Saturday, October 15, 2011

கடவுளும் மனிதர்களும்...{நய்யாண்டி}

நம் நிலை குறித்து சந்தோஷப்படுகையிலும் சரி, வேதனைப் படுகையிலும் சரி.. சுலபத்தில் கடவுளைக் காரணம் காட்டி விடுகிற போக்கு நம்மில் பலருக்கும் உண்டு... சந்தோஷப் படுகையிலும் கூட சற்று மறந்து விடுவோம்.. ஏதேனும் சங்கடம் வருகிறபோது மாத்திரம் உடனடியாகக் குற்றவாளிக்கூண்டில் நாம் நிறுத்த முயல்வது கடவுளைத் தான்...
செல்லாத பத்து ரூபாய் கொடுத்து பேருந்தில் பயணிக்க முடியாது.., சினிமா பார்க்கமுடியாது, டீ கடையில் டீ குடிக்க முடியாது... இங்கெல்லாம் அந்தப் பத்து ரூபாய்க்கு இத்தனைப் பிரச்சினை இருக்கையில்.... பூசாரி காண்பிக்கிற தட்டில் போடவோ , கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தவோ சாமி எந்தத் தடையும் போடுவதில்லை... 


--இப்படியாக கடவுளாகப்பட்டவர், எது நாம் செய்தாலும் பொறுத்துப் போகிறவராக இருக்கிற காரணமாக ... நமது பிரச்சினைக்கும் இவரே காரணம் என்று அவர் மீது குண்டு போடுபவராக நாம் இருக்கிறோம்..

வாய் திறந்து பேசுபவராக கடவுள் இருக்கும் பட்சத்தில், நாம் செய்கிற அக்கிரமங்களுக்கு நின்று கொள்ளாமல் அரசன் போல அன்றே கொன்று விடுவாரென்றே அனுமானிக்கிறேன்..
என்னா கொடும சார் இது? என்பது போல, சினிமாவுக்கு செல்கையில் டிக்கட் கிடைக்கணும் என்று சாமியிடம் வேண்டினால் கூடத் தேவலாம்..., நான் போயி உட்கார்ந்த பிற்பாடே படம் போட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்...

எங்க ஊரு பஸ் இன்னும் போயிருக்கக் கூடாது சாமி... நான் படிச்ச கேள்வி பதிலே எக்சாம்ல வரணும் சாமி, இன்னைக்கு என்னோட ஆளு என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணினா, உனக்கு ஒரு ஈடு தேங்கா சாமி..

சாமி என்பவர் முன்னர் இவ்வுலகில் இருந்தாரா என்கிற ஆய்வுகள் புளித்துப்போனவை... இப்போதும் இருக்கிறார் என்கிற நம்பிக்கைகள்...
-- இருக்கிறார் .. ஆனால் எதுவும் பேசாமல், நாம் நம் இஷ்டத்துக்கு எதனை செய்தாலும் பேசாமல்... 

அப்படி நம் செய்கைகள் குறித்து உடனடி விமர்சனம் செய்கிற சாமி இப்போது இருக்குமேயானால் ... அது பேஜார் சாமி... 
சாமி கல்லாக இருக்கிற வரைக்கும் தப்பித்தார்...ஏதோ ஒரு நேரத்தில் கோபித்துக் குற்றவாளிக் கூண்டில் சாமியை நிறுத்தினாலும், இன்னொரு முறை ஜட்ஜ் ஆக உட்கார வைத்து கை கட்டி வாய் பொத்துகிற பக்குவமும் மனுஷப் பசங்க கிட்ட உண்டு... 

யுகம் யுகமா ஒவ்வொரு தினுசா இவுங்க வேண்டுறதை எல்லாம் சாமியும் பார்த்துக்கிட்டே தான் இருக்கார்...
ஸ்தபதி செதுக்கிய சிலை தான் என்றாலும், அதனையும் மறந்து .. அந்தக் கல்லையும் சாமியாக பாவித்துப் பார்க்கிற மனிதனின் பெருந்தன்மை, நிச்சயம் சாமிக்கே சிலிர்க்க வைக்கிற சமாச்சாரம்....

செதுக்கிய ஸ்தபதியே கோவில் திருவிழா கூட்டத்தில் வரிசையில் நின்று தான் சாமியைப் பார்த்தாக வேண்டும்... 
அட நீங்க வேற... அந்த சாமியே வந்து நடுவில் புகுந்தாலும், .. "யோவ்.. யார்யா அது.. இங்க நிக்கிறவங்க என்ன இளிச்சவா பசங்களா? நீங்க தான் ரொம்ப புத்திசாலியா?.. பின்னாடி வாயா லைன்ல..."   

2 comments:

  1. //அந்தக் கல்லையும் சாமியாக பாவித்துப் பார்க்கிற மனிதனின் பெருந்தன்மை, நிச்சயம் சாமிக்கே சிலிர்க்க வைக்கிற சமாச்சாரம்....//
    சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைக்கும் நல்ல நையாண்டி.

    ReplyDelete
  2. தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ... மறுபடி எஸ்.ரா வோ, பிற இலக்கிய கர்த்தாக்களோ இவ்விதம் சந்திப்புகள் நிகழ்த்தும் பட்சத்தில் தயை கூர்ந்து தெரியப்படுத்தவும்..நன்றி வெண்புரவி சார்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...