தீபாவளிக்கு அடுத்த நாள் எனது பால்ய நண்பர் விஜயஷங்கர் தனது மகனுடன் எனது வீட்டிற்கு வந்திருந்தார்...நேருக்கு நேர் பார்த்து வருடங்கள் பல ஆகி விட்டன..நீண்ட இடைவெளி... பழைய நண்பனைக் காண்பதென்பது கிட்டத்தட்ட பிரிந்திருந்த காதலியைக் காண்பதற்கு ஒப்பான ஓர் உணர்வை ஏற்படுத்தியதென்றால் அது மிகையன்று...
வாழ்க்கை எல்லாருக்குமே இப்படியே தான் ...
வெவ்வேறான தளங்களில் இருவரும் ... தகுதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான சந்திப்பல்ல இவைகள்... அநேகமாக.. பரஸ்பரம் பார்த்து சிலிர்த்துக் கொள்ளவே என்று தோன்றுகிறது எனக்கு...
நான் புலம் ஏதும் இது வரை பெயராமல் திருப்பூரிலேயே .. இன்னும் கொஞ்சம் பந்தா படுத்த வேண்டுமானால் இந்தியாவிலேயே இருந்து வருகிறேன், இனி மேலும் இருந்து வருவேன்.. இந்தியா மீதான பற்று அப்படி எனக்கு..(?)
ஆனால் எனது நண்பரோ, படிப்பு நிமித்தமாகவும் தொழில் நிமித்தவாகவும் பற்பல நாடுகளை சுற்றிவிட்டு இன்று பெங்களூருவில் வசித்து வருகிறார்...
--- மேற்கொண்டும் வெளிநாடுகள் செல்கிற திட்டங்களில் இருக்கிறாரோ என்னவோ...
நான் கண்டிப்பாக இந்தியாவை விட்டு நகர மாட்டேன்.. உறுதியாக சொல்கிறேன் .. யாரும் கவலைப்படத் தேவை இல்லை... ஹிஹிஹ்ஹிஹ்....
ஆனால் அவர் மறுபடி வெளிநாடு செல்வதற்கு முன்னர் நான் ஒரு முறையாவது பெங்களூரு சென்று வரலாம் என்பதில் உறுதியாக உள்ளேன்...என் நண்பரின் அனுமதியை வாங்காமலே அடித்து சொல்கிறேன்... இருக்கட்டுமே, நண்பர் என்ன வரவேற்காமலா போய் விடுவார்?...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
நல்ல எழுதுறீங்க சுந்தர். ஆனா ஒருவர் வீட்டுக்கு அவர் அனுமதி இல்லாம, சொந்தமாக இருந்தாலும் போகாதீங்க. நட்பு கெடும். சுமுகமாக இருக்க... தொடர்பில் நளினம் வேண்டும். நன்றி.
ReplyDeletethanks for your kind comment savitha.. but i can,t see any of your profile.. please convey me about u.
ReplyDelete