Tuesday, January 15, 2013

திரு திண்டுக்கல் தனபால் அவர்கட்கு.. ஒரு விண்ணப்பம்..

திரு திண்டுக்கல் தனபால் அவர்கட்கு.. Dindigul DhanabalanSundara Vadivelu

நான் திருப்பூரிலிருந்து சுந்தரவடிவேலு எழுதுவது.. நலம் .. நலமறிய அவா. 
இப்பவும் எனது அனைத்து இடுகைகளுக்கும் ஏதேனும் பின்னூட்டம் போட்டு வருவதை ஓர் தலையாய கடமையாக மேற்கொண்டு செயல்பட்டு என்னை சிலிர்க்கச் செய்து வந்தீர்..

ஆனால் திடீரென்று காலை வாரிக் கவிழ்ப்பது போல ... எவ்விதத் தகவலும் அற்று ஊமையாக மாறி விட்டீர்.ஒய் திஸ் கொலவெறி ?... 

தங்களின் அற்புத பின்னூட்டங்களால் எழுதுவதில் ஓர் பிரயத்தனத்தைக் கடைபிடித்து வந்தவன், திடுதிப்பென்று தாங்கள் விமரிசிப்பதை நிறுத்தியதை அடுத்து எனக்கு எழுதுவதே போதும் என்பது போலாகிவிட்டது.. தங்களின் ஒரே பின்னூட்டத்தோடு ஜொலித்து வந்த எமது இடுகைகள் அனாதைகளாக மாறி விட்டன.. இன்று எந்தப் பயல்களும் என் எழுத்தை விமரிசித்து எழுதுவதில்லை.. 

நடுக்காட்டில் விடப்பட்டது போல திக்கற்று திணறி மூர்ச்சையாகிக் கிடக்கிற எம்மை , காப்பாற்றுகிற எண்ணம் இருக்கிறதா இல்லையா?.. 

நான் நினைத்தேன்.., இனி வரிசை கட்டி எமது படைப்புகளுக்கு இடுகைகள் வந்து விழும் என்று... ஆனால், இடுகை இட்டு வந்த ஒரே நபரும் எனது சிந்தனைக்கு ஆப்பு வைத்து விடவே, "என்னாங்கடா பொழப்பு இது?" என்று ஓர் சலிப்பும் அசூயையும் தட்டிவிட்டது..

இந்தச் சலிப்புக் கருமாந்திரத்தில் இருந்து தப்பிக்க என்ன தான் வழி என்று யோசிக்கையில் , இந்த விவகாரத்தை சம்பந்தப் பட்ட நபரிடம் தெரிவித்து ஆலோசனை  பெறுவதே சாலச் சிறந்ததென்கிற ஓர் அற்புத தீர்மானத்திற்கு வந்து இப்போது இந்த சபையில் வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன்.. மறுபடி எமக்குப் பின்னூட்டம் போடுகிற எண்ணம் உள்ளதா இல்லையா திரு.தனபால் அவர்களே... இல்லை எனில் இல்லை என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். அதைக் காட்டிலும் " ஏன் நிறுத்திவிட்டேன் ?" என்பதைத் தாங்கள் என்னிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்..

நான் எழுதுவதில் என்ன குறைபாடு கண்டீர்கள்?.. அப்படி தங்களைக் கவர்ந்த வண்ணம் எழுதி வந்த நான் பிற்பாடு ஏன் தாங்கள் வெறுக்கிற வகையில் எழுதத் துணிந்தேன் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.. எப்படி நான் மேற்கொண்டு நடந்து கொள்ளவேண்டும், மறுபடி எழுத்துலகில் அதே விதமான ஜாம்பாவானாக மாறி வலம்வர வேண்டும் என்பதெல்லாம் எனது இப்போதைய பெரும் கனவு..மற்றும் லட்சியம்.. 

எமக்கு மிக ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.. 


நன்றி அய்யா..

தங்களின் ஆதரவு நாடும்,
பிரபல ப்ளாக் எழுத்தாளன்..
சுந்தரவடிவேலு.....

4 comments:

  1. பதிவுலகின் பின்னூட்டப் புயலே.... பதில் அளியுங்கள்.... நன்றி....

    ReplyDelete
  2. பாருங்கய்யா.. ஒரு பிஞ்சு இஸ்கூல் பயல் எமக்கு என்னமா சப்போர்ட் போடறார்னு... நன்னி மறக்கமாட்டேன்யா ராசா..

    ReplyDelete
  3. லக லக .....! அட்டகாசம் போங்க .....


    திண்டுகல் தனபால் : நிலாவுக்கு போனாலும் அங்க ஒரு நாயர் சாயா கட வச்சுருப்பார் னு சொல்வாங்க . அதுமாதிரி ஒலகத்துல எங்க யாரு பதிவு போட்டாலும் தனபால் அண்ணன் பின்னூட்டம் இருக்கும் ...
    அண்ணன் ரெஸ்ட் எடுக்குறாரு பூல ... விடுங்க பாசு சீக்கிரம் வந்து பின்னு பின்னு ன்னு
    பின்னீருவாரு ...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...