ஜிகர்தண்டா பார்த்து மிக வியந்தேன்.. தமிழில் இப்படி ஒரு வித்யாசமான கதைக் களமா என்று.. வாவ்.. !!
இன்னா ஒரு வழுக்கல் மாதிரியான ஸ்க்ரீன் ப்ளே.. அப்டியே ஐஸ்க்ரீம் நாக்குல நழுவி, தொண்டைக்குப் போயி, தொண்டையில இருந்து வயிற்றுக்கு சில்லுன்னு இறங்கும் பாருங்க..அப்டி ஒரு அலாதி வழுக்கல்.
படத்தோட மெயின் ஹீரோவே அந்த வில்லனா வரும் சிம்ஹா தான்..
ஹீரோ சித்தார்த் தைக் காட்டிலும் அவரது நண்பராக வருகிற அந்த நபர் சோபிக்கிறார்.. ஹீரோயின் லக்ஷ்மி ராயைக் காட்டிலும் அவரது அம்மா அம்பிகாவின் துக்கிரித் தனம் ரசிக்கும் விதமாக இருக்கிறது..
சந்தோஷ்ணாரயான் இசையில் பின்னணிக்கு இருக்கிற பலம், பாடல்களில் மிஸ்ஸிங்..
லக்ஷணமான ஒளிப்பதிவு .. கச்சிதமான எடிட்டிங்.. இப்படி எல்லா துறைகளுக்குமே மெருகு சேர்த்த புத்திசாலித் தனமான வேலையை செய்தது டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்..
சீரியஸ்நெஸ்ஸும் ஹியூமரும் இந்த அளவுக்கு மிங்கிள் ஆகி நம்மை ரசிக்க வைக்க முடியுமா என்பது மிராக்கிள்..
இந்தக் கதையை யாராவது சொல்லிக் கேட்டாலோ, எழுதிப் படித்தாலோ சப்பை மேட்டராகத் தான் தோன்றும். விஷுவலாகப் பார்க்க நேர்ந்தால் மட்டுமே அந்தத் தன்மையின் வீரியம் புரிந்து கொள்ளப் படும் என்பது பார்த்தவர்கள் அனைவரின் எண்ணமாக இருக்க முடியும்..
சிம்ஹாவின் அடியாட்களாக வரும் எல்லா வில்லன்களுமே கச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.
மற்ற சம்பவக் கோர்வைகளும் அதன் திருப்புமுனைகளும் நச் என்ற வசனங்களும் படம் முழுக்கப் பொலிவேற்றுகிற வஸ்துக்களாக வீற்றிருப்பது ஆச்சர்யம்..
ஒரு பக்கா வில்லத் தனத்தோடு இத்தனை சுலபமாக ஹாசியத்தைப் புகுத்தி இருக்கிற விதம் தமிழ் படங்களுக்கே புதிய களம் என்பது எமது அனுமானம்..
அடுக்கிக் கொண்டு போவதற்கும் ஆச்சர்யப் படுவதற்கும் இந்தப் படம் நெடுக நீண்ட பட்டியல்கள் உண்டு.. ஆனால், அத்தனை ஆழ்ந்து விமரிசிக்கிற அனுபவமும் ஆற்றலும் எமக்கில்லை ....
நூற்றுக்கு ஐம்பதை நெருங்கியோ அதையும் தாண்டியோ விகடன் பாணியில் மதிப்பிடலாம்.
என்னுடைய யதார்த்தத்தில் நூற்றுக்கு எண்பது தாண்டியும் தொன்னூறைத் தொட்டும் கூட மதிப்பெண் இடுவேன்..
நன்றி..

No comments:
Post a Comment