பிரத்யேகமான ஏதோ ஒன்றில் நிபுணத்துவம் கொண்டிருப்பது ஒவ்வொரு மனிதனின் மகத்தான பிரஸ்டீஜ் இஷ்யூ..
சிலர் அனேக வித்தைகளிலும் கை தேர்ந்த சாமர்த்திய சாலிகளாக இருப்பதும் உண்டு.. அத்தனை ஐ-க்யூ இயல்பெனில் விட்டு விடுவோம்.. போற்றிப் புகழ்வோம்.
ஆனால், அவ்வித தன்மைக்கு நாம் முயல்வது என்பதும் அது கைவரப் பெறாமற் போயின் சுக்குநூறாக உடைந்து பொடி தவிடாக உதிர்ந்து போவதென்பதும் அநியாயம் மற்றும் அனாவசியம்.. !
நமக்கென்று வாய்த்திருக்கும் ஏதோ ஒன்றை செவ்வனே செய்து, அதிலே பரமானந்தமாக லயித்து .. புளகித்துப் போவதும், புறம் நின்று அதனைக் காண்பவர் வியக்கும் வகையில் ஆர்ப்பரிப்பதும் செம ஃபீல்..
சிலர் எந்நேரமும் வேலை அல்லது தொழில் முஸ்தீபில் இருப்பதையே விரும்புவர்.. ஓய்வைக் கூட ரகசியமாக்கி, பிறரிடம் தான் அப்படி எல்லாம் ரிலாக்ஸாக இருப்பதை விரும்புபவன் அல்ல என்பதைப் பறை சாற்றுவது கடமை போன்று பிதற்றுவர்... இவரது அலுவல் சென்று சீக்ரட் விசிட் அடித்து இவர் அமர்ந்திருக்கும் இருக்கையில் சற்றே ஒரு குஞ்சுத் தூக்கம் போடுவார் என்ற பட்சத்தில்.. நமது அரவம் நிமித்தம் விழிப்புத் தட்டி அண்ணன் செம டென்ஷன் ஆகி ஒரு மாதிரி மந்தகாசப் புன்னகை புரிந்து ... பிற்பாடு சாவகசமாக கோபிப்பார். 'வர்றேன்னு ஒரு போன் செஞ்சுட்டு வரத் தெரியாதா?' என்று கேட்பார்.. !
இன்னும் சிலர்.. சும்மா இருப்பர் .. நண்பர்களோ இன்னபிறரோ 'என்ன பண்றீங்க?' என்று கேட்டால், 'புதுசா எதாச்சும் படம் பார்த்தீங்களா?' என்று அவரையே கேட்பார்.. இவரது நேச்சர் புரியாத நபர்கள் இவரது தத்துபித்து கேள்விகளுக்கு பதில் சொல்லத் துவங்குவர்..
புரிந்தவர்கள்.. இவரின் அசட்டுக் கேள்விகளுக்கு தக்க பதிலை உதிர்த்துவிட்டு 'இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க பாஸ்?' என்றொரு போடு போட்டால்.. 'உங்க கூட பேசிட்டு இருக்கேன்' என்று ஹாஸ்யத்தில் பிரம்மாதக் கில்லாடி போன்று ஒரு கதறல் சிரிப்பொன்று சிரித்து வைப்பார்..
'அடே வெண்ணை.. சும்மாவே இருக்கியே.. வெட்கமா இல்லே?' என்று கேட்டாலே ஒழிய இந்த நபர்களுக்கு சுரணை பிறப்பது என்பது கடினம்.. ஆனால், இந்தப் பேமானிகளை அப்படி 'போட்டுடைப்பது' போன்று கேட்டு எவரும் வாங்கிக் கட்டிக் கொள்ள தயாரில்லை என்பதால் நாசுக்காக ஏதேனும் சொல்லி மூக்கறுப்பதும் , மானம் கெடுப்பதும் ரகசிய லட்சியமாக வைத்துக் கொண்டு இவர்களை தெராட்டு வாங்கினால், அடுத்த நாள் எங்கேனும் வேலைக்கு செல்லும் உத்தேசத்தில் ஒரு 2 அல்லது 3 நாட்களாவது இருப்பார்கள் என்பது உத்திரவாதம்.. ஹிஹி.. !
செம ஃபீல் - பிடித்தது...
ReplyDeleteTHK YOU BOSS..
Delete