Skip to main content

விஸ்வரூபம் ... விமரிசனம்???

படம் ரிலீசான ஏழாம் தேதியில இருந்து "ஐயோ.. பார்த்துடனுமே... மறுபடி எங்கியாச்சும் பான் பண்ணிட்டாங்கன்னா வம்பா போயிடுமே " என்றெல்லாம் ரொம்ப பீல் பண்ணி, எப்டியோ இன்னைக்குப் போயி பார்த்தே பார்த்துட்டேன்..

நானும் மனைவியும் பாப்பாவை அழைத்துக் கொண்டு போகணும் என்பதாகத்தான் திட்டம்... ஆனா கடவுள் ரொம்பக் கருணை உள்ளவர்னு நினைக்கிறேன்.. "பாப்பாவுக்கு ஒடம்பு கொஞ்சம் சரி இல்லைப் போல இருக்கு.. பார்த்துட்டு நாளைக்குப் போகலாம்" சொன்னாலோ இல்லையோ, "சரி, மொதல்ல நான் போயி ஒருக்கா பார்த்துட்டு வந்துர்றேன்.. பெறகு நீ நான் பாப்பா போலாம்" ன்னு சொன்னேன்..

தனியா போயி பார்த்தது ரொம்ப நல்லதா போச்சு.. அவுகளக் கூட்டியாந்திருந்தா நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..

எதுக்கு கமல் இவ்ளோ தீவிரமா யோசிச்சு "அல் - கொய்தா" இயக்கம் பற்றி எல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி, ஆப்கானிஸ்தான் போயி ஷூட் பண்ணி, நம்மையும் ஒரு ரெண்டு மணி நேரம் ஒரு விபரீத இடத்துக்கு அழைத்து சென்ற ஓர் தத்ரூபத்தை ஏற்படுத்தி .. இம்சித்து விட்டாரென்றே எனக்குத் தோன்றுகிறது..

ஓர் அலி போன்ற தோற்றத்தில் தோன்றி , கதக்கலியோ குச்சிப்பிடியோ ஆடி, அய்யர் பாஷை பேசி, ஒரே பாட்டை பாடி, மனைவி போல ஒருத்தியும், தோழி போல ஒருத்தியும்..

அந்த சூழ்நிலைகளை கிரகித்துக் கொள்ளவே ஓர் பிரத்யேக அறிவு அவசியப் படுகிறது.. பொத்தாம் பொதுவாக எவரைக் கேட்டாலும் "படம் சூப்பர்" என்று ஓர் ப்ரெஸ்டீஜ் இஷ்யு வுக்காக எல்லாரும் சொல்லி விட்டார்களோ என்று கூட எனக்கொரு சந்தேகமுண்டு.. "ஒன்னும் பிடிபடலை", "படம் அறுவை" என்றெல்லாம் சொன்னால்  முட்டாள் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்தே அநேகம் பேர்கள்  இந்தப் படம் குறித்து பொய்யாகவாவது பாசிட்டிவாக  பேசி விட்டார்கள் என்று அனுமானிக்கிறேன்..

தைரியமாக நான் சொல்கிறேன்.. "எனக்கு விஸ்வரூபம் பிடிபடலை"... இதை சொல்ல  எனக்கென்ன வெட்கம்?..

இப்படி ஓர் நெளிவு சுழிவான திரைக் கதையைப் புரிந்து கொள்கிற டெக்னிக்கல் புத்தி  உள்ள நபர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.. ,மற்ற அப்பாவி ஆடியன்ஸை  கமல் அம்போ வென்று விட்டு விட்டார்..
என்னவோ நாங்கெல்லாம் அதிகபட்சம் அறுபது எழுபது ஆயிரங்கள் போட்டு ஓர் பைக்கை வாங்கி ஓட்டுகிற தகுதியில் மட்டுமே இருக்கிறோம்..

அய்யா கமலஹாசா.. நீர் பாட்டுக்கு ஒரு பாரீன் மேட் பைக்கை, அதுவும் லிட்டருக்கு  பத்து கிலோமீட்டர் கிடைக்கிற முப்பது லட்சம் நாற்பது லட்சம் மதிப்புள்ள பைக்கை வந்து  பந்தாவாக ஓட்டிக் காண்பித்தால், வாயில் ஈ புகுவது கூடப் புரியாமல் "பே" வென்று வேடிக்கை பார்த்து வியக்கிறோம்..

சும்மா தடாலடியாக குண்டுகள் வெடிக்கின்றன.. நம்ம படம் பார்க்கிற தியேட்டர் சீட்டுக்கடியில் குண்டு  வைத்தது மாதிரி சும்மா அதிருதில்ல?

