மனித வாழ்வின் அன்றாட அவலங்களில் ஓர் பகுதியாக தனது காலைக் கடன்களைக் கழிக்க கியூ கட்டி நிற்பதை சொல்லவேண்டும்..
சாப்பிடுவதற்காக அன்னதான விழாக்களில் வரிசை போட்டு நிற்கிற கூட்டத்தைப் பார்க்கவே என்னடா பொழப்பிது என்பதாக உறுமத் தோன்றுகிறது...
உண்டதைக் கழிக்கவும் இப்படி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கையில் சிலரது வாழ்க்கை எவ்ளோ அவஸ்தைகளுள் நித்தமும் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது..
இவர்களுக்கெல்லாம் வயிற்றுப் போக்கு வந்தால் என்ன செய்வார்கள்?.. அதுவும் ஒரு முறை உள்ளே சென்று சிறுநீர் கழித்து விட்டு வரவே ரூ.மூன்றிலிருந்து ஐந்து வரைக் கொடுத்தாக வேண்டியுள்ளது... வயிற்றுபோக்கு சொஸ்தமாக சிகிச்சை மேற்கொள்வார்களா அல்லது அந்தக் காசை இந்தக் கக்கூசிலேயே இன்வெஸ்ட் செய்து முடித்து விடுவார்களா?
நவீன மயமாக்கப் பட்ட கழிப்பிடம் என்கிற தலைப்போடு அங்கங்கே வீற்றிருக்கிற இம்மாதிரியான பொதுக் கழிப்பிடங்கள் உண்மையாகவே அவர்கள் அறிவித்த டைட்டில் மாதிரி நவீனமயமாக்கப் பட்டிருந்தாலுமே கூட நமது பொதுமக்கள் அவர்களுக்குத் தெரிந்த பாணியில் வேறு விதமாக நவீனப் படுத்திவிட்டு வருவார்கள்..
அற்ப விஷயங்களுக்கெல்லாம் அருவருத்து முகம் சுழிக்கிற ஏராள நபர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் இங்கே அசந்தர்ப்பமாக விசிட் அடிக்க நேர்ந்தால், அவ்ளோதான்...
ஆனால் இது குறித்தெல்லாம் நன்கு பழகிப்போன ஏராளமானோர், தனது கடமையில் மாத்திரமே மனசை செலுத்தி எவ்வித முகச்சுழிப்புகளுமற்று இறக்கிவைத்த இறுமாப்போடு புன்னகை தவழ வெளிவருவதைப் பார்த்தால் நிச்சயமாகவே நவீனமயமாகப் பட்டுள்ளதோ என்று தான் தோன்றும், புதிதாக வரிசையில் நிற்கிற நபருக்கு..
அந்த நபர் உள்ளே என்ட்ரி ஆகிறபோது தான் விஷயம் புரியும்.."உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லையாடா..:: '"என்று உள்ளே உரத்துக் கதறுவது அவருக்கு மட்டுமே கேட்கிற அபஸ்வரம்..
அமெரிக்காவின் ஜப்பானின் சீனாவின் ஆஸ்திரேலியாவின் சுவிட்சர்லாந்தின் .. இப்படி எந்த நாடுகளின் பொதுக் கக்கூசும் சத்தியமாக இப்படி எல்லாம் இருக்காதென்று எந்தப் படிப்பறிவும் அற்ற பாமரனும் அறிவான்... ஆனால் இன்னும் சில வருடங்களில்... என்னது.. வல்லரசாகப் போகிற இந்தியாவின் நிலை இப்படி இருக்கிறது..ஒருக்கால் வல்லரசானால் இந்த அசிங்கங்கள் அகன்று விடுமோ?
ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் வெண்கலம் பெறுவதையே பெருமிதமாக கொண்டாடுகிற நாமெங்கே?.. தங்கங்களின் எண்ணிக்கையே எல்லைமீறி எகிறும் சீனாவும் அமெரிக்காவும் எங்கே?
அடிப்படையில் ஒவ்வொரு பிரஜைக்கும் சுகாதாரத்தைப் பயிற்றுவிப்பதே இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.. இதிலே, பதக்கங்களைப் பெற எப்படி சாத்தியமாகும்..
நல்ல நல்ல விஷயங்களை அடைய நாம் இன்னும் கடக்க வேண்டிய பாதை இன்னும் நெடுந்தொலைவு உள்ளது... ஆனால் கவர்ச்சி விளம்பரம் போல, அல்லது ஓர் வதந்தி போல.. இந்தியா வல்லரசாகப் போகிறது .. இதோ, இதோ இன்னும் .. கொஞ்ச காலத்தில்... இதோ இதோ..நெருங்கிவிட்டது..இன்னும் சில நாட்களில்.. என்று கூவுகிறோம்...
இப்படி ஓர் தாக்கத்தை ஏறுபடுத்தியாவது நம் நாட்டை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கில் இவ்விதம் வதந்தி பரப்புபவர்கள் செயல்படுவதாகத் தோன்றுகிறது... அப்படியாயின், அது கூட வரவேற்க உகந்த ஒன்றே..

சிறு சிறு தவறு... இல்லை சிறு சிறு தப்பு என்றாலும் மாற வேண்டும்... தனி மனித ஒழுக்கம் வளரவில்லை என்றால் எல்லாமே 'கனவு' தான்...
ReplyDeleteசார்.. உங்கள் மெயில் இன்று தான் பார்த்தேன்... (இங்கே ஒரு வாரமாக 13 மணி நேரம் கரண்ட் கட்) வரும் சனிக்கிழமை (08.09.2012) அன்று தாடிக்கொம்பு -தேய்பிறை அஷ்டமி - பைரவர் வழிபாடு - ரொம்ப விசேஷம் - கூட்டம் அதிகமாக இருக்கும்... காலையிலிருந்தே கூட்டம் ஆரம்பித்து விடும்... முதலில் வர ஏற்பாடு செய்து கொள்ளவும்... மேலும் விவரங்களுக்கு : கோவில் போன் நம்பர் : 0451- 2557232 திண்டுக்கல் வர... - டவுன் பஸ் - 20௦ minutes - போன் செய்யவும்... (9944345233) நன்றி சார்...
VERY THANK YOU MR.DHANAPAL..
ReplyDelete