Monday, January 16, 2012

காதலி காதலி..



உன் விரல்
நகக் கீறல்கள்
என் ஸ்மரணையை
அதீதமாக்கும்....

உன் நினைவுச்
சுழல்கள்
என் பிரக்ஞையை
அதீதமாக்கும்...


உன் இருப்புக்கான
சுவடுகளை 
மணலில் அல்ல...
அண்டத்திலேயே
அடையாளம்
 காண்கிற திறன்....
 எனது
கண்களுக்குண்டு..!!
                                                   

சுந்தரவடிவேலு 
                                                

2 comments:

  1. அருமையான கவிதை.
    // ஸ்மரணை,
    அதீதம்,
    பிரக்ஞை//
    வலிந்து திணித்த வார்த்தைகளாகத் தெரிகின்றன.

    ReplyDelete
  2. .அகராதியில் உள்ள வார்த்தைகளை யதார்த்தமாகப் பிரயோகிப்பது கூட வலிந்து திணிக்கப் பட்டது போல ஓர் மாயை ஏற்படுத்துவது தமிழிலும் தமிழர்களிலும் உள்ள இயல்பான குறைபாடென்றே அனுமானிக்கிறேன்... இந்த மாதிரி வார்த்தைகளை எப்போது நான் பிரயோகிக்கையிலும் இவ்விதமாக நானும் இந்த வார்த்தைகளும் விமர்சனத்துக்கு உள்ளாவது ஏதோ என்னிலும் இந்த வார்த்தைகளிலும் படிந்து விட்ட சாபம் போலவே உணர்கிறேன், உணர்கிறோம்...
    மற்றபடி, தங்கள் விமர்சனத்துக்கு நன்றி வெண்புரவி அவர்களே.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...