Monday, October 24, 2011

கனிமொழி...

நான் எந்தக் கட்சிக்காரனும் அல்ல... என் சிறு மனிதாபிமானம் மட்டுமே இதனை எழுதத் தூண்டிற்று...

மகளின் கைகள் கம்பித்திரி பற்றி இருக்க....
எரிகிற தீபத்தில் அதன் முனையைக் காண்பிக்க..
சற்று நேரத்தில் பூக்க இருக்கிற தீப்பொறி குறித்த
மகிழ்ச்சியைக் காட்டிலும், அதன் நிமித்தமாக --
அந்த மகளின் முகத்தில் பூக்கும் சந்தோஷத்
தீப்பொறியில் குதூகலித்த அந்த தீபாவளிகள்...!!

இன்று--
அதே மகள் கம்பிகளைக் கைப்பற்றி இருக்க..
துக்கத்தீப்பொறி தந்தையின் நெஞ்சுக்குள்...!!
கொப்பளித்துக் கசிந்த அந்தக் கண்ணீர்ச் சூட்டில்
கன்னங்கள் வெந்தன...!!


2 comments:

  1. லஞ்சம் என்ற கையூட்டை வாங்கும்போது மட்டும் மகள் பெயரில், தந்தையே சென்றிருக்கவேண்டியது இந்த திஹார். படட்டும் நாத்திக தீவாளி இல்லாமல்.

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...