காதலில் பெரிய நிபுணன் போல காதல் குறிப்புகள் என்கிற தலைப்பில் பெரிய தொடர் எழுதிக் கிழிப்பவன் போல...நாலு வரி எழுதி விட்டு "தொடரும் " என்று நிறுத்தி இருக்கிறேன்... மறுபடி எப்படி அதனை தொடர்வது, எவ்விதம் தொடர்வது என்றே புரியவில்லை....
எழுதுவதென்பது பெருந்தவம் .. சும்மா தொடரும் என்று சொல்லி விட்டு ஒன்றையும் தொடராமல் இருப்பது அழகல்ல...
ஆகவே, எனக்கு தெரிந்த காதல் சங்கதிகள் யாவற்றையும் இதோ .., திணிக்கப் பிரயத்தனித்து விட்டேன்..
எப்படித்தான் ஜெயகாந்தன், சுஜாதா .. இத்யாதி எழுத்தாளர்களும் எத்தனை தொடர்கதைகள் புனைந்துள்ளனர்... அவர்கள் போடாத "தொடரும்" களா?.. நான் ஒரு தொடரும் போட்டுவிட்டே இந்தப் புலம்பு புலம்புகிறேன்..
அவர்களெல்லாம் தான் உண்மையான எழுத்தாளர்கள்...
சரி, விஷயத்துக்கு வருவோம்..
காதல்...
மனிதனுள் விளைகிற ஓர் நாகரீக உணர்வு... எவ்வளவோ உணர்வுகள் மனசுள் ஆலவட்டம் போட்டாலும், தம்பட்டம் அடித்தாலும்.. காதல் போன்ற ஓர் உன்னத உணர்வு வேறில்லை...
ஆனபோதிலும், உறவினர்களை சற்று நிலை குலைய செய்து விடுகிறது காதல்.. பாவம், எல்லாரும் மிகவும் வருந்தவும் வேதனைப்படவும் நேர்ந்து விடுகிற உணர்வாக .. ஓர் விஷத்தன்மையோடு மறுபுறம் வினோத பிரசன்னம் செய்கிறது காதல்..
அப்பாடி.. இனி அடுத்த முறை எழுதலாம்.. இப்போது விடை பெறலாம்..
தொடரும்
No comments:
Post a Comment