Friday, August 26, 2011

இனியெல்லாம் கலியோ கலி??

 நடக்க நடக்க வேட்டி சேலையை உருவிக்கொண்டால் கூட அவை குறித்த பிரக்ஞை சிறிதும் அற்று செல் போனில் பேசிக்கொண்டு போகிறார்கள் ஆண்களும் பெண்களும்...
  காதலும் கள்ளக்காதலும் இன்னபிற தகாத சகவாசங்களும் .. தேகம் மனம் எல்லாம் சுடசுட பொசுங்கி விடுமளவிற்கு விவாதங்கள் நொடி இடைவெளி கூட அற்று காரசாரமாக நடக்கின்றன..
பொண்டாட்டி இன்னாருடன் இவ்விதம் பேசுகிறாள் என்கிற சமாச்சாரம் புருஷனுக்குத் தெரிந்தால் அங்கே கொலை விழும் அளவிற்கு, 
அதே விதமாக... புருஷன் பேசுவது மனைவிக்கு தெரிய வருமானால்...

இப்படி செல்போன் என்பது வாழ்க்கையின் கள்ளச்சாவியாக அநேகம் பேருடைய பெட்டிகளைத் திறந்து கொண்டிருக்கின்றது...
செல்போனை பொருத்தமட்டில் --
பிரயோகப்படுத்துகிற சாரார்களைக் காட்டிலும் அதிக விழுக்காடுகள் துஷ்ப்ரயோகம் செய்பவர்கள் தான் அதிகம் என்று குருட்டுத்தனமாக அடித்து சொல்லலாம்... 

..
, செல்போன் பேசுவதால் மூளைக்கு பாதிப்பு, இதயத்துக்கு பாதிப்பு, ஆயுள் குறைவு என்கிற அறிவியல் ஆய்வுகள் யாவும் நக்கலான செய்தியாக உலா வருகின்றனவே யன்றி அவை குறித்து பயப்படுவதோ கவலைப்படுவதோ யாரும் இருப்பதாகத் தெரியவில்லை ..

      ..கலி முற்றப்போவதான அனுமானங்கள் சில வருடங்கள் முன்னர் இருந்தது... அப்படி எல்லாம் எதுவும் ஆகாது, எல்லாம் வதந்தி, மூடத்தனம் என்கிற ஆணித்தரமான விவாதங்கள் நிகழ்ந்தன... அப்படி எல்லாம் எந்தக் கலியும் வரப்போவதில்லை என்கிற தீர்ப்பு தான் ஜெயித்ததும் கூட...

  ஆனால் இன்றைய நிலை?... எதிர்பார்த்த கலியைக் காட்டிலும் இங்கே எல்லாம் படுதீவிரம் அடைந்து .... 

 கலி முற்றி ரொம்ப நாள் ஆகி விட்டதாகவே தோன்றுகிறது... 
நம்ம தலை எழுத்தைப் பார்த்தீங்களா? இந்தக் கலியுகத்தில் வாழ்ந்து தொலைக்கனும்னு இருக்கு... 

 ..    .. இனி எல்லாம் கலியோ கலி தான்... கலி பாகம் ஒன்று, பாகம் ரெண்டு , பாகம் மூன்று என்கிற ரீதியில் நீளும் என்றே தோன்றுகிறது...


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...