யதார்த்தமாக சொல்லப் போனால், ஒரு ஆங்கிலப் படம் கூட வெடுக்கென்று புரிந்து விடும் போலிருக்கு.... , ஆனா, இந்த வி.ரூபம்    ம்ஹ்ம் ..

பலமுறை இந்த விஸ்வரூபத்தை யூ டியூபில் ட்ரைலர்களாக கண்டு களித்து விட்டேன்.. அந்த ஆர்வத்தில் இந்தப் படத்தைப் பார்க்கப் போனால், படம் முழுக்கவே ரெண்டரை மணி நேரங்கள் ட்ரைலர் பார்க்கிற உணர்வே வியாபித்ததே அன்றி முழுநீளமாக ஓர் படத்தை பார்த்த உணர்வே இல்லை ...

இதன் கதைத்தளமும், சம்பவங்களுக்கான வேர்களும், கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கிற  ஆப்கானிஸ்தான் தான்...
ஓர் பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை செய்திகளில் புரிந்து கொள்வதை மாத்திரமே நமக்கெல்லாம் நடைமுறை சாத்தியமாயிற்று... அவனது சூழல் குறித்தோ, அந்த அல்கொய்தா பயிற்சி மையம் குறித்தோ ஓர் அனுமானப் பிரக்ஞையோடு மாத்திரமே நம்மால் இருக்க முடிந்தது.., பிற்பாடு அவன் செத்துப் போன பிறகு அந்தப் பிராந்தியம் நமது சிந்தனைக்கே முரண் பட்டதாகவும் சம்பந்தமற்றதாகவும் நம்மிலிருந்து கழன்று விட்டொழிந்து விட்டதென்பதே  எல்லாருக்குமான யதார்த்த நிகழ்வாக இருந்தது..

ஆனால் ஓர் மெல்லிய கலைஞனாக உள்ள கமலஹாசனுக்கு அந்த விபரீத நிதரிசனத்தை , நிஜத்தில் சென்று தரிசிக்கவும் அதனையே தனது படத்திற்கான கதைக் களமாக மாற்ற வேண்டுமென்கிற எண்ணங்களும், அதனை செவ்வனே  செயற்படுத்திய  விதமும் பிரம்மிப்பும் பெருமையும் ஒருங்கே நம்மில் மிளிரச் செய்கிற விஷயங்களாகும் ..!

ஆனால், இந்த யுத்த சம்பவங்கள் நடக்கிற களத்திலே , அவர்கள் பரிமாறிக் கொள்கிற விவாதங்களும், போடுகிற திட்டங்களும், நடைமுறைப் படுத்துகிற சண்டைகளும், என்னால் ஓர் யூக அடிப்படையில் தான் ரசிக்க முடிந்ததே அன்றி திட்டவட்டமாக இன்னது தான் பிரச்சினை என்கிற விதத்தில் காட்சிகளை அணுக முடியாதது  பெரிய அவஸ்தை என்றே சொல்வேன்..

இப்படி படம் நெடுக ஓர் மாயை சூழ்ந்து அந்த ரெண்டரை மணி நேரங்கள் நழுவியது புரியவில்லை என்ற போதிலும் அத்தனை ஆழமாக லயித்து விடுமளவு  ஓர் புரிதல் இருந்ததா என்பது மிகப் பெரும் கேள்வி தான்..

எல்லா கோணங்களையும் இந்தப் படத்தில் கிரகித்துக் கொண்ட நபர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.. குறிப்பாக, காலம்  சென்ற எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் இதனை மிகத் துரிதத்தில்  உறிஞ்சி  ஐ மீன் ABSORB செய்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்..

அப்படி ஓர் வீச்சோடு இயங்க முடியாத எனது மூளையை நான் சபிக்கிறேன்.. எனது சுயத்தையே  வெட்கத்தோடு பார்த்து நகைக்கிறேன்.. .
நன்றி..
                                                                                                                                                                                                                                                  

Comments

  1. குழந்தையை அழைத்து சென்று இருந்தால் நன்றாக தூங்கி இருக்கும்...

    மெனக் கெடுதல் கமலுக்கு மிகவும் பிடிக்கும்... இதில் கொஞ்சம் அதிகம் (ஆரம்பம்) என்று நினைக்கிறேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....

ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..:

"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி இன்னும் சற்று நேரத்தில் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் செல்லவிருக்கிறாள்... அவளை ஆடை மாற்றச் சொல்லி ஓர் ஆண் செவிலியர் வந்து சொல்கிறார்.. அதன் நிமித்தம், அவள் பாத்ரூம் சென்று ஆடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்க்கிறார்.. மறுபடி படுக்கச் சென்ற அந்த நோயாளிப் பெண்ணை, சிறிது நேரம் கழித்து மறுபடி வேறு ஆடை மாற்ற வேண்டுமென்று சொல்ல, அந்தப் பெண் அவ்விதமே செய்ய பாத்ரூம் செல்ல, பின்னிருந்து வந்த அந்த ஆண் நர்ஸ் அந்த நோய்வாய்ப் பட்ட பெண்ணை கட்டி அணைக்க முயல, அவள் கதறி கூக்குரலிட்டு எல்லாரையும் வரவைத்து அந்தப் பனாதிப் பயலின் மானத்தை வாங்கி, கடைசியில் கைது செய்து வேனில் ஏற்றினார்களாம்".. 

அதற்கு அவளது  கணவன் சொன்னான்:

"நல்ல வேலை.. அந்த இடத்தில் நீ இருந்திருந்தால் கதறியும் இருக்கமாட்டாய்.., அவன் அரெஸ்ட்டும் ஆகி இருக்கமாட்டான்.. "

RX 100 YAMAHA.. RX 100 YAMAHA....

RX  100 YAMAHA....1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்தேன்...
கடந்த பதினெட்டு ஆண்டுகள் இதே பைக்கை உபயோகித்து வந்தேன்... என்னவோ காதலி பிரிகிற உணர்வு... நீண்ட நாள் நண்பன் கண் காணாத ஊருக்கு செல்வது போன்ற தாங்கொணா வேதனை... வாரி அனைத்து பல முத்தங்கள் தந்து விடத் தோன்றியது... அழவில்லையே தவிர எனக்குள் ஓர் கசிவு உள்ளே என்னை முழுதுமாக நனைத்திருந்தது... இதற்கு அழுதால் சிரிப்பார்கள் என்கிற லஜ்ஜை, அழுவதை மறைக்க வேண்டியாயிற்று.. அன்றைய யவ்வனத்தில், யுவனாயிருந்த காலத்தில் ... விழித்துக் கொண்டே கண்ட கனவு தான் அந்த யமஹா... லட்சணத்துக்கும் அதிவேகத்துக்கும் ப்ராபல்யமான அந்த பைக்கை ஆசை ஆசையாக நான் வாங்கியது என் அப்பாவுக்கு எரிச்சல் தந்தது... மைலேஜ் அதிகம் தராது என்பதோடு விபத்துக்கான சாஸ்வதங்களும் இந்த பைக்கில் அதிகம் உண்டு என்கிற அக்கறை தான் என் அப்பாவின் கோபமும் எரிச்சலும் என்பது என் இளமைனதுக்குப் புரிபடவில்லை...
ஆனால் எனது நண்பர்கள் மத்தியில் அந்த பைக் பெருமிதமான விஷயமாயிற்று... அதனை வசப்படுத்த இயல்பான வசதி வேண்டும் என்பதோ…

கபாலி.............. சினிமா விமரிசனம்

"மகிழ்ச்சி".... படம் நெடுக இது இல்லை எனிலும், அவ்வப்போது ரஜினியால் தூவப்படுகிற அனாவசிய ஒற்றை வார்த்தை.. 
புதிதாக அகராதியில் சேர்க்கப் பெற்ற வார்த்தை போன்று மக்களுள் இப்போது தான் இந்த வார்த்தை உதடுகளில் குடி புகுந்துள்ளது... 
அனுபவங்களாக இருந்த கட்டங்களில் கூட உச்சரிக்கப் படாத இந்த வார்த்தை, மிகப் பெரும் அவ்ஸதையில் சிக்கிக் கொண்ட பிற்பாடு உதட்டளவில் பிதற்ற வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது கபாலி.. 
மனைவி தேடி கண்டங்கள் கடக்க நேர்வதைப் பார்க்கையில் இது ரஜினி படமா ரஜினியின் மனைவி படமா என்கிற சந்தேகம் எழுகிறது..

சினிமா உலகம் பாலை வெளியாயிருந்த கால கட்டங்களில் தமது வருகையால் 'பாலைவன சோலை' யாக மாற்றிய ஒரு மனிதன்..
இன்று.. டெக்நிக்கல் விஷயங்களில் அபரிமிதம் நிரம்பி பருத்துத் தழைத்துக் கிடக்கிற சினிமாவை எதற்காக கபாலி வந்து இப்படி ஒரு பாலைவனமாக்க வேண்டும்?
பைனான்சு நடத்தி ஏமாற்றுகிறவன் கூட ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை சார்ந்த மக்களை மட்டுமே ஏமாற்ற முடியும்.. ஆனால், இந்தக் கபாலி உலகத்தையே.. மொத்த உலக மக்களையே மட சாம்பிராணி ஆக்கி விட்டதே.. !
குழந்தைக்கு ஹார்லிக்ஸ் பூஸ்ட் வாங்குவதைய…