
பீதியில் பிய்ந்து
போய் கிடக்கிறது..

ஓர் ஸ்திரீயை
விசாரிக்கையில்
நைந்து போய்
நாறிக் கிடக்கிறது...

ஆனால் அவன்
சட்டையை இன் பண்ணி
டை கட்ட மறக்கவில்லை..
அவள்-
லிப்ஸ்டிக்கை
உதடுகளில் தோய்த்து
கால்களுக்கு ஹைஹீல்ஸ்
போட மறக்கவில்லை..!!

4 comments:

  1. உலகமே ஒரு நாடகம் எனபதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்...

    ReplyDelete
  2. அருமையான படைப்பு! எதார்த்த பார்வை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. MY HEARTY THANKS TO BOTH OF YOU FOR YR KIND REVIEWS ABOUT MY LITTLE IDEA

    ReplyDelete
  4. //இவ்வளவு
    முரண்களோடு
    நிரம்பி வழிகிறது
    இந்தப் பிரபஞ்சம்..// உண்மைதான் ...
    மிக அழகான கவிதை ....

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...