முதல் முறையாக திண்டுக்கல் அருகே அமைந்துள்ள சௌந்தர ராசப் பெருமாள் கோவில் அமைந்துள்ள தாடிக்கொம்பு என்ற இடம் சென்றிருந்தேன்.. தேய்பிறை அஷ்டமிக்கு அங்கே இருக்கிற பைரவர் மிக விசேஷம் என்று சொல்லக் கேள்வி. .. பொதுவாக பைரவர் ஈஸ்வரர் கோவில்களில் தான் வீற்றிருப்பார்.. ஆனால் இங்கே பெருமாள் கோவிலில் இருப்பது தான் இவ்வளவு விசேஷத்துக்கு காரணமாக அமைந்ததோ என்னவோ..
கூட்டம் அப்படி மொயப்பதைப் பார்த்தால் பெருமாளும் பைரவரும் கீழிறங்கி வந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ....
அடேங்கப்பா... என்று வியக்கத் தூண்டுமளவு சும்மா கூட்டம் அப்படி பம்முகிறது...
நாமெங்கே பார்க்கப் போகிறோம் என்று ஓர் சந்தேகம் வரவே, சரி திரும்பி விடுவோம் என்று யோசிக்கத் துவங்கி விட்டேன்...
திருப்பூரிலிருந்து மெனக்கெட்டு இம்புட்டு தூரம் வந்துட்டோம், பார்க்காமப் போனா என்ன அர்த்தம்... மறுபடி இனி எப்ப வருவோம்?.. அல்லது வருவதென்பது என்ன நிச்சயம்?.. இப்படியெல்லாம் அறிவுப் பூர்வமாகத் தோன்றவே , எப்டியாச்சும் தரிசனம் பண்ணிட்டே போயிடலாம் என்று முடிவெடுத்து , சௌந்தரராசப் பெருமாள், சௌந்தரவல்லித் தாயார், காலப் பைரவர் என்று .. ஒரே ஸ்ட்ரோக்கில் மூவரையும் தரிசித்தாயிற்று.. வெளியே வந்தாயிற்று..
எல்லா விஷயங்களும் இப்படித்தான்.. நாம் பார்த்து என்ன முடிவெடுக்கிறோமோ, அது தான் அங்கே நடக்கிறது.. .
முடியாது நடக்காதென்று முடிவேடுத்தோ மேயா னால் .. அது முடிகிற மாதிரி இருந்தால் கூட முடியாமலே போய் விடும்..
சத்தியமாக முடியாது என்றாலும் , முடியுமென்று ஓர் முடிவை எடுத்த் விட்டால் அது முடிந்தே விடும்...
இதொன்றும் புதுத் தத்துவம் போல தெரியவில்லை.. மிக யதார்த்தமான ஒரு நடைமுறை என்றே எனக்குத் தோன்றுகிறது..
ஓர் கூட்டமில்லாத நாளில் இந்தக் கோவில் சென்றிருந்தால் இவ்வளவு தத்துவங்களுக்கு இங்கே வேலை இல்லை .. எல்லா சாமிகளும் ப்ரீ யாக இருப்பார்கள், நாமும் அப்டியே ஹாயாக தரிசித்து விட்டு வந்திருக்கலாம்... ஆனால் இந்த நம்பிக்கை சம்பந்தமான எந்தக் கண்செப்டுகளும் உதயமாகி இருக்காது... ஹிஹி..

/// முடியுமென்று ஓர் முடிவை எடுத்து விட்டால் அது முடிந்தே விடும்... ///
ReplyDeleteநல்லபடியாக தரிசனம் செய்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள் சார்... நன்றி...