அடித்தல் திருத்தலாகவே
எல்லாமிருக்கிறது
என்னிடத்தில்...!
ஆரம்பத்திலேயே
தெளிவைக் கொணர்கிற
சாதுர்யம் ஏனோ
பிசகி விடுகின்றன
எல்லாவற்றிலும்
எல்லா தருவாய்களிலும்..!!
திருத்துவதென்பதை
ஓட்டுப் போட்டதாக
உணர்கிறேன்..
ஆதலால்--
என்னிடம்
திருந்தி இருக்கிற
எல்லாமே
ஓட்டுப் போட்ட
பலவீனத்திலேயே
உள்ளன...!
திருந்தப் பெறாத
தவறுகள் கூட
ஓர் பிரத்யேக
தேஜஸில் மிளிர்வதாக
அபிப்ராயம் எனக்கு...
ஆனால்
பலவீனப் பட்டாலுமே
கூடப் பரவாயில்லை..
தவறுகளை
சரி செய்கிற
சந்தோஷம்
வேறெதிலுமில்லை..!!
முடிவிலும் அருமையாக உண்மையை சொல்லி விட்டீர்கள்...
ReplyDeleteஉண்மை உண்மை! திருத்தமும் திருந்துதலும் அவசியம் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete