Sunday, August 28, 2011

முத்தபுராணம்..



குழந்தைக்கான
முத்த ரசாயனமும்
மனைவிக்கான 
முத்த ரசாயனமும்
வெவ்வேறு வகை...
--அவை
வார்த்தைகளில் 
பிடிபடாத
அமிலங்கள்...

வேண்டுமானால்
பொத்தாம் பொதுவாக
இப்படி சொல்லலாம்..
குழந்தைக்கான
முத்தங்களில் உள்ளவை
பால் சேர்ந்த அமிலம்..
மனைவிக்கான
முத்தங்கள் கள் சேர்ந்தது
என்று...

இந்த உதாரணமே
என்னவோ ஓர் மென்மையான
மேன்மையான விஷயத்தை
கொச்சைப் படுத்திய
குற்ற உணர்வில் 
நெளியச் செய்கிறது...

"பச்சக்" என்று
வெறுமனே இதழ் 
கொண்டு பதிக்கிறோம்...
அது, நபர்கள்
மாறுபடுவதற்கு ஏற்ப
உணர்வு நிலைகளையும் 
மாறச்செய்கிறது...

காதல், காமம், பாசம்,
இந்த மூன்று தன்மைகளைத்
தாண்டி வேறு எந்த
உணர்வுகளுக்கும் 
இடமளிப்பதில்லை முத்தங்கள்...

வைப்பவருக்கு 
ஓரின்பம் என்றால்
வாங்குகிறவருக்கு நூறின்பம்....

தாமதிக்கப்படாமல்
பகிர்ந்தளிக்கப்படும் பண்டமாற்று
முத்தங்கள்...

திரும்பக்கிடைக்குமென்கிற
உத்தரவாதம் இல்லை என்றாலுமே
கூட, கொடுப்பதில் மட்டுமே
பேரின்பம் காண வைப்பவை முத்தங்கள்...

கொடுத்ததைக் காட்டிலும்
பன்மடங்கு திரும்பக்கிடைக்கிற
வாய்ப்புக்களுக்கும் இடமுண்டு...

சொல்லப்போனால் 
முத்தமென்கிற செயல்
ஒன்றுமேயில்லை தான்...

ஆனால் அத்தனை மாயைகளையும்
தாண்டி ஓர் பரமானந்தம்
அங்கே இடம் பெறுவது ஆச்சர்யம் தான்...  




1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...