Tuesday, February 25, 2014

நீங்களே ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள்..

நான்கு வரியில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற எண்ணத்தில் துவங்கி என்னையும் மீறி சகட்டு மேனிக்கு நீள்கிறது இந்த நய்யாண்டிக் கட்டுரை.., கவிதை என்கிற போர்வையோடு.. ..

சமீபத்திய என்னுடைய
பயமொன்று ...
நினைக்கவே
பயமளிக்கிறது.. !!

என்னுடைய
இத்தனை கால
பயங்களுக்கெல்லாம்
தலையாய பயம்
போல..
--இதற்கு
ஈடான பயமொன்று
முன்னர் முளைத்த
நாமதேயமே  இல்லை
போல...

பொதுவாகவே
அச்சம் மடைமை
என்பதை
ப.கோ.கல்.சுந்தரம்
சொல்லி எல்லாரும்
தெரிந்து வைத்திருக்கிறோம்..
அவ்விதமிருக்க
இதென்னடா புதுபயம்?

இத்தனை புதிர்
போட்டுத் தெரிவிக்கிற
தகுதி அந்த பயத்துக்கு
உள்ளதா என்பதும்
சந்தேகமே...!
--அந்த
பயத்தின் வீச்சு
என்போலவே கேட்கிற
யாவரையும் ஓர்
கலவரத்தில்
ஆழ்த்தக் கூடுமா
என்பதும் கேள்வியே..!!

நானுணர்ந்த விதமாக
யாவரும் உணர்வதில்
தான் என்னுடைய
உணர்வின் தகுதி
மேம்பாடு காண்கிறது..
அவ்வாறன்றி
நானொரு விதமாகவும்
இன்னொருவர் மற்றொரு
விதமாகவும் உணரக்
கூடுமெனில்
எனது உணர்வின்
பலவீனம் என்னை
மேலும் வெறுமையாக்கும்..

ஆனால்
இன்னொன்றும் இருக்கிறது..
நீ சொன்னதை
ஊர் ஏற்பது
என்பதும், ஊர் சொன்னால்
நீ அதனை ஏற்பதும்....
--இந்த யதார்த்த
சித்தாந்தத்தை மீறி
புதுவித சிந்தனை செய்
மனிதா
என்கிறது ஓர் அசரீரி
என்னிடம்...!

ஆகவே
எனது அந்த பயத்தை
2 ஆம் பத்தியில்
பிதற்றத் துணிந்து
இதோ ஆரம்பிக்கிறேன்..!!


------------------2---------------------

இறந்த பிற்பாடாக
எனது கடமைகள்
என்னவாக இருக்கக்
கூடுமென்பதே அந்த
பயம்..

இதனை சொல்லவா
இந்த இழுவை
என்கிற உங்களின்
கோரஸ் அசரீரி
எனது செவிப்பறையை
கிழிக்கிறது நார் நாராக..!

கல்லெறிகிற சாத்யம்
உள்ளதாயின் நானும்
என் கணினியும்
சில் சில்லாகி இருப்போம்?..

சரி விடுங்கள்..
இத்தனை காலம்
இப்படி ஓர் பயம் இல்லையாயின்
மேற்கொண்டு பயக்கப்
பழகுங்கள்...

களவையும் கற்று மறக்கச்
சொன்ன சமூகத்தில் ஜனித்தவர்
நாம்.. இந்த விபரீத பயத்தையும்
பயந்து மறப்போம்..

பிறவா பெருநிலை
உத்திரவாதமா?
ஏனெனில், அதுதான்
மிக உயர்ந்த கோரிக்கை போல,
பிரம்மாதமான பிரார்த்தனை
போல-- அநேகம் பேர்களும்
தெய்வத்தின் முன்வைக்கப்
பிரயத்தனிக்கின்றனர்..!

மனிதர்களின் பிரார்த்தனை
பைல்கள் மேலோக ஆபீஸில்
ஒருக்கால்
அடுக்கி வைக்கப் பட்டிருந்தால்
இந்தப் "பிறவா பெருநிலை"
பைல்கள் தான் பெருவாரியாக
அடுக்கி வைக்கப் பெற்றிருக்கக்
கூடும்.. !!

ஆகவே இதற்கு அப்ளை
செய்திருக்கிற எல்லாருக்குமே
இந்தப் பிறப்பின் ஆயுள் பலம் சற்று
அதிகம் என்பது எனது அனுமானம்..
ஏனெனில், அந்த பைல்களை
அலசி ஆராய யமதர்மனுக்கு
அதீத காலம் தேவைப் படுமன்றோ ??

ஸாரி .. அலசி ஆராய்வது சித்ரகுப்தன் தானோ?
நம்ம யமனுக்கு பபலோ மீது ஏறிக்
குந்திக்கினு .. கீழோகம் வந்து
என்மாதிரி ஆளுங்களை கபார்னு
இஸ்துக்கினு போறதுக்குத்தான்
டைம் சரியா இருக்கும்.. யெஸ்..,
நாங்கெல்லாம் இன்னும் இந்தப் பூ
ஒலகத்துல மறுபடி வந்து சிறப்பா பொறந்து
இப்ப இருக்கற விஷயங்களை எல்லாம்
எடிட் செஞ்சு சும்மா சூப்பரா ப்ரெஷ்ஷா
மறுக்கப் பொறக்கனும்னு அப்ளை பண்ணியிருக்கோம்..!!
ஹிஹி..


இப்ப தூக்கம் வருது நைனா.. தொடரும்.. ??

2 comments:

  1. இருக்கும் போது இருக்கும் கடமைகளை முடிப்போம்...

    "மறுபடியும் பிறப்பா...? வேண்டாம் சாமீ...!" என்று நான் வேண்டுகிறேன்...!

    ReplyDelete
  2. ருத்ரனின் பார்வை ! :-)

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...