Monday, July 30, 2012

பேதம் ......


பல தருணங்களில்
அவ்வப்போது என்னைக்
காப்பாற்றிய கடவுள்களின்
பட்டியல் .. மற்றும்
அவ்வப்போது என்
கால்களை வாரிய
கடவுள்களின் பட்டியல்
என எல்லா வகையறா 
பட்டியல்களும்
மனப்பாடம் எனக்கு
எல்.கே.ஜி. ரைம்ஸ் போல..!              

காப்பாற்றிய
பட்டியலில் உள்ள
அரசமரப் பிள்ளையார்,
கால்களை வாரிய
பட்டியலிலும்
இருக்கிறார்
தங்கக் கிரீடம்
சூட்டிய ராஜ விநாயகராக..
அதே தெருவில்..!!

8 comments:

  1. YEAH, I HAD READ YR EVERY SONGS.. REALLY NICE..

    ReplyDelete
  2. நான் படிக்காமல் விட்ட அத்தனை இடுகைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். அத்தனையும் அருமை.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...