Thursday, February 7, 2013

கமலஹாசன் விஸ்வரூபம் .....

கடந்த ஐம்பது ஆண்டுகளாக .., வரலாற்று தொனியில் சொல்ல வேண்டுமானால், அரை நூற்றாடு காலமாக சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கிற ஓர் பிரபல கமலஹாசனுக்கு தனது சொந்த தயாரிப்பில் உருவான ஓர் திரைப்படத்தை வெளியிட நேர்ந்த சமீபத்திய சிரமங்கள் உலகெங்கிலும் யாதொருவரும் அறிவர்...

இந்தத் தடைக்கு பின்புலமாக செயல்பட்டது அதே சினிமா உலகம் சார்ந்த நபர்கள் என்றும், இஸ்லாமிய அமைப்புகள் என்றும், தமிழக முதல்வர் என்றும் பலவாறாக ஊகங்கள் வரையறுக்கப் பட்டு உலவி வந்தன.. ஆனால் காரணம் இன்னதென்கிற தெளிவு, இந்த விஷயம் சார்ந்த கமல், மற்றும் இன்னபிற சிலருக்குமே புரிந்திருக்கும்... மற்றபடிக்கு பொதுமக்களும் மீடியாக்களும் வெறும் அனுமானங்களை மையப் படுத்தி வதந்திகளை பிரம்மாதமாகப் பரப்பிக் கொண்டு வந்தனர்...

ஏழு காட்சிகளை நீக்கிவிட்டு ஏழாம் தேதி வெளியாக உள்ளது.. அவை காட்சி நீக்கமா, அல்லது வசன நீக்கமா என்பது படம் பார்க்கிற போது தெரியும்...

வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் இந்தப் படத்தை ரசித்தவர்கள் தங்களின் விமரிசனத்தை மிகவும் புளகித்து சொல்லக் கேட்கையில் உடனே சென்று பார்க்க வேண்டுமென்கிற அவா பீறிடுகிறது.. 

என்ன கேவலமென்றால் ஓர் தமிழன் எடுத்த ஓர் தமிழ்படம் தமிழ்நாட்டில் வெளியாகாமல் மற்ற இடங்களில் வெளியாகி அங்கு சென்று ரசிகர்கள் பாக்க வேண்டிய கொடுமை அரங்கேறி இருப்பது மனசைப் பிசைகிற அவஸ்தை...
மறுபடி இவ்விதம் ஓர் கேவலம் நிகழாமல் இருக்கவேண்டும் என்று எவரையும் கேட்க முடியாது.. எவரைக் கேட்க வேண்டுமென்றே புரியவுமில்லை..ஆகவே, இப்படி ஓர் அசிங்கம் மேற்கொண்டு நிகழக் கூடாது என்று பொத்தாம் பொதுவாக பிரார்த்தித்துக் கொள்ள மாத்திரமே முடியும்.. அதனை நாம் எல்லாரும் செய்வோமாக..!! நன்றி..



3 comments:

  1. தான் பட்ட அவஸ்தைகளுக்கெல்லாம் இப்போது தமிழகத்தில் விஸ்வரூப வெற்றியை ரசித்துக்கொண்டிருக்கிறார் கமல்....

    ReplyDelete
  2. சார் நலமா...?

    படம் பார்த்து விட்டீர்களா...?

    ReplyDelete
  3. really i m fine danpal sir.. what happend ? are u busy with yr business?.. my blog made so worthless without yr fine comments

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...