Tuesday, August 16, 2011

தெய்வத் திருமகள் படம் superb..

தெய்வத் திருமகள் படம் பார்த்தேன்... அற்புதம் என்று ஒரு வார்த்தையில் அவசரப்பட்டு சொல்லத் தோன்றுகிறது... ஆனபோதிலும், என்னால் இயன்ற அளவிற்கு அந்த அற்புதங்கள் என்ன என்று சற்று விலாவாரியாக விவரிக்கத்தோன்றுகிறது.. 
ஏற்கனவே இந்தப் படம் குறித்து பல வார மாத தின இதழ்கள் விமரிசனம் செய்திருக்கலாம்.., நீங்களும் அவைகளைப் படித்திருக்கலாம்... 
எனது விமரிசனம் அவைகளை விட தெளிவாயிருக்கும் என்று சொல்வதற்கில்லை.. இதையும் தான் படித்து விடுங்களேன்...

விக்ரம் நடிப்பு சொல்லி மாளாது... துவக்கம் முதல் நிறைவு வரைக்கும் அதே அப்பாவித்தனமான மனோபாவங்களை முகத்தில் பிரதிபலிக்க செய்து பிரம்மிக்க வைக்கிறார்.... வக்கீலாக வரும் அனுஷ்காவின் நடிப்பு கூட சொல்லும் படியாக யதார்த்தமாக உள்ளது.. உதவியாளராக வரும் சந்தானமும் நன்றாக செய்துள்ளார்.. அந்த ஆரம்ப கட்ட நகைச்சுவை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.. படம் போட்டு பத்து நிமிஷம் கழித்து வருபவர்கள் உள்ளே சிரித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டும், மற்றும் அந்த நகைச்சுவைக்குள் ஒன்ற முடியாமல் திணற வேண்டும்.. ஆகவே, படம் துவங்கும் முன்னரே உள்ளே இருப்பது உத்தமம்..

அந்தக் குழந்தை எக்ஸ்ட்ரீம்லி சூபர்ப்... என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன்.. என்ன ஒரு யதார்த்தம்.... கதைக்களமாகட்டும், பின்னணி இசை ஆகட்டும், ஒளிப்பதிவு , டைரக்ஷன் .. எல்லா அம்சங்களுமே அம்சம்... பல கட்டங்களில் கண்களில் நீர் கசியும்... ஆகவே கண்டிப்பாக ஒரு கைக்குட்டையை ரெடி யாக வைத்துக்கொள்க..

சலங்கை ஒலி, பூவே பூச்சூடவா போல என்னை மறுபடி மறுபடி பார்க்கத்தூண்டுகிற படமாக இது அமைந்துள்ளது... கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது அரங்கு சென்று பாருங்கள்.. பிற்பாடு சாவகாசமாக ஒரு நாள் DVD யில் அல்லது சன் டிவி யில் பார்க்கலாம்.. நன்றி..

2 comments:

  1. உண்மைதான் நண்பா
    எப்போதாவது வரும் மதிப்புடைய படங்களின் வரிசையில் இப்படத்துக்குத் தனித்துவமான இடம் உண்டு!!

    சதையை நம்பிப் படமெடுக்கும் இயக்குநர்கள் நடுவே
    கதையை நம்பிப் படத்தை எடுத்ததற்காகவே மனம் நிறையப் பாராட்டலாம்.

    3இடியட்ஸ் படத்துக்குப் பிறகு, மதராசா பட்டனத்துக்குப் பிறகு நான் விரும்பிப் பார்த்த படம்.

    ReplyDelete
  2. தங்கள் கமெண்ட் குறித்து நன்றி குணா அவர்களே..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...