--
எல்லா கூட்ட நெரிசல்களிலும்
எல்லா ஆண்களும்
"தன் முழங்கைகளை பெண்கள் மீது
யதார்த்தமாக ஸ்பரிசிப்பது எங்கனம்?"
என்று ஒரு புத்தகம் போடுமளவு
விஷயங்கள் வைத்திருந்தனர்...
--அதே யதார்த்தங்களுக்கு
பெண்களும் உடந்தை போல
பரஸ்பரம் ஸ்பரிசங்கள் நிகழ்ந்தன..!
கணவன் மார்களோடு வந்த சில பெண்கள்
முறைப்பதாக நடிக்க வேண்டியாயிற்று...
மனைவிகளோடு வந்த சில ஆண்கள்
மனைவிக்குப் பின்னாடி நடந்து
உரச வேண்டியாயிற்று...!!
தனித்து வந்த இரு பாலருக்கும்
உரசுவதென்பது
பதற்றமற்ற சுதந்திர நிகழ்வாயிருந்தது..!!
உடன்பாடோடு தனிமையில்
தழுவிக் கொள்வதற்கான
நிகரில்லை என்றாலுமே கூட
"யதார்த்தம் போன்ற உரசல்களுக்கு"
என்று ஓர் பிரத்யேகமான ரசாயனம்
எல்லோரிலும் சற்று
வீரியமாகவே வியாபித்துள்ளது தான்..
உணர்வுகள் நிமித்தமாய்
புலன்களுள் புடைத்தெழும் நெருப்பானது
வேள்வி ஜ்வாலைகளுக்கு
சற்றும் குறைந்ததன்று...!!!
சுந்தரவடிவேலு..
இந்த மறுக்க முடியாத நிலையினை ஒவ்வொருவரும் வெளிப்படையாய் அங்கீகரிக்க முடியாமைக்கு காரணம் என்ன?.
ReplyDeleteமனித மனதின் அந்தரங்கத்தினை வார்த்தை படுத்தியதில் இருந்த முயற்சி தலைப்பினை தேர்ந்தெடுத்ததில் இல்லையோ என்ற ஒரு எண்ணத்தினை இந்த கவிதையின் (?) தலைப்பு எனக்கு ஏற்படுத்துகிறது.ஒரு கலைஞனின்(கவிஞனின்) படைப்பதிகாரத்தில் நுழைவதை விரும்புவனில்லை நான்.எனினும் இந்த கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னை சுய விமர்சனம் செய்து கொள்வது நிச்சயம் என்பதனால் இது தாங்கியுள்ள விசயத்தை நேரடியாய் வெளிப்படுத்தும் வார்த்தை(கள்)தலைப்பாய் இருந்தால்(யதார்த்தம் போன்ற உரசல்) இன்னும் பலர் வந்து வாசிக்கக் கூடும்.
comment பகுதியில் வரும் word verification ஐ நீக்கினால் என்ன?
ReplyDeletethanks shekkaali sir for your kind review..
ReplyDelete