Sunday, February 3, 2013

கிறுக்குப் பயபுள்ள எழுதின கதை ...

புலி சிங்கம் உலவுகிற காடுகளில் நான் அவ்வப்போது சென்று  வசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதை உங்களிடம் தெரிவிப்பதை அவசியமென்றே கருதுகிறேன்...

என்னைக் கடிக்க வருகிற புலிகளை அங்குள்ள சிங்கங்கள் அனுமதிப்பதில்லை... சிங்கங்கள் என்னைக் கோபித்துக் குதற வருகையில் அங்குள்ள மான்கள் என்னைக் காப்பாற்றி விடுகின்றன சாமர்த்தியமாக.

தெரியாத்தனமாக எறும்புப் புற்றில் கால் வைத்துவிட நேர்கையில் என்மீது ஊர்ந்து வந்து கடிக்கத் துவங்குகிற எறும்புகளை துவம்சம் செய்து விடுகின்றன அங்குள்ள பாம்புகள்...

சமயங்களில் படமெடுத்துக் கொண்டு ஒரு போடு போட வருகிற பாம்புகளைக் கூட பட்டாம்பூசிகள் கொன்று விடுகின்றன..

"எங்கடா அடிக்கடி போயிடறே ?" என்று கேட்கிற அம்மாவை சமாளிப்பது சற்று அசௌகரியமாகப் படுகிறது.., ஆகவே, அப்பாவிடம் சொல்லி அடிவாங்கி அம்மாவை அழவைத்து சிரிப்பதில் ஓர் அலாதி ஆனந்தம்... அப்பாவும் அதே கேள்வியை கேட்கையில் ஓங்கி அறைவது தான் நியாயம் என்று நான் அடித்து சொல்வேன்...

அம்மாவை அறைந்த கையோடு தனது அறைபட்டு சிவந்த அந்த முள்தாடி கன்னத்தையும் தேய்த்துக் கொள்கிற எனது அப்பாவைப் பார்க்க எனக்கு சிரிப்பு தலைக்குப் புரை ஏறும்..

நாளடைவில் எனது இருப்பு காட்டு விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விட்டது... ஜில்லா கலெக்டருக்கு மனு கொடுக்க குரங்கும் மயிலும் சென்று வந்ததாகக் கேள்வி..

"என்ன மயிலு.. ஒடம்புக்கு எப்டி இருக்கு?" என்ற எனது கேள்வியை புரிந்து கொண்டது மயில்.. "கொசுவ வுட்டு கடிக்க சொன்னேன்னா டெங்குல எல்லாரும் போயி சேர்ந்துடுவீக... ஜாக்ரதை.." என்றதும் காடே மிரண்டது..

3 comments:

  1. நல்லாதான் மிரட்டறீங்க! அருமை!

    ReplyDelete
  2. என்ன ஆச்சு? குழந்தை கதை பட்டையை கிளப்புறீங்க!

    ReplyDelete
  3. காட்டுக்குள்ள என்டர் ஆனதும் வெண்புரவி பறந்து வந்து விமரிசிக்குதுங்கோ... இத்தனை நாளும் எங்கியோ காட்டுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த மாதிரி...
    சந்தோஷம் அருணா சாரே...

    அறிவுப்பூர்வமா யோசிச்சு யோசிச்சு பார்த்து இந்த மரமண்டையில ஒண்ணுமே இப்போதைக்கு உதிக்கலே ... அதனால ஏதாவது ரெண்டை கிறுக்கி வைக்கலாம்னு பெனாத்திபுட்டேன் பெனாத்தி... டெலீட் பண்ணிடலாம்னு தான் பார்த்தேன்... சரி, திருஷ்டி மாதிரி அப்பப்ப இந்தமாதிரி கொஞ்சம் ஒளறிக் கெளறி வைக்கலாம்னு ஒரு அற்பாசை.. ஹிஹிஹ்..

    திரு.சுரேஷ் அவர்களுக்கும் எமது நன்றிகள் {வாலாட்டியபடியே சொல்கிறது இந்த நாய்}

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...