Saturday, November 10, 2012

நரகாசுரனும் எங்க அப்பத்தாவும்..

 நரகாசுரன் 
செத்து .. கொண்டாடப் 
படுகிற தீவாளி,
எங்கப்பத்தா 
செத்ததால 
கொண்டாடப் படலே...!

பாழாப் போனவ 
நவம்பர் பத்தாந்தேதியா 
சாகணும் ?..
கொழந்தைக தெனத்தையும் 
கொண்டாடிட்டு 
நவம்பர் பதினஞ்சு 
போயித் தொலஞ்சிருக்கலாம்ல?           

போச்சு..
தீவாளியும் போச்சு..
கொழந்தைக தினமும் போச்சு..

நேரு தினத்தன்னிக்கு 
நாந்தான் நேரு வேஷம் 
போட்டு நடிக்கிறதா இருந்திச்சு..
இப்பப் பாருங்க..
ஆறாப்பு சி செக்க்ஷன் ல 
படிக்கிற சிவப்பிரகாசம் 
கட்றான் அந்த வேஷத்தை..

போட்டோல 
சிரிக்கிற அப்பத்தாவ 
கல்லெடுத்து ஒடச்சுடலாம் போல 
ஆத்திரம் எனக்கு...

னா பாருங்க..
துப்பாக்கி கொள்ளுப் பட்டாசு 
வாங்க எனக்காக 
சுருக்குப் பையில 
முடிஞ்சு வச்சதா 
எங்கப்பன் வந்து அந்தக் 
காசைக் கொடுத்தப்ப 
சிரிக்கிற அப்பத்தா 
போட்டோவைப் பார்த்து 
நான் ரொம்ப நேரமா 
அழுதுட்டேன்...

3 comments:

  1. நல்ல தொரு கவிதை! இப்படி சில சமயம் நடப்பதுண்டு சின்ன வயதில் அதற்காக கோபப்பட்டு புரிதல் இல்லாமல் நடந்து கொள்ளும் நாமே பின்னொரு நாளில் புரிதல் அடைவோம்! அருமை!

    ReplyDelete
  2. thanks for your kind review mr.suresh..

    ReplyDelete
  3. நல்ல வரிகள்...

    எல்லார் வாழ்விலும் நடப்பதுண்டு...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...