முன்னரெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைதியாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த சாயிபாபா கோவில்கள் இன்று, நகரெங்கிலும் புற்றீசல்கள் போல வியாபித்து, வியாழக்கிழமைகளில் ரஜினி ரிலீஸ் பட கூட்டம் போல பொங்கிப் பெருகுவதைப் பார்க்கையில் ஆச்சர்யம் வழிகிறது..
ஏரியாவிற்கு ஒரு கோவில் என்கிற ரீதியாக இக்கோவிலின் ஆக்கிரமிப்பு இருக்கிறது.. அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கிற மக்களின் வசதிக்கேற்ப இக்கோவில் அருகாமையிலேயே கிளை போல அமைந்திருப்பதைப் பார்க்கையில் இதன் உள்ளார்ந்த நோக்கம் சுலபத்தில் வெளிப்படையாக எவருக்கும் புரியவில்லை...
அன்றைய தினம் ஆரத்திகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.. பிரசாத விநியோகம் தொடர்கிறது..
பிஸ்கட்டுகளும், பழ வகையறாக்களும் காணிக்கைகளாகக் குவிந்த வண்ணமே உள்ளது.. அவர்கள் வைத்துள்ள
ஹுண்டியல்களில் பணமும் குவிந்த வண்ணமே..
பரஸ்பரம் காணிக்கைகளும் பிரசாதங்களும் எல்லா சாய் கோவில்களிலும்..
காணிக்கைகளை மட்டுமே செலுத்தி விட்டு பிரசாதங்களைத் தவிர்த்து விடுகிற பக்தர்கள்..
காணிக்கை என்று பத்துப் பைசாச கூட இடாமல் வெறுமே பிரசாதங்களை வாங்கி நக்கி, உப்பில்லை காரமில்லை என்று குறை சொல்லி நகர்கிற அற்பப் பதர்கள்..
இப்படி பல மனோபாவங்களில் மனிதர்கள் எல்லா கோவில்களிலும் குவிகிறார்கள்..
சுவாமியை தரிசினம் செய்து தனது பிரச்சினைகள் விலக மனமுருகி வேண்டி கண்ணீர் மல்குகிற சிலர்..
கூட்ட நெரிசலை, தனது வக்கிர உணர்வுகளைத் தீர்ப்பதற்கு உபயோகிக்கிற விதத்தில் பிறன் மனை நோக்கும் பேராண்மை அற்ற சபல ஆண்கள், யதார்த்தமாக இடிப்பது போல பெண் மார்பகங்களைத் தொடுவது... இவர்கள் சுவாமிக்கான தீபாராதனை தவிர்த்து எல்லாவற்றையும் தரிசிப்பவர்கள்..
எல்லா கோவில்களிலும் கூட்டத்தின் சதவிகிதம் இந்த அற்ப மனோபாவம் நிரம்பியவர்களால் தான் அதீதம் உள்ளது என்கிற தர்மசங்கடமான உண்மை, உண்மையான ஆஸ்திகன் ஒவ்வொருவனையும் காயப் படுத்துகிற செய்தி..
ஆஸ்திகனையே கூட சபலிஸ்டாக மாற்றக் கூடிய வல்லன்மை இந்தக் காமத்துக்கு உண்டு..
அது கூடப் பரவாயில்லை..
சுவாமிகளை அந்தத் தொந்தரவுகளுள் மூழ்கச் செய்துவிடக் கூடாது பக்தகோடிகள்..
இது தான் எனது பிரார்த்தனை.. ஆனால், யாரைப் பிரார்த்திப்பது என்பது தான் குழப்பம்..
இப்போதைக்கு, சாயிபாபாவையே பிரார்த்திப்போம்.. !!

கொடுமை...
ReplyDeleteஎன்ன கொடுமைசார் இது
ReplyDeleteஇந்த வியாழன் அன்று ஒரு களவாணிப் பயல் அப்படி ஓர் குசும்பைச் செய்து வசமாக மாட்டி, தர்மடி வாங்கியதைப் பார்க்க நேர்ந்தது .. அதனாலேயே, இந்தக் கொடுமையை நான் இங்கே எழுத நேர்ந்தது.. சற்று சங்கட செய்தி தான்.. , மன்னிக்கவும்..
ReplyDelete